MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mettur Dam: மேட்டூர் அணை பற்றிய நீங்கள் இதுவரை அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்...தொடக்கம் முதல் இன்று வரை..!

Mettur Dam: மேட்டூர் அணை பற்றிய நீங்கள் இதுவரை அறிந்திடாத சுவாரஸ்யமான தகவல்...தொடக்கம் முதல் இன்று வரை..!

Mettur Dam: தமிழகத்தின் மிகப்பெரிய அணையாக இருக்கும், மேட்டூர் அணை பற்றிய நீங்கள் இதுவரை அறிந்திடாத சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

2 Min read
Anija Kannan
Published : Jul 16 2022, 12:11 PM IST| Updated : Aug 05 2022, 07:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
mettur

mettur

மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால், மேட்டூர் அணை என்று அழைக்கப்படுகிறது. இது 84 வருடங்களுக்கு முன்பு ஸ்டென்லி என்பவரால் கட்டப்பட்டுள்ளதால்,  ஸ்டென்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணையில் இருந்து நீர் வந்து சேர்க்கிறது. ஒன்பது ஆண்டுகளாக வேலை நடைபெற்று வந்த நிலையில், இந்த அணை 1934ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

மேலும் படிக்க....Married: ஆடி மாதத்தில் ஏன் புதுமண தம்பதிகள் ஒன்று சேர கூடாது.! இதுக்கு பின்னால் இவ்வளவு பெரிய ரகசியம் இருக்கா?

24
mettur

mettur

மேட்டூர் அணையினால் விவசாயம் செழிப்பு:

மேட்டூர் அணையினால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நீர் பாசன வசதி பெறுகின்றது. விவசாயத்தின் மூலம் நெல் , கரும்பு ,கோதுமை உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.  இதனால் விவசாயம் செழித்து காணப்படுகிறது.
 மீனவர்களுக்கு இந்த அணையின் நடுவே உள்ள நீர்பிடிப்பு பகுதியில் மீன்கள் பிடித்து தங்கள் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேட்டூர் அணையின்  அதிகபட்ச உயரம் 214 அடி கொண்டது. இதன் நீர் தேக்கஅளவு 120 அடி உயரமாகும். அணையின் நீளம் 1700 மீ ஆகும். 171அடி அகலம் கொண்டது. அணையின் மொத்த கொள்ளவு 93.4 பில்லியன் கன அடி (2.64 கி மீ3) ஆகும். 

34
mettur

mettur

மேட்டூர் அணையின் வரலாறு:

ஆனால், ஒரு கால கட்டத்தில் இந்த மேட்டூர் அணை கட்டுவதற்கு கடும் எதிர்ப்புகள் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா..? ஆம் 1801ம் ஆண்டு காவிரியின் ஆற்றின் மீது மேட்டூரில் அணை கட்டுவதற்கு ஆங்கிலேயே கிழக்கிந்திய சபை திட்டமிட்டது.  ஆனால், மைசூர் அரசர்கள் காவிர் ஆற்றின் மீது மேட்டூர் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்காமல் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தனர்.  ஆனால் 1923 திருவாங்கூர் சமஸ்தனத்திற்குட்பட்டிருந்த திவான் பகதூர் சர்.சி.பி.ராமசாமி அய்யர் என்பவற்றின் முயற்சியால்  இவ்வணை  ஸ்டென்லி என்பவரின் கட்டுமான பணியில் கட்டபட்டது. இதனால் மேட்டூர் அணையின் கட்டுமானம் துவங்குவதற்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக காலம் தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க.....Aadi Month -Sun Transit: இன்று நிகழும் சூரியன் பெயர்ச்சியால்...இந்த ராசிகளுக்கு இன்னும் 30 நாட்கள் பொற்காலம்..

44
mettur

mettur

மேட்டூர் அணையின் தற்போதைய சூழல்:

 இந்த நிலையில், தற்போது கர்நாடகா மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளன.  கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் அதிகமாக வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியை தாண்டியுள்ளது. முன்னதாக, கடந்த  தினங்களுக்கு முன் நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக இருந்தது. இதையடுத்து தற்போது மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1லட்சத்து 17 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதே நிலை நீடித்தால் நாளைக்குள் மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க...Aadi Month: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஏன் இவ்வளவு முக்கியமானது? அம்மன் மாதத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி அறிக

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved