MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Interesting Facts: சோப்பு கலர் கலரா இருந்தாலும், நுரை மட்டும் ஏன் வெள்ளையா இருக்கு?

Interesting Facts: சோப்பு கலர் கலரா இருந்தாலும், நுரை மட்டும் ஏன் வெள்ளையா இருக்கு?

Why Soap Foam is White: நாம டெய்லி பயன்படுத்துற பொருட்கள்ள சோப்பு ரொம்ப முக்கியம். குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவனு விதவிதமா சோப் யூஸ் பண்றோம். ஆனா, சோப்பு என்ன கலர்ல இருந்தாலும், அதோட நுரை மட்டும் ஏன் வெள்ளையா வருது?

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 15 2026, 04:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Why Soap Foam is White
Image Credit : Pinterest

Why Soap Foam is White

நாம தினமும் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவனு பலவிதமான சோப்புகளை பயன்படுத்துறோம். சந்தூர் சோப் ஆரஞ்சு நிறத்திலும், டவ் சோப் வெள்ளை, நீல நிறத்திலும், சில சோப்புகள் கருப்பு நிறத்திலும் கூட இருக்கு.

இதையும் படியுங்கள் - Floor Cleaning: தரை பிசுபிசுன்னு இருக்கா? இந்த ஒரு பொருளை கலந்து துடைங்க, தரை கண்ணாடி போல ஜொலிக்கும்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
நீல நிற சோப்பு ஏன் நீல நிற நுரையை உருவாக்குவதில்லை?
Image Credit : Gemini AI

நீல நிற சோப்பு ஏன் நீல நிற நுரையை உருவாக்குவதில்லை?

சோப்போட கலர் முக்கியம் இல்ல, எந்த கலர் சோப் யூஸ் பண்ணாலும் நுரை வெள்ளையா தான் வரும். ஏன் இப்படின்னு யோசிச்சிருக்கீங்களா? டிடர்ஜென்ட் சோப் நீல நிறத்துல இருக்கும்போது, துணி துவைக்கிறப்ப நுரை ஏன் நீலமா வர்றதில்ல? உங்க மனசுல இப்போ இந்த கேள்வி வந்திருக்கும். வாங்க, அதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாம்.

இதையும் படியுங்கள் - Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?

Related Articles

Related image1
Interesting Facts: ஒயின் பாட்டில்கள் ஏன் 750 மிலி அளவிலும், அடர் பச்சை நிறத்திலும் இருக்கின்றன? இதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்ய காரணம் தெரியுமா?
Related image2
Broom Stick: துடைப்பத்தை உப்பு தண்ணியில ஊறவெச்சு பாருங்க.! பழைய துடைப்பத்தை புதுசாக்க ஒரு சிம்பிள் ட்ரிக்.!
37
அடிப்படை அறிவியல் என்ன?
Image Credit : AI Generated

அடிப்படை அறிவியல் என்ன?

உண்மையில, ஒரு பொருள் ஒளியோட எல்லா நிறங்களையும் தனக்குள்ள இழுத்துக்கும்போது அது கருப்பா தெரியும். அதே சமயம், ஒரு பொருள் ஒளியோட எல்லா நிறங்களையும் பிரதிபலிச்சா, அது வெள்ளையா தெரியும். இதுதான் அடிப்படை அறிவியல்.

இதையும் படியுங்கள் -Water Bottle: வாட்டர் பாட்டில் மூடி ஏன் வெவ்வேற கலர்ல இருக்குனு யோசிச்சிருக்கீங்களா?

47
அறிவியல் என்ன சொல்கிறது?
Image Credit : Asianet News

அறிவியல் என்ன சொல்கிறது?

சோப்பு நுரை வெள்ளையா தெரியுறதுக்கு காரணம், அது ஒளியை சிதறடிக்கிற விதம் தான். ஒரு பொருள் மேல ஒளி படும்போது, அது ஒளியை உள்ளிழுக்கலாம், வந்த திசையிலயே திருப்பி அனுப்பலாம், அல்லது எல்லா திசைகளிலும் சிதறடிக்கலாம். சோப்பு நுரைகள்ல இருக்கிற கோடிக்கணக்கான சின்ன சின்ன குமிழிகள், ஒளியோட எல்லா நிறங்களையும் எல்லா திசைகளிலும் சிதறடிக்குது. இதனாலதான் சோப்பு என்ன கலர்ல இருந்தாலும், நுரை மட்டும் வெள்ளையா தெரியுது.

இதையும் படியுங்கள் - Flight Fuel: விமானம் 2 மணி நேர பயணத்திற்கு எத்தனை லிட்டர் எரிபொருள் குடிக்கும் தெரியுமா? செலவு இத்தனை லட்சமா?

57
வெள்ளை நிறத்தின் தோற்றம்
Image Credit : Getty

வெள்ளை நிறத்தின் தோற்றம்

அனைத்து வண்ண அலைநீளங்களும் சமமான அளவில் சிதறடிக்கப்பட்டு மீண்டும் நம் கண்களை வந்தடைவதால், அந்த ஒளியை நம் மூளை வெள்ளை நிறமாகவே உணர்கிறது. கடல் அலை, பனி  மற்றும் மேகங்கள் வெள்ளையாகத் தெரிவதற்கும் இதே ஒளிச்சிதறல் தான் காரணம்.

உதாரணம்: ஒரு பெரிய பச்சை நிறக் கண்ணாடி பாட்டிலை உடைத்து மிகச் சிறிய துகள்களாக மாற்றினால், அந்தத் தூள் பச்சை நிறமாக இருக்காது, வெள்ளையாக தெரியும். அதே தத்துவம்தான் இங்கும் செயல்படுகிறது.

இதையும் படியுங்கள் - Home Cleaning: படுக்கை மெத்தையில் கெட்ட வாடையா? துவைக்காமலேயே துர்நாற்றத்தை நீக்க சூப்பர் டிப்ஸ்.!

67
மிக மெல்லிய சோப்புப் படலம்
Image Credit : Getty

மிக மெல்லிய சோப்புப் படலம்

சோப்பைப் பயன்படுத்தும் போது உருவாகும் நுரை, நிறைய காற்றுக்குமிழிகளின் தொகுப்பு . இந்த ஒவ்வொரு குமிழியும் மிக மிக மெல்லிய சோப்பு நீர் படலத்தால்ஆனவை. சோப்பில் கலந்திருக்கும் வண்ணம் இந்த மெல்லிய படலத்தில் பரவும் போது, அதன் அடர்த்தி மிக மிகக் குறைந்து, கிட்டத்தட்ட நிறமற்றதாக மாறிவிடுகிறது.

இதையும் படியுங்கள் -Interesting Facts: 3-பின் பிளக்கில் ஒரு பின் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? இது உயிரைக் காப்பாற்றும் செம இன்ஜினியரிங் ட்ரிக்.!

77
சாயத்தின் மிகக் குறைந்த செறிவு
Image Credit : Getty

சாயத்தின் மிகக் குறைந்த செறிவு

சோப்பு கட்டியாகஇருக்கும் போது, அதன் மூலக்கூறுகள் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டிருக்கும். இதனால் சாயம் அதிக செறிவோடு தெரிவதால் சோப்பு வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது. சோப்பைத் தேய்க்கும்போது, மிகக் குறைந்த அளவிலான சோப்புடன் அதிகப்படியான நீரும் காற்றும் கலக்கின்றன.குமிழிகளின் சுவர்கள் வெறும் சில நேனோமீட்டர் தடிமன் கொண்ட மிக மிக மெல்லிய நீர்மப் படலத்தால் ஆனவை. இந்த மெல்லிய பரப்பில் உள்ள சாயத்தின் அளவு மிக மிகக் குறைவு என்பதால், அது ஒளியை உறிஞ்சி தன் நிறத்தைக் காட்டுவதற்குப் போதுமானதாக இருப்பதில்லை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அறிவியல்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Floor Cleaning: தரை பிசுபிசுன்னு இருக்கா? இந்த ஒரு பொருளை கலந்து துடைங்க, தரை கண்ணாடி போல ஜொலிக்கும்.!
Recommended image2
Interesting Facts: ஒயின் பாட்டில்கள் ஏன் 750 மிலி அளவிலும், அடர் பச்சை நிறத்திலும் இருக்கின்றன? இதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்ய காரணம் தெரியுமா?
Recommended image3
Expensive Salt: தங்கம் விலையில் விற்கப்படும் உப்பு! ஒரு கிலோ வாங்கினா ஒரு பவுன் நகை வாங்கலாம்!
Related Stories
Recommended image1
Interesting Facts: ஒயின் பாட்டில்கள் ஏன் 750 மிலி அளவிலும், அடர் பச்சை நிறத்திலும் இருக்கின்றன? இதற்கு பின்னால் உள்ள சுவாரஸ்ய காரணம் தெரியுமா?
Recommended image2
Broom Stick: துடைப்பத்தை உப்பு தண்ணியில ஊறவெச்சு பாருங்க.! பழைய துடைப்பத்தை புதுசாக்க ஒரு சிம்பிள் ட்ரிக்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved