- Home
- Lifestyle
- இனி கேஸ் அடுப்பு தேவையே இல்ல; இண்டக்ஷன் vs இன்ஃப்ராரெட்: உங்கள் கிச்சனுக்கு எது சூப்பர் தெரியுமா?
இனி கேஸ் அடுப்பு தேவையே இல்ல; இண்டக்ஷன் vs இன்ஃப்ராரெட்: உங்கள் கிச்சனுக்கு எது சூப்பர் தெரியுமா?
Induction vs Infrared Cooktop Comparison Tamil Kitchen Guide: இண்டக்ஷன் மற்றும் இன்ஃப்ராரெட் அடுப்புகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன? மின்சார சேமிப்பு, சமையல் வேகம் மற்றும் பாத்திரங்களின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் எது சிறந்தது?

இண்டக்ஷன் அடுப்பு நன்மைகள், Induction cooktop benefits Tamil
Induction vs Infrared Cooktop Comparison Tamil Kitchen Guide: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்குப் பெருமளவு இறக்குமதியையே சார்ந்து இருப்பதால், இந்த விநியோகச் சங்கிலி பாதிப்பு உள்நாட்டிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது. இதன் விளைவாக, சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு மற்றும் சிலிண்டர் விலை உயர்வு குறித்த கவலை இல்லத்தரசிகளிடையே எழுந்துள்ளது. அத்துடன் சிலிண்டர் புக் செய்வதற்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, மக்கள் இப்போது எச்சரிக்கையுடன் இண்டக்ஷன் அடுப்புகளை நாடி வருகின்றனர்.
இன்ஃப்ராரெட் அடுப்பு பயன்கள், Infrared stove advantages
கடுமையான எரிவாயு பற்றாக்குறை காலங்களில் அவை பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இண்டக்ஷன் அடுப்புகளுடன், இன்ஃப்ரா ரெட் அடுப்புகளும் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை எப்படி அறிவது? எதை வாங்குவது சிறந்தது என்பதை இங்கே பார்ப்போம்.
Liver Health: கல்லீரல் ஆரோக்கியத்துக்கு இந்த 3 காய்கறிகள் ரொம்ப நல்லது!
இண்டக்ஷன் vs இன்ஃப்ராரெட் வித்தியாசம், Induction vs Infrared difference
இண்டக்ஷன் அடுப்புகளும், இன்ஃப்ராரெட் அடுப்புகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தோன்றும். ஆனால் அவற்றின் செயல்திறனில் பல வேறுபாடுகள் உள்ளன. இண்டக்ஷன் அடுப்பு என்பது மின்காந்தத் தூண்டல் (Electro magnetic Induction) முறையில் இயங்குகிறது. இதில் அடுப்பின் மேற்பரப்பு சூடாகாது; அதன் மீது வைக்கப்படும் காந்தத்தன்மை கொண்ட பாத்திரங்கள் மட்டுமே நேரடியாகச் சூடாகும். இதனால் சமையல் மிக விரைவாக முடிவதோடு, மின்சாரமும் மிச்சமாகும். இதற்கு பிரத்யேகமான 'இண்டக்ஷன் பேஸ்' கொண்ட ஸ்டீல் அல்லது இரும்பு பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த முடியும்.
Weight Loss Tea: இந்த டீயை குடிச்சா போதும்... ஒரே வாரத்தில் வெயிட் லாஸ் ஆகுமாம்!
சமையலறை உபகரணங்கள் 2026, Kitchen appliances guide 2026
மறுபுறம், இன்ஃப்ராரெட் அடுப்புகள் வெப்பச் சுருள் (Coil) மூலம் வெப்பத்தை வெளிப்படுத்துகின்றன. இதில் அடுப்பின் மேற்பரப்பு சிவப்பாக மாறி அதிக வெப்பத்தை உமிழும். இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இதில் மண் பானை, அலுமினியம், செம்பு, கண்ணாடி என எந்த வகையான பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். பழைய பாத்திரங்களை மாற்ற விரும்பாதவர்களுக்கு இதுவே சரியான தேர்வாகும். இருப்பினும், இண்டக்ஷனை விட இதில் மின்சாரச் செலவு சற்று கூடுதலாக இருக்கும். சந்தையில் பல பெரிய பிராண்டுகள் உள்ளன. தரமான பிராண்டுகளைத் தேர்வு செய்வதன் மூலம் எரி பொருள் தட்டுப்பாடு காலத்திலும் தடையின்றிச் சமைக்க முடியும்.
மின்சார சிக்கன அடுப்புகள், Energy efficient stoves Tamil
பொதுவாக, பொருளுக்கு ஓராண்டு உத்தரவாதமும், காயிலுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் உத்தரவாதமும் உள்ள மாடல்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. வாங்குவதற்கு முன், உங்கள் பகுதியில் அந்த நிறுவனத்திற்கு சேவை மையம் உள்ளதா எனச் சரி பார்க்கவும். மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பு மிக முக்கியம். இண்டக்ஷன் அடுப்புகளை வழக்கமான 5-6 ஆம்ப் சாக்கெட்டுகளில் அல்லாமல், 15-16 ஆம்ப் சாக்கெட்டுகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இல்லையெனில், கம்பிகள் எரிந்துவிடும் அபாயம் உள்ளது. அடுப்பை ஒருபோதும் உலோக மேஜையின் மீது வைக்கக்கூடாது. சமைத்து முடித்தவுடன் உடனடியாக நிறுத்த வேண்டாம். வெப்பம் குறைந்த பிறகு மட்டுமே, அடுப்பில் உள்ள குளிர்விக்கும் விசிறியை அணைக்க வேண்டும். அடுப்பின் மேற்பகுதி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். வீட்டில் குழந்தை இருந்தால் அவர்கள் கையில் படாமல் இருக்கும் இடங்களில் வைத்து சமைப்பது மிகவும் நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.