Weight Loss Tea: இந்த டீயை குடிச்சா போதும்... ஒரே வாரத்தில் வெயிட் லாஸ் ஆகுமாம்!
உடல் எடை அதிகரிப்பது ஒரு பெரிய பிரச்சனையாகிவிட்டது. நீங்களும் இந்த பிரச்சனையால் அவதிப்பட்டால், ஒரு ஸ்பெஷல் டீ குடிப்பதன் மூலம் எடையை குறைக்கலாம். அந்த டீயை எப்படி செய்வது, எப்படி எடை குறையும் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
16

Image Credit : Asianet News
உடல் எடை அதிகரிப்பு
இப்போதெல்லாம் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை உடல் எடை அதிகரிப்பதுதான். இது உங்கள் அழகை மட்டும் கெடுப்பதில்லை, கூடவே பல நோய்களையும் கொண்டு வருகிறது.
Add Asianetnews Tamil as a Preferred Source

26
Image Credit : Getty
டீ குடித்தே எடையை குறைக்கலாம்
எடையைக் குறைக்க மக்கள் ஜிம், டயட், விலை உயர்ந்த புரோட்டீன் ஷேக்ஸ் என ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்கள். ஆனால், ஒரு சிம்பிள் டீ குடித்தே எடையைக் குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆமாம், இது உண்மைதான்.
36
Image Credit : Getty
தேவையான இரண்டு பொருட்கள்:
இந்த டீ செய்ய, நீங்கள் கடையில் எதுவும் வாங்கத் தேவையில்லை. கிராம்பு மற்றும் சோம்பு ஆகிய இரண்டு மசாலாப் பொருட்கள் போதும். இந்த வீட்டு வைத்தியம் செரிமானத்தை மேம்படுத்தி, பசியைக் கட்டுப்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை வேகமாக எரிக்கிறது.
46
Image Credit : Getty
கொழுப்பை வேகமாக குறைக்கும்
கிராம்பு மற்றும் சோம்பு டீயை ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தினமும் ஒரு கப் குடித்தாலே, வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு குறைந்து, உடல் இலகுவாக உணர்வதாக பலர் கூறுகின்றனர். இது செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது.
56
Image Credit : stockPhoto
இதை செய்வது எப்படி என்று பார்ப்போம்:
இதை செய்வது ரொம்ப ஈஸி. 1 கப் தண்ணீர், 1/2 டீஸ்பூன் சோம்பு, 1-2 கிராம்பு, சுவைக்கு தேன் அல்லது எலுமிச்சை தேவை. தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, சோம்பு மற்றும் கிராம்பு சேர்க்கவும். 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு, அடுப்பை அணைத்து 2-3 நிமிடங்கள் மூடி வைக்கவும். இப்போது டீயை வடிகட்டி, ஆறிய பிறகு தேன் அல்லது எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாம்.
66
Image Credit : Getty
எப்போது, எவ்வளவு குடிக்க வேண்டும்?
சிறந்த பலன்களைப் பெற, காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இதைக் குடிக்கவும். ஒரு நாளைக்கு 1-2 கப் குடித்தால் போதும், அதற்கு மேல் வேண்டாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

