‘மோடி ஜி வாழ்க’ ... பிரதமருக்கு நேரு ஸ்டேடியத்தில் இளைஞர்கள் அளித்த ஸ்பெஷல் வரவேற்பு... வைரல் போட்டோஸ்...!
நேரு உள்விளையாட்டு அரங்கில் இளைஞர்கள் சிலர் அணிவகுத்து நின்று பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு வரவேற்பு அளித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். 4,486 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர். 3,640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை விமான நிலையம் முதல் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை பிரதமர் மோடிக்கு லட்சக்கணக்கான பாஜக, அதிமுக தொண்டர்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கார் மூலமாக நேரு உள்விளையாட்டு அரங்கம் சென்ற பிரதமருக்கு சாலையில் இருபுறத்திலும் மேள தாளங்கள் முழங்க, தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தடபுடலான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதற்கு முன்னதாக நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடியை வரவேற்று இளைஞர்கள் செய்த வித்தியாசமான காரியம் சோசியல் மீடியாவில் வைரலானது.
அண்ணன் எடப்பாடி வாழ்க, மோடி ஜி வாழ்க, அண்ணன் ஓபிஎஸ் வாழ்க என்ற வாசத்துடன் மஞ்சள் நிற டீ-சர்ட்டை அணிந்த படி அணிவகுத்து நின்ற போட்டோஸ் அதிக அளவில் பகிரப்பட்டது.
பிரதமரின் வருகையை தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிக கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.