Supermoon 2022: உங்களுக்கு சந்திரனின் நேரடி அருள் பெற வேண்டுமா? அப்படினா.. மறக்காமல் இன்று சந்திரனை பாருங்கள்
Supermoon 2022: இன்று ஆவணி மாதம் சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். ஆவணி மாத ஞாயிறன்று சந்திர தரிசனம் கண்டால், அவர் எப்படியான பலன்களைத் தருவார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.
Supermoon 2022
ஜோதிடத்தின் பார்வையில், சந்திரனுக்கு தனி இடம் உண்டு..வளர்பிறை சந்திரனை தரிசித்தால் கேட்ட வரம் நிச்சயம் கிடைக்கும். நவகிரகங்களில் வேகமாக பெயர்ச்சி ஆகக் கூடிய கிரகங்களில் சந்திரன் முதலிடத்தில் உள்ளது. எனவே, இன்று ஆவணி மாதம் சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். ஆவணி மாத ஞாயிறன்று சந்திர தரிசனம் கண்டால், அவர் எப்படியான பலன்களைத் தருவார் என்பதை இந்த பதிவின் மூலம் பார்ப்போம்.
Supermoon 2022
சந்திர தரிசனம் சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறை சந்திரன் அல்லது சந்திரதரிசனம் என்று அழைக்கிறார்கள்.
அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தல் செல்வம் பெருகும். தொழிலில் லாபம் கூடும். நீண்ட நாள் கஷ்டம் விலகும். புதிய ஒளி பிறக்கும்.
Supermoon 2022
சிவன் சூடிய பிறை சந்திரன்:
இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். எனவே மூன்றாம் பிறை தரிசனம் வெறும் சந்திர தரிசனம் அல்ல. சாட்சாத் பரமேஸ்வரனின் ஒரு பகுதியே நாம் தரிசிக்கும் பாக்கியம் பெறுகிறோம். எனவே, இந்த சந்திர தரிசனம்பார்க்கும் போதெல்லாம், சந்திரனை மனதில் நினைத்து ஜெபித்து வந்தால் மனம் அமைதி அடையும். அறிவு ஒளி பெற்றுத் தெளிந்த மனநிலையை அடையலாம். தொடர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் கண்டு வந்தால் எக்காலத்திலும் மன வியாதிகளோ, அறிவு மயக்க நிலையோ வராது.
Supermoon 2022
ஜோதிடத்தில் சந்திர தரிசனம்:
ஜாதகத்தில் சந்திரன்,கிரகண தோஷம், சந்திரனோடு சர்ப்பக் கிரகங்கள் உள்ளிட்ட சந்திரதோஷம் இருந்தால் அவர்கள் விரதம் இருந்து மாலை வேளையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்று, சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். மேலும், ஜாதகத்தில் சந்திரன் நீசம் அடைந்தவர்கள், சந்திரனுடன் ராகு, கேதுக்கள் இணைந்து தோஷம் அடைந்தவர்கள் இவர்களும் மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் தோஷங்கள் படிப்படியாக விலகும்.
Supermoon 2022
இந்த நாளில் சந்திரனை பார்ப்பது என்னென்னெ நன்மைகள் கிடைக்கும்?
1. உங்களின் வாழ்நாள் அதிகரிக்கும். ஞாபக சக்தி கூடும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். நீண்ட நாள் தடைபட்ட தொழில் விரக்தியடையும்..தொழிலில் லாபம் உண்டாகும்..மாணவர்கள் படிப்பில் படு ஜோராக வருவார்கள்..
2. அதுமட்டுமின்று, மனதில் உள்ளகஷ்டங்கள் மற்றும் குழப்பங்கள் விலகி மன நிம்மதி கிடைக்கும். குடும்பத்தில் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.
Supermoon 2022
3. மேலும், இந்த நாளில் சந்திரனை பார்ப்பது சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். எனவே, வாழ்வில் ஒளி பிறக்கும். திருமணம் தடை நீங்கும். கடன் தொல்லை தீரும். குறிப்பாக, கண் பார்வை கோளாறு உள்ளவர்கள் இன்று சந்திர தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.