MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அடிக்கடி பால் பொங்கி வழிந்து வேஸ்ட் ஆகுதா? இதை தடுக்க உதவும் சூப்பர் டிப்ஸ்!

அடிக்கடி பால் பொங்கி வழிந்து வேஸ்ட் ஆகுதா? இதை தடுக்க உதவும் சூப்பர் டிப்ஸ்!

தினமும் பால் காய்ச்சும் போது பொங்கி வழிவதை தடுக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Ramya s
Published : Sep 26 2024, 01:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
How to stop milk spilling

How to stop milk spilling

நம் அனைவரின் வீடுகளில் காலையில் காபி அல்லது டீ தயார் செய்வதற்கு பால் காய்ச்சுகிறோம். ஆனால் பால் காய்ச்சுவது சாதாரண விஷயம் தானே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பொங்கி வழியாமல் பால் காய்ச்சுவது என்பது ஒரு சவாலான விஷயம். இல்லத்தரசிகளுக்கு மட்டுமே அதில் உள்ள கஷ்டங்கள் புரியும். எனவே பால் காய்ச்சும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

நமது கவனம் சிறிது சிதறினால் கூட பால் பொங்கி வீணாகும். அடுப்பை குறைந்த தீயில் வைத்தாலும் சில நேரம் பாலை அடுப்பில் வைத்ததையே பலரும் மறந்துவிடுவார்கள். இதுபோன்ற சூழலில் பால் பொங்கி வழியாது என்றாலும், அதிக நேரம் அடுப்பில் இருந்தால் பால் சுண்டிவிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
How to stop milk spilling

How to stop milk spilling

காபி, டீக்காக பால் காய்ச்சுவது என்பது தினசரி வழக்கமாக இருந்தாலும் சிறு கவனக்குறைவு காரணமாக பால் பொங்குவதை தவிர்க்க முடியாது. இது ஏதேனும் ஒரு நாளில் நடந்தால் பரவாயில்லை. ஆனால் அடிக்கடி பாலை பொங்கவிடும் போதும் அது பலருக்கும் எரிச்சலையே ஏற்படுத்தும். பால் பொங்கி கீழே சிந்துவதை தவிர்க்க உதவும் சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

பெரிய பாத்திரத்தில் பாலை காய்ச்ச  தொடங்குங்கள். ஏனெனில் பலரும் சிறிய பாத்திரத்தில் பால் காய்ச்சுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பால் பொங்கி வழியும் போது அது பொங்கி அடுப்பில் வழியலாம். இதனால் பால் வீணாவதுடன், அடுப்பும் அழுக்காகிவிடும். எனவே பால் காய்ச்சும் போது எப்போதும் பெரிய பாத்திரத்தில் பால் காய்ச்சுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது பால் சூடாகும் போது விரிவடைய போதுமான இடத்தை வழங்குகிறது. பால் பொங்கி வர போதிய இடம் கிடைக்கும்.

35
How to stop milk spilling

How to stop milk spilling

பாலை காய்ச்சும் போதும் பால் காய்ச்சும் பாத்திரத்தில் கிடைமட்டமாக ஒரு மரக்கரண்டியை வைக்கலாம். இதனால் பால் காய்ந்த உடன் பால் பொங்கி கீழே வழியாது. இப்படி ஒரு மரக்கரண்டியை வைக்கும் போது பால் பொங்கி வரும் அதை கீழே விழ விடாது. இந்த ஹேக் பால் பொங்கி கீழே சிந்தாமல் தடுக்கும்.

 

45
How to stop milk spilling

How to stop milk spilling

பாலை கொதிக்க வைக்கும் போது, ​​ஒரு கிளாஸ் தண்ணீரை உங்களுடன் வைத்திருக்க வேண்டும். பாலை காய்ச்சிய உடனேயே, பால் பொங்கி வரும் போது சிறிது தண்ணீர் தெளிக்கவும். இப்படி செய்வதால் பால் கீழே சிந்தாது. 

பால் கொதிக்கும் முன், பால் பாத்திரத்தில் நெய் அல்லது வெண்ணெய் தடவவும். பாத்திரத்தில் நெய் தடவினால் பாத்திரம் மிருதுவாகும். இதன் காரணமாக பால் கொதித்த பிறகும் வெளியேறாமல் பானையில் இருக்கும்.

55
How to stop milk spilling

How to stop milk spilling

பால் காய்ச்சும் போது அது பொங்கி கீழே சிந்தாமல் இருக்க உப்பு உங்களுக்கு உதவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்ப்பதன் மூலம் பால் பொங்கி கீழே சிந்துவதை தவிர்க்கலாம். பால் பொங்கி கீழே வழிவதை தடுப்பதற்கான மற்றொரு சிறந்த வழி கிளறிவிடுவது. சீரான இடைவெளியில் பாலை கிளறிக் கொண்டே இருக்கும் போது, வெப்பம் சீராக பரவுகிறது. இது பால் பொங்கி கீழே சிந்துவதை தடுக்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைப் பின்பற்றி பாலை கொதிக்க வைக்கலாம். நீங்கள் பால் காய்ச்சும் போது பாலும் பொங்கி கீழே வழியாது, உங்கள் சமையலறையும் சுத்தமாக இருக்கும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved