MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மீன் பொரித்த எண்ணெய்யில் 'இத்தனை' விஷயம் பண்ணலாமா? 

மீன் பொரித்த எண்ணெய்யில் 'இத்தனை' விஷயம் பண்ணலாமா? 

Reuse Frying Oil : மீன் பொரித்த எண்ணெயை வீணடிக்காமல் எப்படி பயனுள்ள முறையில் உபயோகிக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 12 2024, 08:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Reuse Frying Oil In Tamil

Reuse Frying Oil In Tamil

மீன் புரதச்சத்து மிகுந்த சத்தான உணவு. பலருக்கும் விருப்பமான உணவுகளிலும் இது முக்கியமானது. தண்ணீர் தொட்டி முதல் கடல் வரைக்கும் பல நீர்நிலைகளில் வாழும் மீன்கள் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன. குழம்பில் போடும் மீன்கள் தான் உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் பலருக்கும் பொரித்த மீன்கள் தான் பிடித்தமானதாக இருக்கும். 

மசாலாவை தடவி மீன்களை அதில் ஊறவிட்டு கடாயில் எண்ணெய் கொதிக்கும்போது அதில் போட்டு பொரித்து எடுத்தால் சுவை அபாரமாக இருக்கும். ஆனால் சாப்பிட்டு முடித்த பிறகுதான் மீன் பொரித்த எண்ணெயை என்ன செய்வதென்று தெரியாமல் சிலர் குழம்பிவிடுவார்கள். சிலர் அந்த எண்ணெயை வடித்த சூடான சோற்றில் ஊற்றி சாப்பிடுவார்கள். ஆனால் அவ்வளவு எண்ணெயையும் சாப்பிடுவது உடலுக்கு ஏற்றதல்ல.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Reuse Frying Oil In Tamil

Reuse Frying Oil In Tamil

அதற்காக மீன் பொரித்த எண்ணெயை தூக்கி எறிவதும் நல்ல முடிவல்ல. அதை எப்படி பயனுள்ள முறையில் பயன்படுத்தலாம் என்று இங்கு காண்போம். இந்த எண்ணெய்யை வடிகட்டி பயன்படுத்துங்கள். மீன் எண்ணெய்யில் உள்ள வாசனையை குறைத்து கொள்ள பச்சை கற்பூரம் கலந்து கொள்வது நன்றாக இருக்கும். 

பூச்சி தொந்தரவு குறைய! 

இரவில் பூச்சி தொந்தரவு அதிகமாகும் சமயத்தில் மீன் எண்ணெய் நமக்கு கை கொடுக்கும்.  மீன் பொரித்த எண்ணெயை எடுத்து ஒரு காகிதத்தில் ஊற்றினால் நன்கு ஊறிவிடும். பூச்சிகள் அதிகம் காணப்படும் இடத்தில் இந்த காகிதத்தை தொங்கவிட்டால் பூச்சிகள் கவனம் அதன் மீது திரும்பும். 

இதையும் படிங்க:  ஜாக்கிரதை.. ஒருமுறை சமைத்த எண்ணெய்யை அடிக்கடி பயன்படுத்தினால் இந்த பாதிப்பு ஏற்படலாம்..

34
Reuse Frying Oil In Tamil

Reuse Frying Oil In Tamil

வெளிச்சம்: 

வீட்டில் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய்க்கு பதிலாக மீன் பொரித்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். அதற்கு முன்னதாக மீன் பொரித்த எண்ணெய்யை வடிகட்டி பயன்படுத்துங்கள். 

பொருள்களை பொலிவூட்ட! 

வீட்டில் இருக்கும் மேசை, நாற்காலி போன்றவை மங்கிய தோற்றத்தில் இருக்கும். அதனை பொலிவூட்ட இந்த எண்ணெய்யை பாலிஷ் போல பயன்படுத்தலாம். தோலில் செய்த செருப்பு, தோற்பை, பெல்ட் போன்றவற்றை பாலிஷ் செய்ய மீன் எண்ணெயை உபயோகம் செய்யலாம். பச்சை கற்பூரம் சேர்ப்பதால் மீன் மணம் குறையும். 

இதையும் படிங்க:  இதய நோயாளிகளுக்கு சிறந்த சமையல் எண்ணெய்கள் இவை தான்!

44
Reuse Frying Oil In Tamil

Reuse Frying Oil In Tamil

உயவு பொருள்: 

பொருள்களில் உராய்வு ஏற்படுவதை தடுக்க கிரீஸ் போன்ற உயவு பொருளை பயன்படுத்தலாம். வீட்டில் உள்ள கதவில் தேவையில்லாத சத்தம் வர காரணம் அதில் உள்ள உராய்வு தான். வீட்டிலிருக்கும் கதவு, கேட் போன்றவற்றில் சத்தம் எழாமல் இருக்க மீன் பொரித்த எண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை வாகனங்களுக்கும் உயவுப்பொருளாக உபயோகிக்கலாம். சைக்கிள்  சக்கரங்கள், சங்கிலியில் போட்டால் உராய்வு பிரச்சனை வராது. 

உணவுக்கும் பயன்படுத்தலாம்! 

வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு கொடுக்கும் உணவில் மீன் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தி வைக்கலாம். அந்த வாசனையை விரும்பி விலங்குகள் நன்றாக சாப்பிடும். 

மீன் பொரித்த எண்ணெய் மட்டுமின்றி, பஜ்ஜி, வடை போன்றவை செய்த மற்ற எண்ணெய்யையும் இதை போல மீண்டும் பயன்படுத்தலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved