MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Wet Currency: தண்ணீரில் நனைந்த ரூபாய் நோட்டை நொடியில் புதுசு போல மாற்றலாம்! இதோ சில எளிய வழிகள்!

Wet Currency: தண்ணீரில் நனைந்த ரூபாய் நோட்டை நொடியில் புதுசு போல மாற்றலாம்! இதோ சில எளிய வழிகள்!

Wet Currency: உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் நனைந்து விட்டதா? கவலை வேண்டாம். நீரில் நனைந்த ரூபாய் நோட்டுகளை புத்தம் புதுசு போல மாற்றும் சில எளிய வழிகளை பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 11 2026, 07:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தண்ணீரில் நனைந்த ரூபாய் நோட்டை புதுசு போல மாற்றலாம்
Image Credit : x

தண்ணீரில் நனைந்த ரூபாய் நோட்டை புதுசு போல மாற்றலாம்

நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக இருந்தாலும் பாக்கெட்டிலோ அல்லது பையிலோ இருக்கும் பணம் தண்ணீரில் நனைந்துவிடும். இவ்வாறு நனைந்ததும், நோட்டு வீணாகிவிட்டதே என்று பலரும் பதற்றமடைவார்கள். ஆனால், கவலைப்பட வேண்டியதில்லை. சில எளிய வீட்டு முறைகளைப் பயன்படுத்தியே நனைந்த நோட்டுகளைப் பத்திரமாகக் காயவைக்க முடியும். அதுமட்டுமன்றி, வங்கியிலிருந்து அப்பொழுதுதான் எடுத்த புதிய நோட்டு போன்று மொறுமொறுவென்று மாற்றவும் முடியும். அது எவ்வாறு என்று இங்குப் பார்க்கலாம்.

இதையும் படிங்க:Ironing Hacks: என்ன தேய்த்தாலும் துணிகளில் சுருக்கம் போகலையா? நேரத்தை மிச்சமாக்கும் 3 சிம்பிள் டிரிக்ஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சீலிங் ஃபேன் காற்றில் காயவையுங்கள்
Image Credit : AI

சீலிங் ஃபேன் காற்றில் காயவையுங்கள்

ரூபாய் நோட்டுகள் நனைந்த உடனே, அவற்றை மடிக்கவோ, பிரிக்கவோ முயற்சி செய்யாதீர்கள். நல்ல காற்றோட்டமான இடத்தில் வையுங்கள். வீட்டில் சீலிங் ஃபேனை வேகமாக ஓடவிட்டு, நோட்டுகளை ஒவ்வொன்றாகப் பிரித்துத் தரையில் பரப்புங்கள். ஃபேன் காற்றில் நோட்டிலிருக்கும் ஈரம் சீக்கிரமாக காய்ந்து விடும்.

வலுக்கட்டாயமாகப் பிரிக்காதீர்கள்

நோட்டுகள் மிகவும் அதிகமாக நனைந்திருந்தால், ஒன்றுடன் ஒன்று நன்றாக ஒட்டிக்கொள்ளும். அந்த நேரத்தில் நீங்கள் அவசரப்பட்டு அவற்றை இழுத்துப் பிரித்தால், நோட்டு கிழிந்துபோக வாய்ப்பு அதிகம். அதனால், அதை அப்படியே ஃபேன் காற்றில் விட்டுவிடுங்கள். ஈரம் குறையக் குறைய, அதுவே சுலபமாகப் பிரிந்து வந்துவிடும்.

இதையும் படிங்க: Chennai Real Estate 2026: சென்னையில் வீடு வாங்க போறீங்களா? உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற டாப் 8 இடங்கள் இதோ!

Related Articles

Related image1
முடிவுக்கு வரும் 10, 20 ரூபாய் தாள்களின் அத்தியாயம்.. கலர் கலராக அறிமுகமாகும் பிளாஸ்டிக் நோட்டுகள்..
Related image2
Old Notes Sale : பழைய 50, 100 ரூபாய் நோட்டுகள் கோடிகளில் விலை போகுதா? உண்மை என்ன?
34
தோசைக்கல்லைப் பயன்படுத்தலாம்
Image Credit : ai

தோசைக்கல்லைப் பயன்படுத்தலாம்

நோட்டுகளைச் சீக்கிரமாகக் காயவைக்க, வீட்டிலிருக்கும் தோசைக்கல்லைப் பயன்படுத்தலாம். அடுப்பை ஆன் செய்து, தோசைக்கல்லை லேசாகச் சூடுபடுத்துங்கள். கல் மிதமான சூடானதும், அடுப்பை அணைத்துவிடுங்கள். அதன்பிறகு, அந்தச் சூடான கல்லின் மேல் நனைந்த நோட்டை வையுங்கள். ஒரு பக்கம் காய்ந்ததும், அடுத்த பக்கம் திருப்பிப் போடுங்கள். ஒரு விஷயம் நினைவில் இருக்கட்டும், தோசைக்கல் மிகவும் சூடாக இருக்கக்கூடாது. இல்லையென்றால் நோட்டு எரிந்துபோய்விடும்.

அயர்ன் பாக்ஸ் வைத்து புதிது போன்று மாற்றலாம்

நனைந்துபோனதால் நோட்டுகள் சுருங்கிப்போயிருந்தால், அதைச் சரிசெய்ய அயர்ன் பாக்ஸ் (Iron Box) ஒரு சிறந்த வழி. முதலில் ஒரு பருத்தி (காட்டன்) துணியை விரித்து, அதற்கு மேல் நனைந்த நோட்டுகளை வையுங்கள். அயர்ன் பாக்ஸைக் 'குறைந்த வெப்பநிலையில்' வைத்து, நோட்டுகள் மேல் மெதுவாக அழுத்தம் கொடுங்கள். இப்படிச் செய்தால், நோட்டுகள் சீக்கிரமாகக்ாய்வது மட்டுமன்றி, வங்கியிலிருந்து வாங்கிய புதிய நோட்டு போன்று மொறுமொறுவென்று ஆகிவிடும். இந்த எளிய வழிகளைப் பின்பற்றி, மழையில் நனைந்த பணத்தை எந்தச் சேதமும் இல்லாமல் பழைய நிலைக்குக் கொண்டுவரலாம்.

44
உறிஞ்சும் தாள்கள்
Image Credit : AI

உறிஞ்சும் தாள்கள்

நோட்டுகள் மிகவும் ஈரமாக இருக்கும்போது, அவற்றை உடனடியாக வெப்பப்படுத்தாமல், இரண்டு டிஷ்யூ பேப்பர்கள் அல்லது வெள்ளை தாள்களுக்கு இடையே வைத்து லேசாக அழுத்தவும். இது நோட்டிலுள்ள அதிகப்படியான தண்ணீரை நொடியில் உறிஞ்சிவிடும். செய்தித்தாள் பயன்படுத்தினால் சில சமயங்களில் அதன் மை நோட்டில் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது, எனவே வெள்ளை காகிதம் அல்லது டிஷ்யூ சிறந்தது.

அரிசி அல்லது சிலிகா ஜெல்

போன் நனைந்தால் அரிசியில் வைப்பது போல, ஈரமான நோட்டுகளை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் உலர் அரிசி அல்லது சிலிகா ஜெல் பாக்கெட்டுகளுடன் சில மணி நேரம் மூடி வைக்கலாம். இது நோட்டில் உள்ள ஈரப்பதத்தை இயல்பாகவே உறிஞ்சிவிடும்.

ஹேர் டிரையர்

அயர்ன் பாக்ஸ் அல்லது தோசைக்கல்லுக்குப் பதிலாக ஹேர் டிரையர் பயன்படுத்தலாம். ஆனால், அதை மிதமான அல்லது கூல் மோடில் வைத்து, நோட்டிலிருந்து சற்று தொலைவில் பிடித்துக் காட்ட வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ironing Hacks: என்ன தேய்த்தாலும் துணிகளில் சுருக்கம் போகலையா? நேரத்தை மிச்சமாக்கும் 3 சிம்பிள் டிரிக்ஸ்!
Recommended image2
Gold Bracelet: குறைவான எடையில் அசத்தலான பிரேஸ்லெட் டிசைன்கள்..!
Recommended image3
Curly Hair: சுருள் முடியை பராமரிப்பது கஷ்டமா? இந்த சிம்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Related Stories
Recommended image1
முடிவுக்கு வரும் 10, 20 ரூபாய் தாள்களின் அத்தியாயம்.. கலர் கலராக அறிமுகமாகும் பிளாஸ்டிக் நோட்டுகள்..
Recommended image2
Old Notes Sale : பழைய 50, 100 ரூபாய் நோட்டுகள் கோடிகளில் விலை போகுதா? உண்மை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved