Shirt Collar : ஷர்ட் காலர் கறையை ஈஸியா நீக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Shirt Collar : வெள்ளை ஷர்ட் காலர் கரையை நீக்க கஷ்டமா? கிச்சனில் உள்ள பொருட்களை வைத்தே அதை எப்படிப் புதுசு போல் மாற்றலாம் என்று பார்க்கலாம் வாங்க! கண்டிப்பா உங்களுக்கு பயனுள்ளாதாக இருக்கும்.

கடினமான காலர் கறைகளை நீக்கும் வழி!
துணிகளில் படியும் விடாப்பிடியான கறைகளை, குறிப்பாக ஷர்ட் காலரில் சேரும் அழுக்குகளை எளிதில் நீக்குவது கடினமான பணியாகும். கழுத்துடன் தொடர்ந்து உரசுவதால், வியர்வை, உடல் சுரக்கும் எண்ணெய் மற்றும் காற்றுடன் வரும் தூசி ஆகியவை சேர்ந்து காலரில் ஆழமான கறைகளை உருவாக்குகின்றன. இந்த கடினமான கறைகளை அகற்றுவதற்காக அதிகப்படியாகத் தேய்த்துக் கழுவினால், துணியின் நூலிழைகள் பலவீனம் அடைந்து விரைவில் வீணாகிவிடும். கவலை வேண்டாம், இதற்காகக் கடைகளில் விற்கும் விலையுயர்ந்த ரசாயனப் பொருட்களைத்தான் நாட வேண்டும் என்ற அவசியமில்லை. நம் வீட்டின் சமையலறையிலும் அலமாரிகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய சில எளிய இயற்கை வீட்டு வைத்தியப் பொருட்களைப் பயன்படுத்தியே, துணிக்கு எந்தவித சேதாரமும் இன்றி இந்தத் பிடிவாதமான கறைகளை மிக எளிமையாகவும் விரைவாகவும் முற்றிலுமாக நீக்க முடியும்.
இதையும் படிங்க : Carrot : கேரட் சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதா? உண்மையைத் தெரிஞ்சுக்கோங்க!
1. பேக்கிங் சோடா - எலுமிச்சை சாறு
காலர் கறைகளை நீக்க பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலவை ஒரு சூப்பர் வழி.
செய்முறை: 2 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவில், சிறிது எலுமிச்சை சாறு கலந்து திக்கான பேஸ்ட் ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை காலரில் கறை உள்ள இடத்தில் தடவி, பழைய டூத் பிரஷ்ஷால் மெதுவாகத் தேய்க்கவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விட்டு, பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இதையும் படிங்க : Brinjal Recipe : கத்தரிக்காய் சமைக்கும் போது 2 ஸ்பூன் பால் ஊத்துனா என்ன ஆகும் தெரியுமா? இதுதான் செஃப் சீக்ரெட்!
2. வெள்ளை வினிகர் – டிடர்ஜென்ட்
காலரில் உள்ள பழைய கருப்பு அல்லது மஞ்சள் கறைகளை நீக்க இது ஒரு ஈஸியான வழி.
செய்முறை: காலர் மீது சிறிதளவு லிக்விட் டிடர்ஜென்ட்டை ஊற்றி, அதன் மேல் 1-2 டேபிள்ஸ்பூன் வெள்ளை வினிகரை ஊற்றவும். 10-15 நிமிடங்கள் கழித்து பிரஷ்ஷால் லேசாகத் தேய்த்தால், கறைகள் சுலபமாக மறைந்துவிடும்.
இதையும் படிங்க : EPF : மாதம் ரூ.10,750 EPF-ல் போட்டால் 25 ஆண்டுகளில் ரூ.1 கோடி! ஆனால் இந்த ஒரு தவறு செய்தால் பெரிய இழப்பு!
3. பாத்திரம் கழுவும் லிக்விட் - ஷாம்பு
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு டிஷ் வாஷ் லிக்விட் மற்றும் அதே அளவு ஷாம்பு இரண்டையும் கலக்கவும். இதை நேரடியாக ஷர்ட் காலரில் தடவவும். 10 நிமிடங்கள் கழித்து, பிரஷ்ஷால் தேய்த்து தண்ணீரில் கழுவினால் போதும். இது எண்ணெய் பிசுக்கு போன்ற கறைகளை நன்றாக நீக்கும்.
இதையும் படிங்க : Health Insurance : ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்ட மருத்துவ காப்பீடு! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
சுத்தம் செய்யும்போது இந்த விஷயங்கள் நினைவிருக்கட்டும்
சுத்தம் செய்யும்போது இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள் காலரை சுத்தம் செய்யும்போது சில விஷயங்களில் கவனமாக இல்லாவிட்டால், துணி சீக்கிரம் வீணாகிவிடும்.
- காலரை பிரஷ்ஷால் மிகவும் கடினமாகத் தேய்க்காதீர்கள். இது துணியின் இழைகளை சேதப்படுத்தும்.
- கலர் ஷர்ட்களில் எலுமிச்சை சாறு அல்லது பிளீச் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள் (நிறம் போக வாய்ப்புள்ளது).
- எந்தவொரு கலவையையும் பயன்படுத்துவதற்கு முன்பு, துணியின் ஒரு மூலையில் பேட்ச் டெஸ்ட் செய்து பாருங்கள். துணியின் நிறம் மங்கினால், அதைப் பயன்படுத்த வேண்டாம்.
இதையும் படிங்க : Suitcase : வெளியூர் கிளம்பும்போது சூட்கேஸ் சக்கரத்தில் டேப் ஒட்டுங்க! இதுக்கு பின்னாடி இப்படியொரு காரணமா?
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

