உங்க குழந்தை ஸ்கூல் யூனிபார்ம்ல இங்க் கறை போகவேமாட்டேங்குதா? இப்படி துவைச்சு பாருங்க
உங்கள் குழந்தையின் ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் விடாப்பிடியான இங்க் கறையை சுலபமாக நீக்குவது எப்படி என்று இங்கு காணலாம்.

Removing Ink from School Uniforms
பொதுவாக ஸ்கூலுக்கு போகும் குழந்தைகளின் கைவிரல்கள், ஸ்கூல் யூனிபார்ம்களில் இங்க் கறை இருக்கும். குறிப்பாக சில பள்ளிகளில் வெள்ளை நிற யூனிபார்ம் இருக்கும் அப்படி இருந்தால் ரொம்பவே கஷ்டம் தான். ஆனாலும் அதையும் சுலபமாக நீக்கிவிடலாம். இந்த பதிவில் குழந்தைகளின் ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் விடாப்பிடியான இங்க் கறையை சுலபமாக நீக்குவது எப்படி என்று காணலாம்.
எலுமிச்சை மற்றும் உப்பு
ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் இங்க் கறையை முற்றிலும் நீக்க லெமன் மற்றும் உப்பு உதவும். இதற்கு லெமன் சாறில் சிறிதளவு உப்பு கலந்து அதை இங்க் கறை மீது தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு லேசாக தேய்த்து துவைக்க வேண்டும் இப்படி செய்தால் இங்க் கறை முற்றிலும் நீங்கிவிடும். எலுமிச்சை சாறில் இயற்கையாகவே ப்ளீச்சிங் பண்பு உள்ளதால் இது கறையை சுலபமாக சுத்தம் செய்து விடும்.
பேக்கிங் சோடா
பொதுவாக கறைகளை நீக்க பேக்கிங் சோடாவை நாம் பயன்படுத்துவோம். அதுபோல ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் இங்க் கறையை போக்க பேக்கிங் சோடா உதவும். இதற்கு பேக்கிங் சோடாவை இங்க கறைகள் மீது தடவி விட்டு 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு சாஃப்ட்டான பிரஷ்ஷால் தேய்த்து துவைத்து பாருங்கள். யூனிஃபார்மல் இருக்கும் இங்க் கறை காணாமல் போகும்.
வெள்ளை வினிகர்
வெள்ளை வினிகரில் அமலத்தன்மை உள்ளதால் அது கரைகளை நீக்க பயன்படுத்தலாம். எனவே ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் இங்க் கறையை போக்க 2 ஸ்பூன் வெள்ளை வினிகரை 2 ஸ்பூன் தண்ணீருடன் கலந்து அதை கரை மீது நன்றாக தேய்க்க வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்து அலசினால் போதும். கறைகள் இருந்த இடம் தெரியாமல் போகும்.
டூத் பேஸ்ட்
டூத் பேஸ்ட் கற்களை மட்டுமல்ல கறைகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் இங்க் கறையை நீக்குவதற்கும் டூத் பேஸ்ட் உதவும். இதற்கு கறைகள் உள்ள இடத்தில் சிறிதளவு டூத் பேஸ்ட்டை தடவி, 15 நிமிடங்கள் கழித்து பிரஷ்ஷால் தேய்த்து நீரில் அலசி பாருங்கள். கறைகள் நீங்கியிருக்கும்.
நெயில் பாலிஷ் ரிமூவர்
நகங்களில் இருக்கும் நெயில் பாலிஷ் நீங்குவதற்கு எப்படி நெல் பாலிஷ் ரிமூவர் உதவுகிறதோ, அதே மாதிரி தான் இங்க் கறையும் நீக்கிவிடும். இதற்கு ஒரு காட்டன் பஞ்சில் நெயில் பாலிஷ் ரிமூவரை ஊற்றி அதை கறைகள் மீது அப்ளை செய்ய வேண்டும். ஏனெனில் இதில் அல்கஹால் உள்ளது.
சானிடைசர்
குழந்தைகளின் ஸ்கூல் யூனிபார்மில் இருக்கும் இங்க் கறையை போக்க சானிடைசரை நேரடியாக கறை மீது ஊற்றி நன்றாக தேய்த்து விடுங்கள். பிறகு ஒரு பிரஷ் கொண்டு அந்த இடத்தை மெதுவாக தேய்த்து தண்ணீரில் அலசுங்கள். கறைகள் நீங்கிவிடும்.