Hair Care : 30 வயதிலேயே இளநரை வருகிறதா? வீட்டிலேயே இதற்கு தீர்வு இருக்கிறது!
Hair Care : உங்கள் முடி சீக்கிரம் நரைத்துவிட்டதா? ஹேர் டை வேலை செய்யவில்லையா? அப்படியென்றால் இந்த வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்துங்கள். முடிக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத ஹேர் கேர் குறிப்புகள் இதோ!

இளம் வயதிலேயே நரை முடி
வயதாகும்போது முடி நரைப்பது என்பது முன்பு இயல்பான ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது இளம் வயதிலேயே முடி நரைக்கத் தொடங்கியுள்ளது. மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் இளைஞர்களிடையே இந்தப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்காகப் பலர் ஹேர் டை (hair dye) பயன்படுத்துகின்றனர். ஆனால், ரசாயனம் கலந்த சாயங்களை அடிக்கடி பயன்படுத்துவதால், முடி வறண்டு, பலவீனமடைந்து, முடி கொட்டும் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது.
இதையும் படிங்க : Dream Astrology : உயிருடன் இருப்பவர்கள் இறப்பது போல் கனவா? அதன் அர்த்தம் என்ன தெரியுமா?
மாங்கொட்டை ஹேர் மாஸ்க்
முதலில் மாங்கொட்டையின் வெளிப்புற ஓட்டை நீக்கி, உள்ளே இருக்கும் பருப்பைச் சுத்தமாகக் கழுவி, வெயிலில் நன்றாகக் காய வைக்கவும். பிறகு, அதை நைசாகப் பொடி செய்து, காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க : Astrology Secret : உங்க கையில இந்த 5 ரேகை இருக்கா? நீங்க கோடீஸ்வரர் ஆவதை எவராலும் தடுக்க முடியாது!
ஹேர் மாஸ்க் தயாரிக்கும் முறை
1 ஸ்பூன் மாங்கொட்டைப் பொடி, 10-15 கிராம்பு, 1 டீஸ்பூன் தேயிலைத் தூள் (Tea powder), 2 ஸ்பூன் தயிர், தேவையான அளவு தண்ணீர். கிராம்பு மற்றும் தேயிலையைச் சிறிது வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதனுடன் மாங்கொட்டைப் பொடி மற்றும் தயிர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். பின்னர், இதைச் சில மணிநேரங்கள் அல்லது இரவு முழுவதும் அப்படியே மூடி வைக்கவும்.
இதையும் படிங்க : Egg Storage : முட்டையை ஃபிரிட்ஜில் வைக்கிறீர்களா? இந்த தவறை இனியும் செய்யாதீர்கள்!
கூந்தலுக்குப் பயன்படுத்தும் முறை
மறுநாள் இந்த பேஸ்ட்டை முடியின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை சமமாகத் தடவுங்கள். சுமார் ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். அதன் பிறகு, மைல்டான (mild) ஷாம்பு பயன்படுத்தி முடியைக் கழுவுங்கள். தேவைப்பட்டால் கண்டிஷனர் பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க : Mobile Phone : இரவு தூங்கும்போது செல்போனை தலையணைக்கு அருகில் வைக்கிறீர்களா?
எத்தனை முறை பயன்படுத்தலாம்?
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். எந்தவொரு வீட்டு வைத்தியத்தையும் பயன்படுத்துவதற்கு முன்பு, பேட்ச் டெஸ்ட் (patch test) செய்வது முக்கியம். அரிப்பு, எரிச்சல் அல்லது ஒவ்வாமை (allergy) ஏற்பட்டால் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். ஏற்கனவே உச்சந்தலையில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

