Hair Business : கோடிக்கணக்குல விலை போகும் சிக்கு முடி! இதுதெரியாம முடியை கொடுக்காதீங்க!
Hair Business : நாம தலை சீவும்போது உதிர்ற முடியை சேத்து வெச்சு, தெருவுல பாத்திரம் குடுக்க வர்றவங்களுக்கு கொடுப்போம். ஆனா, அவங்க அந்த முடியை வெச்சு என்ன பண்றாங்கனு யோசிச்சிருக்கீங்களா? இந்த முடிக்குப் பின்னால் பல ஆயிரம் கோடி பிசினஸ் இருக்கு!

சிக்கு முடி வியாபாரம்
தெருக்களில் பெண்கள் சிலர் 'சிக்கு முடி இருந்தா கொடுங்க'னு கேட்டு வருவாங்க. பதிலுக்கு பாத்திரங்கள் தருவாங்க. நாமளும் 3-4 மாசம் சேத்து வெச்ச முடியை கொடுத்துடுவோம். ஆனா, இந்த முடிக்கு வெளிநாடுகளில் செம டிமாண்ட் இருக்கு. இந்தியப் பெண்களின் முடி நீளமாகவும், கருமையாகவும், ரசாயனப் பூச்சு இல்லாமலும் இருப்பதால், சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகள் இதை விரும்பி வாங்குறாங்க. திருமலை (TTD) போன்ற கோயில்ல தலைமுடி ஏலம் மூலமாவே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் வருமானம் வருது.
8 இன்ச் நீளம்
தெருவில் வாங்கும் முடியை அப்படியே வெளிநாட்டுக்கு அனுப்ப மாட்டாங்க. இதுக்குப் பின்னாடி ஒரு பெரிய புராசஸ் இருக்கு. இந்த முடியை சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள ஃபேக்டரிகளுக்கு அனுப்புவாங்க. அங்கே, ஸ்பெஷல் ஷாம்பூ போட்டு முடியை நல்லா சுத்தம் செய்வாங்க. பிறகு, ரசாயனக் கரைசலில் ஊறவெச்சு, கிருமிகளை நீக்குவாங்க. அடுத்து, நவீன மெஷின்கள் மூலமா சிக்கல் எடுத்து, முடியை நேராக்கி, நீளத்துக்கு ஏத்த மாதிரி தரம் பிரிப்பாங்க. விக் (wig) தயாரிக்கவும், முடி மாற்று அறுவை சிகிச்சைக்கும் (Hair Transplantation) இந்த முடியை பயன்படுத்துறாங்க. முக்கியமா, 8 இன்ச் நீளமுள்ள முடிக்கு அதிக விலை கொடுப்பாங்க.
Honey Secret : தேன் தடவினால் முடி நரைக்காது, ஆரோக்கியமாகும்! தெரியுமா உங்களுக்கு?
கிலோவுக்கு எவ்வளவு?
இந்த சிக்கல் முடி வியாபாரத்தில், முடியின் நீளம், தரத்தைப் பொறுத்து விலை மாறும். நல்ல தரமான முடிக்கு அதிக பணம் கிடைக்கும். தரம் குறைவான முடிக்கு கிலோவுக்கு ரூ. 10,000 முதல் ரூ. 12,000 வரை கொடுப்பாங்க. நடுத்தரமான முடிக்கு கிலோவுக்கு ரூ. 25,000 முதல் ரூ. 30,000 வரை விலை கிடைக்கும். அதே சமயம், நல்ல நீளமான, தரமான முடிக்கு மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ. 50,000-க்கு மேல விலை போகும். இதனால்தான், சிலர் தெருத்தெருவாக அலைந்து முடியைச் சேகரிக்கிறாங்க.
Hair Dye Facts : முடிக்கு டை அடிப்பதால் என்னென்ன ஆபத்து வரும்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

