- Home
- Lifestyle
- Peerkangai thogayal: நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பீர்க்கங்காய் துவையல்...இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க...
Peerkangai thogayal: நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பீர்க்கங்காய் துவையல்...இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க...
Peerkangai thogayal: நாக்கில் எச்சில் ஊற வைக்கும் பீர்க்கங்காய் துவையல் எப்படி செய்து அசத்துவது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Peerkangai Thovayal:
நீங்கள் இதுவரை தேங்காய் துவையில், எள்ளு துவையல், கடலை துவையல் உள்ளிட்ட புகழ்பெற்ற துவையல் வகைகளை நீங்கள் இதுவரை ருசித்து பார்த்தது உண்டு. ஆனால், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற துவையல்களில் ஒன்றான பீர்க்கங்காய் துவையல், ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ள உணவு பொருளாகும். பீர்க்கங்காயில் கூட்டு சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு கூட பீர்க்கங்காய் சட்னி, பீர்க்கங்காய் துவையில் இப்படி ஒருமுறை செய்து பாருங்க..
Peerkangai Thovayal:
தேவையான பொருள்கள்:
பீர்க்கங்காய் – 1
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 10
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல்– 4 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை – தேவையான அளவு.
Peerkangai Thovayal:
செய்முறை விளக்கம்:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து 10 நிமிடம் வதக்கி கொள்ளவும். பின்னர் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
பீர்க்கங்காய் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கலக்கவும். இரண்டு கலவையும் சூடு ஆற வைத்த பின்னர் மிக்சியில் தேவையான தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளளவும். அதனுடன் கடுகு கருவேப்பிலை தாளித்து விட்டால் பத்தே நிமிடத்தில் சுவையான பீர்க்கங்காய் துவையல் தயார். இதனை சூடான சாதத்துடன் கலந்து சூடான சாதம் அல்லது தோசை, இட்லியுடன் பரிமாறலாம்.