MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நாக்கில் எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி வறுவல்..தெருவே மணக்க, கணவரின் பாராட்டு கிடைக்க இப்படி செய்து கொடுங்க

நாக்கில் எச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி வறுவல்..தெருவே மணக்க, கணவரின் பாராட்டு கிடைக்க இப்படி செய்து கொடுங்க

Nattu Kozhi Varuval in tamil: தெருவே மணக்கும் சுவையான நாட்டுக்கோழி வறுவல் எப்படி செய்து அசத்துவது..என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 23 2022, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nattu Kozhi Varuval in tamil:

Nattu Kozhi Varuval in tamil:

தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமாக இருக்கும் நல்லாம்பட்டி நாட்டுக்கோழி வறுவல் எப்படி செய்வது. தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் – 4 ஸ்பூன் 

வர மிளகாய் – 10

கருவேப்பிலை – 2 கொத்து

சின்ன வெங்காயம் – 250 கிராம்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

மேலும் படிக்க...பூண்டு தோலில் இவ்வளவு நன்மைகளா? இது தெரிந்தால் இனி நீங்கள் பூண்டு தோலை..தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..

25
Nattu Kozhi Varuval in tamil:

Nattu Kozhi Varuval in tamil:

தக்காளி - 2

உப்பு - தேவையான அளவு 

வரமல்லி – 2 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

மிளகு – 1/2 ஸ்பூன்

பட்டை – 2 துண்டு

கிராம்பு – 2

சோம்பு – 1/2

மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்

35

செய்முறை விளக்கம்:

1. முதலில் 1 கிலோ நாட்டுக்கோழியை வாங்கி கல் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் 250 கிராம் அளவு சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.  இப்போது நாட்டுக் கோழி வறுவலை செய்ய தொடங்கலாம்.

45
Nattu Kozhi Varuval in tamil:

Nattu Kozhi Varuval in tamil:

2. அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ள வேண்டும். அதில் நல்லெண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து,  சோம்பு சேர்த்து வதக்க வேண்டும். 

3. பின்னர், அதனுடன் கருவேப்பிலை, வர மிளகாய், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள். வெங்காயம் வதங்கி வந்தவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி பழம் சேர்த்து தேவையான அளவு உப்பு, போட்டு நன்றாக வதக்க வேண்டும். 

மேலும் படிக்க...பூண்டு தோலில் இவ்வளவு நன்மைகளா? இது தெரிந்தால் இனி நீங்கள் பூண்டு தோலை..தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..

55
Nattu Kozhi Varuval in tamil:

Nattu Kozhi Varuval in tamil:

4. அதன் பின்பு சுத்தம் செய்து வைத்திருக்கும் நாட்டுக்கோழியை கடாயில் போட்டு எண்ணெயில் இரண்டு முறை கலந்து விட்டு தனி மிளகாய்த்தூள் போட்டு, தண்ணீர் 1/2 லிட்டர் ஊற்றி மிதமான தீயில் வைத்து 25 லிருந்து 30 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். 

5. குழம்பு நன்றாக கொதித்து கோழி வெந்து அப்படியே செமி கிரேவியாக எண்ணெய்ப் பிரிந்து நமக்கு வரும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.அத்துடன் கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், சிவையான நாட்டுக்கோழி வறுவல் தயார்.

மேலும் படிக்க...பூண்டு தோலில் இவ்வளவு நன்மைகளா? இது தெரிந்தால் இனி நீங்கள் பூண்டு தோலை..தூக்கி குப்பையில் போட மாட்டீர்கள்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved