MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kumkumam making : வீட்டிலேயே குங்குமம் செய்வது எப்படி? மஞ்சள் தூளில் இதை மட்டும் சேர்த்தால் போதும்!

Kumkumam making : வீட்டிலேயே குங்குமம் செய்வது எப்படி? மஞ்சள் தூளில் இதை மட்டும் சேர்த்தால் போதும்!

Kumkum making: கடையில் வாங்கும் குங்குமத்திற்கு பதிலாக வீட்டிலேயே மஞ்சளை வைத்து பாரம்பரிய முறையில் குங்குமம் தயாரிக்கலாம். மஞ்சள், எலுமிச்சை, சுண்ணாம்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும் முறைகள், நிறம் மாற்றத்தின் காரணம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 26 2026, 06:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வீட்டிலேயே குங்குமம் செய்வது எப்படி?
Image Credit : pinterest

வீட்டிலேயே குங்குமம் செய்வது எப்படி?

கோயில் வழிபாடு முதல் வீட்டு பூஜை வரை, நெற்றியில் வைக்கப்படும் குங்குமத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. இந்திய பாரம்பரியத்தில் முக்கியமான ஆன்மிகப் பொருளாகக் கருதப்படுகிறது. திருமணம், பூஜை, கோயில் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.

கடைகளில் பல வகையான குங்குமங்கள் கிடைத்தாலும், வீட்டிலேயே எளிய முறையில் குங்குமம் தயாரிக்கலாம் என்பது பலருக்கும் தெரியாது. குறிப்பாக மஞ்சள் தூளை அடிப்படையாக வைத்து பாரம்பரியமாக சில முறைகளில் குங்குமம் தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே குங்குமம் தயாரிக்க விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முறைகள் என்னென்ன? தகவல்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாரம்பரியமாக குங்குமம் தயாரிப்பில் மஞ்சள் முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவு, கலக்கும் முறை, உலர்த்தும் முறை ஆகியவை நிறத்தையும் தன்மையையும் மாற்றக்கூடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மஞ்சளில்  தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து குங்குமம் தயாரிப்பது
Image Credit : pinterest

மஞ்சளில் தயிர், எலுமிச்சைச் சாறு சேர்த்து குங்குமம் தயாரிப்பது

மஞ்சள் தூளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு தயிர் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றை சேர்க்கவும்.

கலவை மிகவும் ஈரமாக இல்லாமல், கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். இதை சுத்தமான தட்டில் மெல்லியதாகப் பரப்பி நன்றாக உலர்த்தவும். உலர்ந்த பிறகு மிக்சியில் அரைத்துக் காற்று போகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

36
மஞ்சளில் சுண்ணாம்பு, எனுமிச்சை சாறு  சேர்த்து குங்குமம் தயாரிப்பது
Image Credit : pinterest

மஞ்சளில் சுண்ணாம்பு, எனுமிச்சை சாறு சேர்த்து குங்குமம் தயாரிப்பது

சிறிய கிண்ணத்தில் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிறிய சிட்டிகை சுண்ணாம்பை மட்டும் சேர்க்கவும். இரண்டையும் நன்றாகக் கலந்து, பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் அல்லது எனுமிச்சை சாறு தெளித்து பிசையவும்.

கலவை நன்றாக கலந்து வந்ததும், அதன் நிறம் மஞ்சளிலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாறத் தொடங்கும். இந்தக் கலவையை நன்றாக உலர்த்தி, ஈரப்பதம் இல்லாத நிலையில் சிறிய காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கலாம்.

மஞ்சளில் உள்ள curcumin என்ற நிறமி அமில-கார தன்மைக்கு ஏற்ப நிறம் மாறக்கூடியது. சுண்ணாம்பு காரத்தன்மை கொண்டிருப்பதால், மஞ்சளுடன் கலக்கும்போது மஞ்சள் நிறம் சிவப்பு நிறத்துக்கு மாறக்கூடும்.

46
கவனத்தில் கொள்ள வேண்டியவை
Image Credit : pinterest

கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • சுண்ணாம்பு அதிகமாகப் பயன்படுத்துவது சருமத்திற்கு எரிச்சல், வறட்சி அல்லது தீக்காயம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதிக அளவு சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது.
  • கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் சுண்ணாம்பை பயன்படுத்தக் கூடாது.
  • வீட்டில் தயாரிக்கும் குங்குமத்தை நெற்றியில் பயன்படுத்துவதற்கு முன் சிறிய பகுதியில் சோதித்து பார்ப்பது பாதுகாப்பானது.
  • கண்கள், உதடுகள் அல்லது காயம் உள்ள பகுதிகளில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அரிப்பு, எரிச்சல் அல்லது சிவத்தல் ஏற்பட்டால் உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
56
மஞ்சளில் சோடா உப்பு சேர்த்து குங்குமம் தயாரிப்பது
Image Credit : pinterest

மஞ்சளில் சோடா உப்பு சேர்த்து குங்குமம் தயாரிப்பது

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிறிய சிட்டிகை சோடா உப்பை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து பிசைந்து, கலவை நன்றாக ஒன்றாகும் வரை கலந்து கொள்ள வேண்டும். அப்போது மஞ்சள் தூளின் நிறம் மாறி செம்மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திற்கு மாறத் தொடங்கும்.

இந்தக் கலவையை ஒரு சுத்தமான தட்டில் பரப்பி நன்றாக உலர்த்திக் கொள்ளுங்கள். முழுமையாக உலர்ந்த பிறகு, கட்டிகள் இருந்தால் அவற்றை நன்றாகப் பொடியாக்கி, காற்றுப்புகாத சுத்தமான டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

66
குங்கும வாசனைக்கு
Image Credit : pinterest

குங்கும வாசனைக்கு

குங்குமத்திற்கு மென்மையான தன்மையும் இனிய மணமும் வேண்டும் என்றால், தயாரிக்கும் முறைக்கு ஏற்ப சிறிதளவு வெண்ணெய் மற்றும் வாசனைத் திரவியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

கலவை தயாரான பிறகு, தேவையான அளவு வெண்ணெயைச் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளலாம். இது குங்குமப் பொடியின் தன்மையை மென்மையாக்க உதவும். அதேபோல், விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த அளவு வாசனைத் திரவியத்தை சேர்த்து கலந்து கொள்ளலாம்.

பின்னர் கலவையை நன்றாக உலர்த்தி, கட்டிகள் இருந்தால் பொடியாக்கி, சுத்தமான காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதனால் வீட்டிலேயே தயாரிக்கும் குங்குமத்திற்கு விரும்பிய மணமும் தன்மையும் கிடைக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Baby Food Chart: 1 வயசு குழந்தைக்கு இதெல்லாம் கொடுக்கிறீங்களா? தெரியாமல் கூட இந்த தவறை பண்ணாதீங்க!
Recommended image2
Chicken vs Mutton: உடலுக்கு அதிக வலிமை தருவது சிக்கனா, மட்டனா? தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை
Recommended image3
32, 43, 55 இன்ச்... உங்க வீட்டுக்கு எந்த டிவி கரெக்ட்? ஏமாறாம வாங்க இந்த ஒரு விஷயத்தை கவனிங்க!
Related Stories
Recommended image1
Teeth Whitening: மஞ்சள் கறை படிந்த பற்களை வெள்ளையாக்க சூப்பர் டிப்ஸ்! வீட்டிலேயே பல்பொடி செய்யலாம்?
Recommended image2
தினமும் மஞ்சள் டீ குடிப்பதால் கிடைக்கும் 7 அற்புத நன்மைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved