வெறும் 10 நிமிடம் இருந்தால் போதும்..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மெஹந்தி லிக்விட், தயார் செய்யலாம்..!
Home made mehandi tamil: வெறும் 10 நிமிடம் இருந்தால் போதும்..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மெஹந்தி கோன், தயார் செய்யலாம்..அது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்
பெண்கள் தங்களுடைய அழகிற்கு அழகு சேர்க்க, கைகளில் மருதாணி வைத்து கொள்வது உண்டு. வீட்டில் சுப நிகழ்ச்சிகள், பொங்கல் போன்ற அனைத்து விதமான பண்டிகை நாள்கள் ஆரம்பித்தாலே ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் கைகளில் மருதாணி போடுவதற்கு ஆர்வமாக இருப்பார்கள். கைகளில் மருதாணி வைக்க வேண்டும் என்றால், இதற்காக முன்பெல்லாம் மருதாணி இலையைப் பறித்து அரைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், இன்றைய பிஸியான நேரத்தில், ரெடிமேட் மெஹந்தி கடைகளில் கிடைக்கிறது அதை வாங்கி வைத்துக் கொள்கிறோம்.
ஆனால், இவை உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது கிடையாது, மேலும், இரண்டு நாட்களில் அழிந்து போய் விடும். எனவே, எளிமையான முறையில் மருதாணி லிகிவிட் எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருள்:
சர்க்கரை – 2 டீஸ்பூன்
டீத்தூள் – 2டீஸ்பூன்
சோம்பு – 2 டீஸ்பூன்
செய்முறை விளக்கம்:
நீங்கள் நீண்ட நாள் உபயோகிக்காத ஒரு பழைய பாத்திரத்தை எடுத்துக் அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பாத்திரத்தின் உள்ளே பொருந்தும் படி ஒரு பழைய சிறிய கிண்ணத்தை வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் எடுத்து வைத்த சோம்பு, சர்க்கரை, டீ தூள், ஒன்றாக கலந்து கிண்ணத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ளே போட்டு விடுங்கள்.
இப்போது அடுப்பின் மேல் இருக்கும் இந்த பாத்திரத்தை ஒரு தட்டு வைத்து மூடி விட்டு, இதன் மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதை பத்து நிமிடம் வரை வைத்து விடுங்கள். இதில் உள்ள நீராவி மட்டும் நாம் நடுவில் வைத்திருக்கும் அந்த கிண்ணத்தில் இறங்கி இருக்கும்.
இப்போது கிண்ணத்தில் இறங்கி இருக்கும் அந்த சாறில் இருந்து இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவிற்கு எடுத்து வைத்தாலே போதும் கைகள் சிவந்து போய் விடும். வெறும் பத்து நிமிடம் செலவு செய்தால் வீட்டிலே அருமையான மெஹந்தி செய்து கொள்ளலாம். இப்போது நமக்கு தேவையான மெஹந்தி லிக்விட் தயார். இருக்கும் மீதியை பிரிஜ்ஜில் சேகரித்து கொள்ளவும்.