வெறும் 10 நிமிடங்களில் குக்கரில் மணக்க மணக்க மணல் போல நெய் வீட்டிலேயே தயாரிக்கலாம்! எப்படி தெரியுமா?
பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட நெய்யை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். குக்கரை பயன்படுத்தி வெறும் 10 நிமிடங்களில் தண்ணீர், பாலாடை மற்றும் பேக்கிங் சோடா மூலம் சுவையான நெய்யை தயாரிக்கலாம்.
Ghee
பழங்காலத்திலிருந்தே இந்திய உணவுகளின் ஒரு பகுதியாக நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதன்மையாக நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள். வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் டி போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
Ghee
இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, நெய்யில் ப்யூட்ரிக் அமிலம் உள்ளது, இது ஒரு குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலமாகும், இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. நெய்யை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, நினைவாற்றல் அதிகரிப்பது, உடல் எடை குறைப்பு போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
Ghee
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட நெய்யை வீட்டிலேயே தயாரிக்கலாம். நீங்கள் நினைப்பது போல் அதற்கு நேரமோ அல்லது வேலையோ தேவையில்லை. ஆம். குக்கரில் வெறும் 10 நிமிடங்களிலேயே நெய் தயாரிக்க முடியும். எப்படி தெரியுமா?
தேவையான பொருட்கள்:
தண்ணீர்
சேமிக்கப்பட்ட பாலாடை
சமையல் சோடா
Ghee
செய்முறை:
நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பாலாடையை ஒரு குக்கரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும்.
பின்னர் குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது குக்கரை திறந்தால் நெய் உருவாகி இருப்பதைக் காணலாம். இப்போது குக்கரில் சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்து மிதமான தீயில் வேக விடவும்.
தொடர்ந்து சில நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருந்தால், உங்கள் குக்கரில் நெய் உருவாவதைக் பார்க்க முடியும்..
பின்னர் வடிகட்டினால் அவ்வளவு வீட்டிலேயே எளிதாக தயாரிக்கப்பட்ட தூய்மையான நெய் தயார்.