- Home
- Lifestyle
- குழந்தை பிறந்த தாய்மார்களின் உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்படினா..! இது பெண்களுக்கு தேவையான ஸ்பெஷல் டிப்ஸ்..
குழந்தை பிறந்த தாய்மார்களின் உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்படினா..! இது பெண்களுக்கு தேவையான ஸ்பெஷல் டிப்ஸ்..
Weight Loss Tips: குழந்தை பேறினால் பெண்களின் உடலில் பல்வேறு மாறுதல்கள் நடக்கின்றன. உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை ஏற்படுதல் பெரும்பான்மையான பெண்கள் சந்தித்தும் பிரச்சனை ஆகும்.

பிரசவத்தின் போது வயிற்றில் ஏற்பட்ட தொய்வினை சரி செய்ய, வயிற்று தசைகளை பலப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். குழந்தை பிறந்த ஆறு வாரம் ஆன பிறகு லேசான நடைப்பயிற்சியில் இருந்து, உடற்பயிற்சிகளை தொடங்கலாம் என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உடல் எடை அதிகரிப்பது இன்றைய உலக மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் எடை அதிகரிக்க நாம் உட்கொள்ளும் உணவும், நமது வாழ்க்கை முறையும் முக்கிய காரணிகளாக அமைகின்றன. குறிப்பாக எண்ணெ பொருட்கள், உடல் பருமனை அதிகரித்து, உடலில் பல நோய்கள் ஏற்பட காரணமாகின்றன. இது உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
குறிப்பாக, பெண்கள் திருணத்திற்கு பிறகு குண்டாக மாறுகிறார்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. இதனை தவிர்த்து, பெண்கள் தாய்மை அடைந்த பிறகு அதன் அளவு அதிகரிக்கிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை ஏற்படுதல் பெரும்பான்மையான பெண்கள் சந்தித்தும் பிரச்சனை ஆகும்.
பிரசவத்தின் போது வயிற்றில் ஏற்பட்ட தொய்வினை சரி செய்ய, வயிற்று தசைகளை பலப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். குழந்தை பிறந்த ஆறு வாரம் ஆன பிறகு லேசான நடைப்பயிற்சியில் இருந்து, உடற்பயிற்சிகளை தொடங்கலாம் என மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை தவிர்த்து, உடல் எடையை குறைக்க மிக எளிய வழியும் உள்ளது. அவை என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு தாய்மார்கள், காலை சிற்றுண்டியில் ஓட்ஸ், மீல், பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள். இவை குறைந்த கலோரி கொண்ட உணவாகும். இதனால் உங்கள் வயிறு நிரம்பும், உங்கள் தொப்பையும் குறையும்.
அதேபோன்று மதிய உணவில் சிறிது சாதம், புரதம் நிறைந்த முட்டை, பருப்பு மற்றும் பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும். மதிய உணவை உட்கொண்ட பிறகு, கண்டிப்பாக மோர் அருந்தவும். இந்த வழிகளில் உடலுக்கு அதிக புரதம் கிடைக்கும்.
உங்கள் இரவு உணவில் காய்கறிகளின் சாலட், பழங்களை உட்கொள்ளலாம். இரவில் உட்கொள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஏற்றது. இதில் மாவுச்சத்து, நார்ச்சத்தும் அதிகமாக உள்ளது. மேலும் கலோரிகள் குறைவாக உள்ளன. இது ஜீரணிக்க எளிதானது மற்றும் கொழுப்பைக் குறைக்கும்.