மழைக்காலம் கம்மிங் சூன்.. அதில் நனையாமல் வாக்கிங் செல்லும் நன்மைகளை எப்படி பெறலாம்? சில டிப்ஸ்!
எதிர்வரும் மழைக்காலத்திலும் நம் நடை பயிற்சியின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை வீட்டில் இருந்தே எப்படி பெறுவது?
உடற்பயிற்சி செய்வதற்கு மிகவும் உகந்த காலமான வெயில் காலம் தற்போது முடிவுக்கு வந்து, மழைக்காலம் ஆரம்பமாக துவங்கி உள்ளது. இனி அன்றாடம் நமது உடற்பயிற்சிகளையும், நடை பயிற்சிகளையும் எப்படி செய்யப் போகிறோம் என்று திக்குமுக்காடி நிற்கும் பலருக்கு இந்த பதிவு மிகப்பெரிய அளவில் உதவும்.
ட்ரெட்மில் பயன்படுத்துவது மிகவும் நல்லது, மழையில் இருந்து விடுபட்டு வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்ய அது ஒரு சிறந்த சாதனம். ஆனால் இன்று பல வீடுகளில் ட்ரெட்மில்கள் இருந்தாலும், அதை துணி காயப்போட மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். அவற்றை எல்லாம் எடுத்து வேறு இடத்தில் காய போட்டுவிட்டு, ட்ரெட்மில்லை ஓடுவதற்கு பயன்படுத்தினால் நிச்சயம் அது பயன் தரும்.
தினமும் உடலுறவுகொள்வது நல்லதா? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?
படிக்கட்டுகளை தினமும் ஏறி, இறங்குவது ஒரு நல்ல உடற்பயிற்சி, நம் வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ உள்ள படிக்கட்டுகளில் ஒரு சில முறைகள் ஏறி, இறங்குவது நமக்கு மிகப்பெரிய உடற்பயிற்சியாக இருக்கும் மழை காலங்களிலும் இது பெரிய அளவில் நமக்கு உபயோகம் தரும்
நண்பர்களுடன் இணைந்து வாக்கிங் செல்வது, நமது வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்கள் சிலர் ஒன்றாக இணைந்து அரட்டை அடித்துக் கொண்டே, நமக்கு பிடித்தமான பாடல்களை கேட்டுக் கொண்டே நடைப்பயிற்சி செய்வது பெரிய அளவில் நமக்கு உதவி தரும். இந்த மழை நேரங்களில் நம்மால் பெரிய அளவில் வெளியே செல்ல முடியவில்லை என்றாலும் வீட்டுக்குள்ளேயே நடக்கும் இந்த நடைபயிற்சி நமக்கு ஒரு பெரிய அருமருந்தாக இருக்கும்.
இருப்பதிலேயே மிக சிறந்த உடற்பயிற்சி இதுதான் என்று கூறலாம், நம் வீட்டை நாமே சுத்தம் செய்வது. வாரம் ஒரு முறையாவது நமக்கு கிடைக்கும் ஒரு நல்ல ஓய்வு நாளில், நமது வீட்டை முற்றிலுமாக சுத்தம் செய்வது, நம் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்வது நம் உடலுக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும், வீடும் அழகாகும்.
சாதாரண காய்ச்சலா? மலேரியா, டெங்கு, டைபாய்டா? எப்படி கண்டறிவது?