தினமும் உடலுறவுகொள்வது நல்லதா? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?
தினமும் உடலுறவுகொள்வது நல்லதா அதில் உள்ள நன்மை தீமைகள் என்னென்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தினமும் உடலுறவு கொள்வது நல்லது தான், அது ஒரு நாளைக்கு ஓரிரு முறைகளாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு வாரத்திற்கு ஓரிரு முறைகளாக இருந்தாலும் சரி, அது முழுக்க முழுக்க உங்களையும், உங்கள் துணையையும் சார்ந்தது என்று தான் கூற வேண்டும். உங்களுடைய துணைக்கு அடிக்கடி உறவு கொள்வது பிடித்திருந்தால், உங்களுக்கும் அது பிடித்திருந்தால் நிச்சயம் அது ஒரு நல்ல உறவாக இருக்கும். அப்படி இல்லாமல் ஒன்று கூடும் இருவரில் ஒருவருக்கு அதில் பெரிய அளவில் விருப்பம் இல்லை என்றால் நிச்சயம் அது ஆபத்தில் தான் போய் முடியும்.
ஏன் இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது நல்லது? இத்தனை நன்மைகள் இருக்கா?
உடலுறவு கொள்வதினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
நிச்சயம் உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தி இதனால் அதிகரிக்கும்.
உங்கள் ரத்த அழுத்தம் குறையும்.
பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தம் குறையும்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.
தூக்கம் நன்றாக வரும்.
மனதில் இருக்கும் பாரங்கள் பெரிய அளவில் குறையும்.
ப்ரோஸ்டேட் வகை புற்று நோய்களை இது குறைக்கும்.
அதீத உடல் உறவுகளால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?
பாலியல் ரீதியான நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
திட்டமிடப்படாத கர்பம் ஏற்படுவதற்குமான வாய்ப்புகள் இருக்கிறது.
சிறுநீரக பிரச்சனை ஏற்படுவதற்கும் இது பெரிய அளவில் வழிவகுக்கிறது.
அரிப்பு, வலி மற்றும் மரபுத்தன்மைக்கும் இது சில சமயங்களில் வழி வகுக்கிறது.
இதை சாப்பிட்டால் அதிக பலன் உண்டு.. உடலுறவுக்கு முன் சாப்பிட வேண்டிய Top 3 உணவுகள் என்னென்ன? ஏன்?