MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mint Growing Tips: கொத்து கொத்தா புதினா வளரணுமா? தண்டுகளை இப்படி நட்டு பாருங்க!

Mint Growing Tips: கொத்து கொத்தா புதினா வளரணுமா? தண்டுகளை இப்படி நட்டு பாருங்க!

Mint Growing Tips: கடையில் வாங்கிய புதினா தண்டுகளை தூக்கிப் போடாமல் வீட்டிலேயே நட்டு வளர்க்கலாம். தண்டில் வேர் பிடிக்க வைப்பது முதல், புதினாவை அடர்த்தியாக வளரச் செய்வது வரை எளிய ட்ரிக்குகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 24 2026, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கொத்து கொத்தா புதினா வளரணுமா?
Image Credit : Pinterest

கொத்து கொத்தா புதினா வளரணுமா?

சட்னி, பிரியாணி, புதினா சாதம், ஜூஸ் என சமையலில் மணத்தையும் சுவையையும் தூக்கிக் கொடுப்பது புதினா. ஆனால் ஒவ்வொரு முறையும் புதினா தேவைப்படும்போது கடைக்குச் சென்று ஒரு கட்டு வாங்க வேண்டியிருக்கிறதே என நினைக்கிறீர்களா? இனி புதினா இலைகளைப் பயன்படுத்திவிட்டு மீதமிருக்கும் நல்ல தண்டுகளை குப்பையில் போடாதீங்க.

கொஞ்சம் கவனமாக நட்டு வைத்தாலே அவற்றிலிருந்து புதிய வேர்கள் உருவாகி, வீட்டிலேயே பசுமையான புதினாவை வளர்க்க முடியும். பால்கனி, மொட்டை மாடி மட்டுமல்ல, போதுமான வெளிச்சம் கிடைக்கும் சிறிய இடமிருந்தால்கூட முயற்சி செய்யலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கடையில் வாங்கிய புதினாவே போதும்
Image Credit : Pinterest

கடையில் வாங்கிய புதினாவே போதும்

கடையில் வாங்கிய புதினாவை பயன்படுத்திவிட்டு தண்டுகளை குப்பையில் போடுறீங்களா? இனி அந்த தப்பை செய்யாதீங்க. அந்தத் தண்டுகளையே பயன்படுத்தி வீட்டில் கொத்து கொத்தாக புதினாவை வளர்க்கலாம்.

புதினாவை விதையிலிருந்துதான் வளர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கடையில் வாங்கிய புதினாவில் உள்ள இலைகளை சமையலுக்குப் பயன்படுத்திய பிறகு, தடிமனாகவும் பச்சையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் தண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். சரியான முறையில் அவற்றை நட்டு பராமரித்தால், சில நாட்களில் வேர் பிடித்து புதிய துளிர்கள் வரத் தொடங்கும்.

35
ஒரு புதினா தண்டு போதும்..பல இடங்களில் வேர் பிடிக்கும்
Image Credit : Pinterest

ஒரு புதினா தண்டு போதும்..பல இடங்களில் வேர் பிடிக்கும்

புதினாவை நேராக நட்டு வைக்கிறீங்களா? ஒருமுறை இப்படி படுக்க வைத்து நட்டுப் பாருங்க. தொட்டி முழுக்க புதினா படர இந்த சின்ன ட்ரிக் உதவும்.

புதினா செடியை நேராக நட்டு வைத்து ஒரே இடத்தில் மட்டும் வேர் பிடிக்க வைப்பதற்கு பதிலாக, தண்டை மண்ணின் மீது படுக்க வைத்து வளர்த்துப் பாருங்க. இதுதான் இதில் இருக்கும் சின்ன சீக்ரெட். ஒரே தண்டில் இருக்கும் பல கணுக்கள் மண்ணைத் தொட்டு, அவற்றிலிருந்து வேர்களும் புதிய தளிர்களும் உருவாகும். இதனால், தொட்டி முழுவதும் புதினா அடைர்த்தியாக வளரும்.

45
ஏன் இந்த முறையில் சீக்கிரம் அடர்த்தியாகும்?
Image Credit : Pinterest

ஏன் இந்த முறையில் சீக்கிரம் அடர்த்தியாகும்?

புதினா இயற்கையாகவே தண்டுகள் மற்றும் நிலத்தடி ஓட்டங்கள் மூலம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. மண்ணுடன் தொடர்பில் இருக்கும் தண்டின் கணுக்களில் adventitious roots எனப்படும் புதிய வேர்கள் உருவாகலாம்.

இதனால் தண்டின் ஒரு பகுதியில் மட்டும் வேர் உருவாவதற்குப் பதிலாக, மண்ணைத் தொடும் பல கணுக்களில் வேர்கள் உருவாகும் வாய்ப்பு கிடைக்கும். அந்தப் பகுதிகளில் இருந்து புதிய தளிர்களும் கிளைகளும் வளரும்போது, புதினா செடி அகலமாகப் பரவி அடர்த்தியாகத் தோன்றும்.

புதினா கொத்து கொத்தாக வளர இந்த விஷயங்களை கவனிங்க

புதினாவை நட்டு வைத்தால் மட்டும் போதாது. கொத்து கொத்தாக வளர இந்த சின்ன பராமரிப்பு ட்ரிக்ஸையும் மறக்காதீங்க. புதினா செடி செழிப்பாக வளர, மண்ணில் எப்போதும் லேசான ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் அதிகமாக தண்ணீர் ஊற்றி தொட்டியில் தண்ணீர் தேங்கி நிற்க விடக்கூடாது. தண்ணீர் தேங்கி நிற்பது வேர் அழுகலுக்கு வழிவகுக்கலாம்.

55
மேலே வளர விட்டுட்டே இருக்காதீங்க
Image Credit : Pinterest

மேலே வளர விட்டுட்டே இருக்காதீங்க

அடுத்ததாக, புதினா செடியை நல்ல வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து பராமரியுங்கள். புதிய பச்சைத் தளிர்கள் வளர ஆரம்பித்ததும் இன்னொரு சூப்பர் ட்ரிக் இருக்கு. தளிர்களின் நுனிப்பகுதியை அவ்வப்போது மெதுவாகக் கிள்ளிவிடுங்கள். இதனால் பக்கவாட்டில் புதிய கிளைகள் உருவாகத் தூண்டப்பட்டு, புதினா செடி நீளமாக மட்டும் வளராமல் அடர்த்தியாக புதர் போல வளர உதவும்.

அறுவடை செய்யும்போதும் ஒரு சின்ன ட்ரிக்

புதினா வளர்ந்ததும் இலைகளை மட்டும் பறிச்சுட்டு இருக்கீங்களா? அதற்கு பதிலாக இந்த சின்ன ட்ரிக்கை ட்ரை பண்ணிப் பாருங்க, மீண்டும் கிளைகள் வர உதவும்.

சமையலுக்கு புதினா தேவைப்படும்போது ஒவ்வொரு இலையாகப் பறிப்பதற்குப் பதிலாக, இலைகள் முளைக்கும் கணு (node) பகுதிக்கு சற்று மேலே தண்டுடன் சேர்த்து வெட்டி எடுங்கள். இப்படி வெட்டுவது அந்தப் பகுதியில் இருந்து பக்கக் கிளைகள் உருவாகி, செடி மீண்டும் அடர்த்தியாக வளர உதவும்.

ஆனால் ஒரே தடவையில் செடி முழுவதையும் வெட்டி எடுக்காதீங்க. தேவைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக அறுவடை செய்வதுதான் சூப்பர் ட்ரிக். இதனால் செடியில் போதுமான இலைகள் எஞ்சியிருக்கும். மீண்டும் புதிய தளிர்களும் கிளைகளும் வளர அவகாசம் கிடைக்கும்.

அதனால் புதினாவை வளர்ப்பது மட்டுமல்ல, எப்படி பறிக்கிறோம் என்பதிலும் கவனம் செலுத்தினால், ஒரே செடியிலிருந்து தொடர்ந்து ஃப்ரெஷ் புதினாவைப் பெறலாம்.

இப்படி கொஞ்சம் கவனத்துடன் பராமரித்தாலே, சமையலுக்கு புதினா தேவைப்படும் போதெல்லாம் கடைக்கு ஓடாமல் வீட்டுத் தொட்டியிலிருந்தே தேவையான நேரத்தில் ஃப்ரெஷ்ஷாகப் பறித்துப் பயன்படுத்தலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas stove low flame: கேஸ் அடுப்பில் தீ ‘சுருக்’னு குறைஞ்சிடுச்சா? 6 விஷயங்களை உடனே செக் பண்ணுங்க!
Recommended image2
இட்லி மாவில் அரிசியே வேண்டாம்.. பாசிப்பருப்பை இப்படி சேர்த்துப் பாருங்க..! செம டேஸ்ட்டான ஃபுட் ரெடி
Recommended image3
Fish and Curd: மீன் குழம்புடன் தயிர் சாப்பிடலாமா? பலரும் சொல்வது உண்மையா? தெரிஞ்சுக்கோங்க..!
Related Stories
Recommended image1
Ragi Recipes: ராகி மட்டும் போதும் இந்த 5 வகையான உணவுகளை செய்து அசத்தலாம்
Recommended image2
kollu Rasam: கொள்ளு ரசம் இப்படி செஞ்சு பாருங்க! மணமும் சுவையும் அசத்தும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved