ஆண்களே! தாடி அரிப்பு உங்களை தொந்தரவு செஞ்சா 'இத' மட்டும் ஃபாலோ பண்ணுங்க...
தாடியில் ஏன் அரிப்பு ஏற்படுகிறது மற்றும் அதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் தாடி வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை அனைவரும் தாடி வளர்த்து வருகின்றனர். ஏனென்றால், இது அவர்களுக்கு அகைக் கொடுக்குமாம்.
ஆனால் தாடி வளர்த்து அதை பராமரிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. உண்மையில், தாடியில் அரிப்பு வருவது ஒரு பிரச்சனையாகும்.அடர்த்தியான தாடி வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் ஏற்படும்.
இது பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுகளாலும் ஏற்படலாம். அதனால் அடர்ந்த தாடி வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். இப்போது தாடியில் ஏற்படும் அரிப்பை எவ்வாறு குறைப்பது என்று பார்க்கலாம்.
தாடியில் ஏற்படும் அரிப்பை குறைக்க இவற்றை பின்பற்றுங்கள்:
பொதுவாகவே, அடர்ந்த தாடி உள்ளவர்கள் சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப நல்ல க்ளென்சரைப் பயன்படுத்தவும்.
அதுபோல், தினமும் குளிப்பதற்கு முன் தாடியை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.
தாடியை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதும் தாடியில் அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். இதனால், தாடியில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.
தாடி முடி நன்றாக வளர சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு தினமும் ஹைட்ரேட்டிங் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.
ஷேவிங் அல்லது டிரிம் செய்த பிறகு ஆஃப்டர் ஷேவ் வாஷ் அல்லது லோஷனைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
உங்கள் தாடியில் சோப்பை பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் தாடியை தண்ணீரில் நன்றாக கழுவுங்கள். ஏனெனில் சில சமயங்களில் சோப்பும் அரிப்பை ஏற்படுத்தும்.
நீங்கள் முதல் முறையாக தாடி வளர்க்கும் போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்:
முதன்முறையாக தாடி வளர்க்கும் எண்ணம் இருந்தால், அதுவும் முதல்முறையாக தாடி வளர்க்கிறீர்கள் என்றால், உடனே ஷேவிங் செய்து டிரிம் செய்ய வேண்டாம். இதனால் சருமமும் சேதமடையலாம். பொறுமையாக இருங்கள் முதலில் தாடியை சரியாக வளர விடுங்கள். அதன் பிறகு, அதை ஒழுங்கமைக்கத் தொடங்குங்கள்.