வீட்டில் எறும்பு, 'ஈ' தொல்லை பண்ணுதா? தண்ணீர்ல இந்த '4' பொருட்கள் போட்டு தொடச்சுட்டா ஒரு எறும்பு கூட வராது!!
Cleaning Tips: வீட்டில் எறும்புகள், ஈக்கள் தொல்லை அதிகமாக இருந்தால், தண்ணீரில் சில பொருட்களை கலந்து வீட்டை துடைத்தால் போதும். இனி தொல்லைகள் இருக்காது.
Cleaning Tips In Tamil
மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக வீடு நச நசவென்று இருக்கும். இந்த பருவத்தில் தான் நோய் தொற்றுகள் அதிகமாக பரவும். எனவே வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
அதுவும் குறிப்பாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் கூடுதல் சுத்தம் தேவை. ஏனெனில் அவர்கள் சிந்தி சிந்தி சாப்பிடுவார்கள். இதனால் வீட்டில் ஈக்கள் மற்றும் எறும்புகளின் தொல்லை அதிகமாகவே இருக்கும் என்று சொல்லலாம்.
Cleaning Tips In Tamil
எவ்வளவுதான் வீட்டை சுத்தமாக வைத்தாலும் ஈக்கள் மற்றும் எறும்புகள் திரும்பத் திரும்ப வீட்டிற்கு தான் வரும். இந்த பிரச்சினையை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தால், அவற்றிலிருந்து விடுபட விரும்பினால், சில பொருட்களை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரால் வீட்டை துடைத்தால் போதும். வீட்டில் இனி ஈக்கள் மற்றும் எறும்புகளின் தொல்லைகளில் இருக்காது.
இதையும் படிங்க: வீட்டில் 'எலிகள்' அட்டகாசமா? 1 ஸ்பூன் வத்தல் பொடியில் ஓட ஓட விரட்டலாம்!!
Cleaning Tips In Tamil
வீட்டில் ஈக்கள் மற்றும் எறும்புகள் தொல்லை நீங்க டிப்ஸ்:
தேவையான பொருட்கள்
பேக்கிங் சோடா
கல் உப்பு
பச்சை கற்பூரம்
வசம்பு பொடி
தண்ணீர்
இதையும் படிங்க: வெறும் '5' நிமிடங்களில் பாத்ரூம், கிச்சன் குழாய்களில் அழுக்கை நீக்கலாம்!! இந்த '3' பொருள்கள் இருக்கா?
Cleaning Tips In Tamil
பயன்படுத்தும் முறை
ஒரு அரை கப் வழியில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் கல் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு பச்சை கற்பூரத்தை நன்றாக பொடியாக்கி அதனுடன் சேர்க்கவும். மேலும் அதில் வசம்பு பொடியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது அவை தண்ணீரில் கரையும் வரை நன்றாக கலக்கவும்.
அவை நன்றாக கரைந்த பிறகு அந்த தண்ணீரால் உங்கள் வீட்டு தரையை துடைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் வீட்டின் தரை சுத்தமாக இருப்பது மட்டுமின்றி, வீட்டில் எறும்புகள், ஈக்கள் மற்றும் சின்ன சின்ன பூச்சிகளின் தொல்லை இருக்கவே இருக்காது.
உங்களுக்கு வேண்டுமானால் இந்த தண்ணீருடன் நீங்கள் டெட்டால் அல்லது லைசால் சேர்த்துக் கொள்ளலாம்.
அதுபோல இந்த தண்ணீரால் உங்கள் வீட்டின் சமையலறையின் மேடையை சுத்தம் செய்தால் அங்கும் ஈக்கள் மற்றும் எறும்புகளின் தொல்லை இருக்கவே இருக்காது.