Shoes : மழைல 'ஷூ' நானைஞ்சு போச்சா? இந்த ஒரு விஷயம் பண்ணா சீக்கிரம் காயவைக்கலாம்
மழையில் ஷூ நனைந்து நாஸ்தியாகிவிட்டதா? காய வைக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்காக சில சூப்பரான ஐடியாக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Quick Dry Shoes Hack
மழைக்காலத்தில் துணிகளை காய வைக்கவே படாத பாடுவோம். அதிலும் ஷூ நனைந்தால் சொல்லவே வேண்டாம். நனைந்த ஷூ வை காய வைக்காமல் அடுத்த நாள் போடவும் முடியாது. ஷூ காயவில்லை என்றால் துர்நாற்றம் வீசுத் தொடங்கும். இதே பிரச்சினை உங்களுக்கும் இருக்கிறதா? இதோ உங்களுக்காக ஒரு சூப்பரான சொல்யூஷன் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. வாங்க அது என்னனு தெரிஞ்சுக்கலாம்.
ஸ்பான்ஸ் ரிமூவ் பண்ணுங்கள் :
பொதுவாக எல்லா ஷூவின் உள்புறத்திலும் நம் கால் வடிவமைப்பை போல ஒரு ஸ்பான்ஸ் வைத்திருப்பார்கள். அதை வெளியே எடுத்துவிடுங்கள். இப்போது அதில் படிந்திருக்கும் அழுக்கு, மண், தூசியை ஒரு பழைய துணியை வைத்து துடைக்கவும்.
சோப்பு நீர்
அடுத்ததாக, ஒரு வாளியில் சூடானநீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோப் அல்லது சோப் லிக்விடை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இந்த நீரில் இப்போது அந்த ஸ்பான்ஸ்ஸை போட்டு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் அலசிவிட்டு காய வையுங்கள்.
பழைய செய்தித்தாள் :
- இப்போது பழைய செய்தித்தாள்களை கொஞ்சம் எடுத்து, அதை கைகளால் நன்கு கசக்கி பந்து போல சுருட்டி, ஷூவுக்குள் வையுங்கள். ஷூவுக்குள் இருக்கும் ஈரத்தை பேப்பர் வேகமாகவும், நன்றாகவும் உறிஞ்சிவிடும்.
- பிறகு 2-3 மணி நேரம் காத்திருக்க வேண்டும்
- இப்போது அந்த பேப்பரை எடுத்துப் பாருங்கள். ஈரத்தை நன்கு உறிஞ்சியிருக்கும்.
- ஷூவுக்ககுள் இன்னும் ஈரம் இருந்தால் மீண்டும் கொஞ்சம் பே்பபர் எடுத்து சுருட்டி வையுங்கள்.
- இப்படியே 3-4 முறை செய்தாலே போதும். ஷூவில் இருக்கும் மொத்த ஈரத்தையும் பேப்பர் உறிஞ்சிவிடும்.
துர்நாற்றத்தை போக்க என்ன செய்யணும்?
ஷூவில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்க பில்டர் காபி பொடி பயன்படுத்தலாம். இதற்கு ஒரு டிஸ்யூ பேப்பரில் சிறிதளவு காபி பொடி போட்டு அதை உறுதி ஷூவுக்குள் வைத்து விடுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு மறுநாள் காலை அதை வெளியே எடுத்து போடுங்கள். முக்கியமாக இன்ஸ்டன்ட் காபி பொடியை பயன்படுத்தாதீர்கள். அது காற்றின் ஈரப்பதத்தால் ஷூவில் கரைந்து கறையை ஏற்படுத்தி விடும். எனவே பில்டர் காபி பொடியை மட்டுமே பயன்படுத்துங்கள்.
முக்கிய குறிப்பு :
பொதுவாக மழைக்காலத்தில் நிறைய பேர் ஷூவை வாஷ் பண்ண மாட்டார்கள். ஆனால் இந்த சீசனில் ஷூ சுத்தமாக இல்லையென்றால் துர்நாற்றம் வீசுத் தொடங்கும். ஆகவே, குறைந்தது 1-2 வாரங்களுக்கு ஒருமுறையாவது ஷூவை டீப் க்ளீன் செய்து, நன்கு உலர வையுங்கள்.
மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை ஃபாலோ பண்ணினாலே போதும். மழைக்காலத்தில் தினமும் ஷூ போட்டு வெளியே போகலாம்.