- Home
- Lifestyle
- மோசமா கருத்து போன வெள்ளி விளக்கு, கொலுசு கூட வெறும் 10 நிமிடத்தில் பளபளக்கும்! வெறும் விபூதி மட்டும் போதும்!!
மோசமா கருத்து போன வெள்ளி விளக்கு, கொலுசு கூட வெறும் 10 நிமிடத்தில் பளபளக்கும்! வெறும் விபூதி மட்டும் போதும்!!
வீட்டில் உள்ள கருத்து போன வெள்ளி விளக்கை எப்படி சுத்தம் செய்தால் பளபளக்கும் என்பதற்கான சூப்பர் டிப்ஸ்..

நம் வீட்டு பூஜை அறையில் வழிபாட்டுக்கு வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு, குத்துவிளக்கு போன்றவை வைத்திருப்போம். அவை நாளடைவில் கருத்தும், எண்ணெய் பிசுக்குடனும் காணப்படும். அதை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை. வெள்ளி விளக்கை பொறுத்தவரை அதிகமாக கருத்து போய் இருப்பது வீட்டிற்கு நல்லதல்ல. பார்க்கவும் நன்றாக இருக்காது. கருத்துப் போன வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கை இந்த மாதிரி ஒரு முறை சுத்தம் செய்து பாருங்கள். விளக்கு தேயாமல், பளபளப்பாக மாறும். இதற்கு நமக்கு விபூதி இருந்தால் போதும்.
|
விபூதியை வைத்து கருத்துப்போன வெள்ளி விளக்கு முதல் அனைத்து வெள்ளி பொருட்களையும் பளபளக்கச் செய்யலாம். முதலில் கருத்து போல வெள்ளி விளக்கை எடுத்து அதன் மீது படிந்திருக்கும் எண்ணெயை ஒரு துணியால் துடைத்து வையுங்கள். பூஜைக்காக அதன் மீது பூசப்பட்ட மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் துடைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், மற்றொரு கிணத்தில் விபூதியும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கைகளை மட்டும் தண்ணீரில் நனைத்து விபூதியை கொஞ்சம் கொஞ்சமாக தொட்டு கருத்த வெள்ளி விளக்கின் மீது பூசுங்கள்.
|
விபூதியை விளக்கின் மீது பூசும்போது அதன் மீது படிந்துள்ள கருப்பு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். இப்படி வெள்ளி விளக்கின் மீது விபூதியை பூசிய பிறகு 10 நிமிடங்கள் அதனை உலர விடுங்கள். பின்னர் பிரஷ் வைத்து வெள்ளி விளக்கை நன்கு தேய்த்தால் அதன் மீது இருக்கும் கருப்பு நீங்கி புது விளக்கு போல பளபளப்பாக மாறுவதை நீங்கள் பார்க்கலாம். பிறகு தண்ணீரால் விளக்கை கழுவி காட்டன் துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் வெள்ளி விளக்கின் மீது மீண்டும் விபூதியை தூவி கைகளால் கொஞ்சம் தேய்த்து விட வேண்டும். அவ்வளவுதான்!
இதையும் படிங்க: சனி வக்ர பெயர்ச்சியால் யாருக்கு யோகம்? குறிப்பா இந்த 5 ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்!
silver jewellery
இதே முறையில் வெள்ளி கொலுசு, வெள்ளி செயின், வெள்ளி குங்குமச்சிமிழ் எல்லாவற்றையும் சுத்தம் செய்யலாம். இப்படி விபூதியால் வெள்ளி பொருட்களை சுத்தம் செய்தால் ரொம்ப நாள் வரைக்கும் கருத்துப் போகாமல் பளபளப்பாகவே இருக்கும்.
இதையும் படிங்க: வீட்டு பூஜையறையில் ஒரே கடவுளுக்கு நிறைய சிலைகள் வைத்திருப்பது நல்லதா?