- Home
- Lifestyle
- Fridge Cleaning: பழைய ஃபிரிட்ஜும் இனி புதுசு போல பளபளக்கும்.. ஃபிரிட்ஜ் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ்!
Fridge Cleaning: பழைய ஃபிரிட்ஜும் இனி புதுசு போல பளபளக்கும்.. ஃபிரிட்ஜ் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ்!
Fridge Cleaning: ஃபிரிட்ஜில் உள்ள பிடிவாதமான கறைகள், துர்நாற்றத்தை போக்க விலையுயர்ந்த ரசாயனங்கள் தேவையில்லை. வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீரை வைத்து ஃபிரிட்ஜ்ஜை எப்படி சுத்தம் செய்வது? என விரிவாக பார்ப்போம்.

ஃபிரிட்ஜ் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ்
ஃபிரிட்ஜின் கண்ணாடித் தட்டுகளில் படிந்துள்ள எண்ணெய்ப் பிசுக்கு, காய்கறிச் சாறுகளை அகற்ற விலையுயர்ந்த ரசாயனங்கள் தேவையில்லை. ஃபிரிட்ஜ்ஜை சிறந்த முறையில் கிளீன் செய்ய விரும்புபவர்களுக்கு அரை கப் வெள்ளை வினிகருடன் அதே அளவு சாதாரண தண்ணீரை கலந்து ஸ்ப்ரே செய்வதே எளிய தீர்வாகும். இந்தக் கலவை பிடிவாதமான கறைகளை நீக்குவதுடன், உள்ளே வீசும் துர்நாற்றத்தையும் பெருமளவு குறைத்துவிடும்.
சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்குவதற்கு முன் மின் இணைப்பைத் துண்டிப்பது மிக முக்கியம். எல்லாப் பொருட்களையும் மொத்தமாக வெளியே எடுத்து வைத்தால், அவை சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, இரண்டு தட்டுகளை மட்டும் முதலில் காலி செய்து சுத்தம் செய்வது புத்திசாலித்தனம். பால், தயிர், இறைச்சி போன்ற விரைவில் கெட்டுப்போகும் உணவுகளை ஐஸ் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கலாம். காலாவதியான அல்லது அழுகிய பொருட்கள் கண்ணில் பட்டால், தயவுதாட்சண்யமின்றி குப்பையில் வீசுங்கள்.
கண்ணாடித் தட்டுகளைக் கையாளும் முறை
ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்த குளிர்ந்த கண்ணாடித் தட்டுகளின் மீது, அவசரத்தில் சுடுநீரை ஊற்றிவிடக் கூடாது. திடீர் வெப்பநிலை மாற்றத்தால் கண்ணாடியில் விரிசல் விழவோ, உடையவோ அதிக வாய்ப்புள்ளது. அவை சாதாரண அறை வெப்பநிலைக்கு வந்த பிறகே சுத்தம் செய்யத் தொடங்க வேண்டும்.
தயாரித்து வைத்துள்ள வினிகர் கலவையைத் தட்டுகளின் மீது ஸ்ப்ரே செய்துவிட்டு, மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை காத்திருக்கவும். காய்ந்த கறைகள் இப்போது நன்றாக ஊறி மென்மையாகியிருக்கும். சுத்தமான மைக்ரோஃபைபர் துணியை எடுத்து, தட்டின் பின்புறத்தில் இருந்து முன்புறமாக ஒரே திசையில் துடைத்து எடுக்க வேண்டும்.
அழுக்குகள் ஓரிடத்தில் இருந்து மற்ற இடங்களுக்குப் பரவுவதை இந்த முறை தடுக்கும். கறைகள் போகவில்லை என்றால் மென்மையான ஸ்பாஞ்ச் பயன்படுத்தலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் கம்பி நார் அல்லது கடினமான பிரஷ்களைக் கொண்டு தேய்க்கக் கூடாது.
எங்கு வினிகரைப் பயன்படுத்தக் கூடாது?
தட்டுகளின் ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் இடுக்குகளில் சேரும் அழுக்கை, பழைய டூத் பிரஷ் கொண்டு மெதுவாகத் தேய்த்து எடுக்கலாம். அதேசமயம், வினிகரில் உள்ள அமிலத்தன்மை காரணமாக, கதவில் உள்ள ரப்பர் சீல்கள் மற்றும் அலுமினியப் பகுதிகளில் இதைப் பயன்படுத்தக் கூடாது. அந்த இடங்களைச் சுத்தம் செய்ய மிதமான சோப்புத் தண்ணீரே போதுமானது.
பச்சை இறைச்சி அல்லது கோழிக்கறிச் சாறு சிந்தியிருந்தால், வினிகரை மட்டும் நம்பியிருக்காமல் சோப்பு நீரால் நன்றாகக் கழுவ வேண்டும். எந்தச் சூழலிலும் ப்ளீச்சிங் பவுடர் போன்ற கிருமிநாசினிகளுடன் வினிகரைக் கலந்துவிடக் கூடாது. அப்படிச் செய்தால் ஆபத்தான வாயுக்கள் உருவாகும் அபாயம் உள்ளது.
உலர்ந்த பின் அடுக்குங்கள்
தட்டுகளை மீண்டும் உள்ளே வைப்பதற்கு முன், அவற்றில் துளி கூட ஈரப்பதம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். உலர்ந்த துணியால் மூலை முடுக்குகளை நன்றாகத் துடைத்த பிறகே ஃபிரிட்ஜில் பொருத்த வேண்டும். சமைத்த உணவுகளை மூடிய பாத்திரங்களிலும், காய்கறி மற்றும் இறைச்சியைத் தனித்தனியாகவும் சேமிப்பது பாதுகாப்பானது.
ஃபிரிட்ஜின் உட்புற வெப்பநிலையை 4 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் கீழ் பராமரிப்பது உணவுகள் கெட்டுப்போவதைத் தடுக்கும். மாதத்திற்கு ஒருமுறையாவது இந்த முறையில் சுத்தம் செய்து வந்தால், தேவையற்ற துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.





