MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Ambani House : எந்த கொம்பனாலும் வாங்க முடியாது... அம்பானி வீட்டை இப்போ விற்றால் அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Ambani House : எந்த கொம்பனாலும் வாங்க முடியாது... அம்பானி வீட்டை இப்போ விற்றால் அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Ambani Antilia House Worth : இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, கடந்த 2010ம் ஆண்டு சுமார் 15 ஆயிரம் கோடி செலவில் அன்டிலியா என்கிற பங்களாவை கட்டி இருந்தார். அதன் இன்றைய மதிப்பு பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 16 2026, 10:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Mukesh Ambani House
Image Credit : X

Mukesh Ambani House

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தனது குடும்பத்துடன் மும்பையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அன்டிலியா மாளிகையில் வசித்து வருகிறார். உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த பிரம்மாண்ட கட்டிடம், அதன் ஆடம்பர வசதிகளாலும், வியக்க வைக்கும் கட்டுமானத்தாலும் எப்போதும் பேசுபொருளாக இருந்து வருகிறது. அன்டிலியாவின் கட்டுமானப் பணிகள் 2006-ஆம் ஆண்டு தொடங்கி, சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து 2010-ல் நிறைவடைந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அன்டிலியா வீட்டின் மதிப்பு
Image Credit : Facebook

அன்டிலியா வீட்டின் மதிப்பு

அப்போது இந்த மாளிகையை கட்டுவதற்காக சுமார் 15,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது சுமார் 2 பில்லியன் டாலர் செலவாகும் என கூறப்பட்டது. இதில், அடித்தள கட்டமைப்புக்கே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதே அன்டிலியா மாளிகையை தற்போது, அதே அளவிலும் அதே தரத்திலும் மீண்டும் கட்ட வேண்டுமென்றால் எவ்வளவு செலவாகும் தெரியுமா? அதைப்பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

35
இன்றைய மதிப்பு எவ்வளவு?
Image Credit : Getty

இன்றைய மதிப்பு எவ்வளவு?

ரியல் எஸ்டேட் துறையின் மதிப்பீடுகளின்படி, கட்டுமானப் பொருட்களின் விலை, நிலத்தின் மதிப்பு மற்றும் தொழில்நுட்பச் செலவுகள் பல மடங்கு உயர்ந்துள்ளதால், இன்று அன்டிலியாவை புதிதாக கட்டுவதற்கு 38,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும் என்று கூறப்படுகிறது. சில கணிப்புகளின்படி, அதன் மதிப்பு 40,000 கோடி ரூபாயை கூட எட்டக்கூடும். அன்டிலியாவின் சிறப்பம்சங்களும் சாதாரணமானவை அல்ல. சுமார் 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகை, சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

45
அன்டிலியா வீட்டில் இம்புட்டு வசதிகளா?
Image Credit : Facebook

அன்டிலியா வீட்டில் இம்புட்டு வசதிகளா?

இதில் மூன்று ஹெலிபேடுகள், பல அடுக்குகள் கொண்ட பிரம்மாண்ட கார் பார்க்கிங், தனியார் திரையரங்கம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, கோயில் உள்ளிட்ட ஏராளமான சொகுசு வசதிகள் இடம்பெற்றுள்ளன. மும்பையின் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, வீட்டிற்குள் செயற்கை பனிப்பொழிவு போன்ற உணர்வை வழங்கும் ஸ்னோ ரூம் கூட அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியே அன்டிலியாவை உலகின் மிக வித்தியாசமான தனியார் வீடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. வெளிப்புற தோற்றம் மட்டுமல்லாமல், அதன் உள்புற வடிவமைப்பும் அரண்மனைக்கு நிகராக அமைந்துள்ளது.

55
தனித்துவமான வடிவமைப்பு
Image Credit : Social media

தனித்துவமான வடிவமைப்பு

ஒவ்வொரு தளமும் தனித்துவமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அம்பானி குடும்பத்தின் அன்டிலியா, ஒரு சாதாரண வீடு அல்ல. அது இந்தியாவின் ஆடம்பர வாழ்க்கை முறையையும், நவீன கட்டிடக் கலை நுணுக்கத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் ஒரு பிரம்மாண்ட அடையாளமாக திகழ்கிறது. இன்றைய சந்தை மதிப்பில் இதுபோன்ற ஒரு மாளிகையை மும்பையின் மையப்பகுதியில் மீண்டும் உருவாக்குவது என்பது மிகவும் கடினமான விஷயமாகவே கருதப்படுகிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
முகேஷ் அம்பானி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Coconut Oil: இரவில் தூங்கும் முன் காலில் தேங்காய் எண்ணெய்! தினமும் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா?
Recommended image2
Crispy Dosa Recipe: வீட்லயே மொறுமொறுனு தோசை சுடுவது எப்படி..? சிம்பிள் டிப்ஸ்..!
Recommended image3
சிறுகீரை முதல் எள் வரை... இரும்புச்சத்து அள்ளித்தரும் 6 உணவுகள்! ஆனால் இது தெரிஞ்சாதான் முழு பலன்!
Related Stories
Recommended image1
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Recommended image2
அம்பானி வீட்டில் சப்பாத்தி சுடுபவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.! சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகமாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved