Bra Wearing Time : பெண்களே விஷயம் தெரியுமா? ஒரு நாளில் எவ்வளவு நேரம் பிரா அணியனும்?
ஒரு நாளை எத்தனை மணி நேரம் பிரா அணிய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Bra Wearing Time
பொதுவாக பிரா அணிந்தால் அசெளகரியமாக இருக்கும் மற்றும் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, தேவைப்படும் போது மட்டுமே பிரா அணிய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் பிரா அணிய வேண்டும் என்று நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்களா?
உண்மையில், பிரா அணிவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். உங்களது உடல் வாழ்க்கை முறை மற்றும் நீங்கள் அணியும் பிரா வகையை பொறுத்து அது அமையும். ஆனால், உண்மையில் பெரும்பாலான நிபுணர்கள் ஒரு நாளைக்கு 8 முதல் 12 மணி நேரம் வரை பிரா அணியலாம் என்று பரிந்துரைக்கின்றனர். இந்த வரம்பானது உங்களது சருமத்தில் அதிக அழுத்தம் கொடுக்காமல் அல்லது ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தாமல் ஆதரவை வழங்கும். அதேசமயம் 12 மணி நேரத்திற்கும் மேலாக பிரா அணிவதை தவிர்க்க வேண்டும்.
எப்படிப்பட்ட பிரா அணியலாம்?
நீங்கள் அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி இருந்தால் நாள் முழுவதும் உங்களது மார்பை தாங்கும் வகையில் வசதியான டி-சார்ட் பிரா அணியுங்கள். ஆனால் நீங்கள் வழக்கமாக அதிக தீவிர உடற்பயிற்சி செய்தாலோ அல்லது ஜிம்மிற்கு செல்கிறீர்கள் என்றாலோ உங்களது மார்பகத்தை சரியான நிலையில் வைத்திருக்க ஸ்போர்ட்ஸ் பிரா அணியலாம். எனவே, நீங்கள் பிரா அணியும் காலம் மற்றும் நீங்கள் ஏன் அதை அணிய வேண்டும் என்பதை பொறுத்து தீர்மானித்து அணியுங்கள்.
நாள் முழுவதும் பிரா அணிந்தால் உடல்நல பிரச்சனைகள் ஏற்படுமா?
நீண்ட நேரம் பிரா அணிந்தால் எந்தவித தீங்கும் விளைவிப்பதில்லை. ஆனால் நீங்கள் மிகவும் இறுக்கமாகவோ அல்லது தூங்கும்போது அணிந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளை ஏற்படுத்தும்:
- சருமத்தில் எரிச்சல் மற்றும் தடுப்புகள் - தோல்கள் அல்லது முதுகில் அசெளகரியமாக உணர்தல் அல்லது வலி ஏற்படுதல் - தோலில் பள்ளங்கள்
பிரா அணிந்து தூங்கலாமா?
உங்களின் மார்பக அளவு பெரியதாகவோ அல்லது அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு காரணமாக கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால் தவிர, தூங்கும் போது பிரா அணி அவசியமில்லை என்று பெரும்பாலான மருத்துவர்கள் சொல்லுகின்றனர். ஒருவேளை நீங்கள் அணிய விரும்பினால் மென்மையான, கட்டுப்பாடற்ற பிராலெட் அல்லது ஸ்லீப் ப்ராவை அணியவும்.
வீட்டில் பிரா அணியாமல் இருக்கலாமா?
ஆம், நிச்சயமாக நீங்கள் வீட்டில் பிரா அணியாமல் இருக்கலாம். இதனால் உங்களது சருமத்திற்கு ரிலாக்ஸ் கிடைக்கும். கூடுதலாக தோள்கள் மற்றும் விலா எலும்பில் அழுத்தம் ஏற்படுவது குறையும்.