Bra : எந்த வயசுல பெண் குழந்தைங்க பிரா அணிய தொடங்கனும்? தெளிவான விளக்கம்
பெண் குழந்தைகள் எந்த வயதில் பிரா அணிய தொடங்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

Right Age For Girls To Start Wearing a Bra?
பெண் குழந்தைகள் பிரா அணிய தனி வயது என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் அது மாறுபடும். ஒவ்வொரு குழந்தையும் தனிப்பட்ட வளர்ச்சியை கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் 8 வயதிலேயே அணிய வேண்டும். சில குழந்தைகள் 14 வயதில் பிரா அணியலாம். அவர்கள் மார்பக வளர்ச்சி, பருவமடைதல் போன்ற சில காரணங்களும் இதில் கவனிக்கத்தக்கதாகும்.
எந்த வயதில் பிரா அணியலாம்?
சராசரி வயது சுமார் 11 வயதாகும். ஆனால் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் இது மாறுபடும். குழந்தைகளுக்கு மார்பக மொட்டுகள் தோன்றுவது அவர்களின் மார்பகம் வளர்ச்சியடைவதன் ஒரு செயல்பாடாகும். இந்த அறிகுறிக்கு பின் பிரா அணிய தொடங்கலாம். குழந்தைகள் பூப்படைந்த பின் பிரா அணியலாம். உடற்செயல்பாடுகளினால் ஏற்படும் வலி, குதித்தல் அல்லது ஓடுதல் போன்ற உடற்செயல்பாடுகளில் ஏற்படும் அசௌகரியம் போன்றவை பிரா அணிய வேண்டியதன் அறிகுறிகளாகும். இதனை வயதை வைத்து தீர்மானில
அணிய வேண்டாம்!
பெண் குழந்தைகள் இன்ன வயதில் கட்டாயம் பிரா அணிய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சில குழந்தைகளுக்கு மார்பகங்கள் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருக்கும். அவர்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை.
பிரா அணியத் தொடங்குவதற்கான அறிகுறிகள்
வெளியில் தெரியும் மார்பக மொட்டுகள் அல்லது மார்பகங்களின் வளர்ச்சியை வைத்து முடிவு செய்யலாம். விளையாடுதல், குதித்தல் போன்ற உடல் செயல்பாடுகளில் அசௌகரியம், மார்பகங்களில் வலி ஏற்பட்டால் பிரா அணிய வேண்டும். மார்பகங்களின் அளவு அல்லது வடிவத்தில் வேறுபாடு ஏற்படுதல் போன்றவை அறிகுறிகளாகும்.