எத்தனை நாள் ஒரு மனிதனால் சாப்பிடாமல் வாழ முடியும் தெரியுமா?
Human Live Without Food : சமீபத்தில் வெளியான வாழை திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பசியை தாங்கி கொண்டு இறுதி காட்சியில் அசரடிக்கும் அபார நடிப்பை வெளிப்படுத்திய சிறுவன் மக்களின் மனதில் இடம் பிடித்தான்.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கும் படங்கள் தனித்துவமானவை. அவருடைய கதைக்களம் எதார்த்தத்தையும், உண்மையான உணர்வுகளையும் திரையில் காட்டும். அவருடைய 'மறக்கவே நினைக்கிறேன்' புத்தக்கம் படிப்பவர்களால் எளிதில் அந்த கதைமாந்தர்களை மறக்கவே முடியாது. அந்த புத்தகத்திற்கும், அவர் இயக்கும் படங்களுக்கும் தொடர்புண்டு. அவருடைய திரை கதாப்பாத்திரங்களையும் மறக்க இயலாது. அவர்கள் நம்மை சுற்றி வாழும் மனிதர்களின் கதை.
வாழை திரைப்படம் மக்களின் மனதிற்கு நெருக்கமாக அமைய அதன் கதைக்களமும் காரணம். வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த நண்பர் ஒருவர், தானும் அதுபோல பலநாட்கள் சாப்பிடாமல் இருந்ததாக சொல்லி வருத்தப்பட்டார். வாழை கதையில் நாயகனாக வலம் வரும் சிறுவன் காலை முதல் சாப்பிடாமல் நடனமாடுவார். எவ்வளவுதான் அவர் தன்னை ஆக்டிவாக காட்டிக் கொண்டாலும் உணவே உண்ணாமல் இருப்பதால் இறுதியில் சோர்வடைவார். இது பலரின் நெஞ்சை உலுக்கியது. இதைப் போலவே ஹிந்தியில் 'Stanley Ka Dabba' என்ற திரைப்படத்திலும் சாப்பாடு கிடைக்காத சிறுவனின் பசியை நமக்கு திரையில் உணர்வுகளாக காட்டியிருப்பார்கள். இது உணர்வுப்பூர்மானது. ஆனால் ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்க முடியும் என தோன்றினால் நீங்கள் உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவாக யோசிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
எவ்வளவு நாள் சாப்பிடாமல் இருக்கலாம்?
உடலில் எந்த நோயும் இல்லாத சாதாரண மனிதன் எந்த உணவும் எடுத்து கொள்ளாமல் எவ்வளவு நாள் உயிர் வாழ முடியும் என மிகச்சரியாக சொல்லும்படி எந்த ஆய்வும் செய்யப்படவில்லை. ஆனாலும் ஒரு வாரம் முதல் 3 வாரங்கள் வரை சாப்பிடாமல் வாழலாம் என சில பதிவுகள் இருக்கின்றன.
ஒருவர் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் கூட குடிக்காமல் உயிர்வாழ சாத்தியம் உண்டு. பண்டைய காலத்தில் முனிவர்கள் தவம் செய்தது குறித்து குறிப்புகள் உள்ளன. ஆனால் அது ஒவ்வொருவரின் வயது, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை சார்ந்தது. மனிதன் வாழ உணவும் தண்ணீரும் மிகவும் முக்கியம். நம்முடைய உணவில் இருந்தும் நமக்கு ஆற்றல், நீர்ச்சத்து கிடைக்கும். இதுவே நீங்கள் செயல்பட காரணம். தண்ணீர் அருந்தாமல் நம்மால் பல நாள்கள் உயிர் வாழ முடியும். நமக்கு தேவையான நீர் மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும். ஆனால் உணவு இல்லாமல் நீண்ட காலம் வாழ முடியாது. சில நாட்கள் அல்லது சில வாரங்கள் மட்டுமே உணவை தவிர்க்க முடியும். அதன் பின்னர் பசி வெறியாக மாறக்கூடும். உடலில் மாற்றங்கள் வரும்.
ஒரு மனிதரின் உடல் நன்கு இயங்க அவருக்கு அன்றைய தினம் கிடைக்கவேண்டிய கலோரிகள் கிடைக்கவேண்டும். கலோரிகள் எரிக்கப்படுவதன் மூலமே நமக்கு ஆற்றல் கிடைக்கும். நாம் உண்ணும் உணவில் இருந்துதான் அது சாத்தியமாகிறது. நம் உடலுக்கு தேவையான கலோரிகள் கிடைக்காமல் இருப்பதுதான் பட்டினி ஆகும். இதனால் உடல் உள்ளிருந்து பாதிக்கத் தொடங்குகிறது.
உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க உணவு கிடைக்காத சமயத்தில், அதை சமாளிக்க உடல் வித்தியாசமாக செயல்படும் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும். ஆனால் சரியான நேரத்தில் ஊட்டச்சத்து திரும்ப கிடைக்காவிட்டால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
மனிதன் உணவு சாப்பிடாமல் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதற்கு மிகச்சரியான எந்த பதிலும் இதுவரை கண்டறியப்படவில்லை. ஒவ்வொருவருடைய உடலும் ஒவ்வொரு மாதிரியானது. ஒருவரால் சாப்பிடாமல் முழு ஆற்றலுடன் செயல்பட முடியும் என அவர் கருதினால் அது அவருடைய முந்தைய கால வாழ்க்கை முறையை பொறுத்தது. ஏற்கனவே நீங்கள் சத்துள்ள உணவை சாப்பிட்டு ஆரோக்கியமான நபராக இருந்தால், உங்களால் சாப்பிடாமலும் சில மணிநேரங்கள் ஆக்டிவாக இருக்க முடியும்.
சாப்பிடாமல் சோர்வின்றி சுறுசுறுப்பாக செயல்படுவது ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, அவர் வயதை பொறுத்து மாறலாம். அதிகபட்சம் 24 மணிநேரம் வரை உணவின்றி உடலை ஆக்டிவ் ஆக வைக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் அதன் பிறகு நாம் சில நாட்கள் வாழலாம். ஆனால் உற்சாகமாக வாழ முடியாது.
சாப்பாடு, தண்ணீர் இரண்டும் இல்லாமல் ஒரு வாரம் மட்டும் தான் ஒருவரால் வாழ முடியுமாம். தண்ணீர் குடித்துவிட்டு, உணவு மட்டும் உண்ணாமல் இருப்பவர்கள் 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை கூட வாழலாம். ஏனெனில் தண்ணீர், அவர் உடலில் ஏற்கனவே உள்ள கொழுப்பு, புரதத்தின் அளவு அவரின் வாழ்நாளை நீட்டிக்கிறது. இந்த விஷயத்தில் ஒல்லியான நபரை விடவும் பருமான நபரின் ஆயுள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
சில ஆய்வுகள், சாப்பிடாமல் 3 வாரங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் எனவும் சொல்கின்றன. தண்ணீர் கூட குடிக்காதவர்கள் 3 முதல் 4 நாட்களே வாழ முடியும் எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் தண்ணீர் அருந்தி உணவை மட்டும் தவிர்ப்பவர்கள் 3 வாரங்கள் வாழ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
பட்டினி இருப்பதன் விளைவுகள்:
ஒரு சிலர் சில நாட்கள் அல்லது வாரங்கள் பட்டினியாக இருந்தாலும் அவர்களால் வாழ முடியும் என ஆய்வுகள் கூறினாலும், அதற்கு வாழும் சான்றுகளாக சில மனிதர்கள் இருந்தாலும் பட்டியாக கிடப்பதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியாது. வயிற்றில் அதிகபடியான அமில சுரப்பினால் அல்சர் போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு மயக்கம், தலைசுற்றல் போன்ற தற்காலிக பாதிப்பும் சிலருக்கு ஆளுமை ஹார்மோனான தைராய்டில் பாதிப்பும் என நீண்ட கால பிரச்சனையும் ஏற்படும். உடல் பலவீனம், மாரடைப்பு கூட வரலாம். நாம் யாரும் விரும்பி பட்டினி கிடப்பதில்லை. ஆனால் முடிந்தவரை சாப்பிடாமல் இருப்பதை தவிருங்கள்.