MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நீண்ட நாள் வாழ்றதுக்காக இப்படிலாமா செய்றாங்க? ஜப்பானியர்களின் '6' நல்ல பழக்கங்கள்!! 

நீண்ட நாள் வாழ்றதுக்காக இப்படிலாமா செய்றாங்க? ஜப்பானியர்களின் '6' நல்ல பழக்கங்கள்!! 

Japanese Healthy Lifestyle : ஜப்பானியர்கள் தங்கள் உடலில் கெட்ட கொழுப்பு சேரவிடாமல் ஆரோக்கியமாக வாழ கடைபிடிக்கும் 6 பழக்க வழக்கங்களை இங்கு காணலாம். 

3 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 09 2024, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
japanese secrets for long life in tamil

japanese secrets for long life in tamil

ஜப்பானியர்கள் தங்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் உலகம் முழுதும் அறியப்படுகிறார்கள். நீண்ட ஆயுளுக்கு அவர்களுடைய உணவு பழக்கம் சுறுசுறுப்பான வாழ்வியல் முறைகள் போன்றவை அதற்கு காரணமாக உள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
japanese food habits in tamil

japanese food habits in tamil

ஜப்பானில் பெரும்பாலோனோர் உடலமைப்பு ஒல்லியாக உள்ளது. அவர்களுடைய உணவு பழக்கம் இதற்கு உறுதுணையாக உள்ளது. பெரும்பாலும் ஜப்பானியர்கள் பாரம்பரியமான உணவு முறைகளையே இன்றளவிலும் கடைபிடித்து வருகிறார்கள். பருவ காலங்களில் காய்கறிகள், புளிக்க வைத்த உணவுகள், மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்.

ஜப்பானியர்கள் உணவு சமைக்கும் போது அதனுடன் இந்தியர்களைப் போல அதிகமான மசாலாக்களை சேர்ப்பதில்லை.  அவர்களுடைய உணவில் இடம்பெறும் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இவை அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக பதப்படுத்த உணவுகளை அதிகம் அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை இது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. 

இதையும் படிங்க:  உலகின் முதல் மர செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை!

36
Japanese lifestyle habits in tamil

Japanese lifestyle habits in tamil

அளவான உணவு: 

மற்ற நாட்டு உணவு முறைகளை ஒப்பிடும் போது ஜப்பானில் குறைந்த அளவிலான உணவுகளை மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அந்த உணவில் புரதம், கார்போஹைட்ரேட், காய்கறிகள் போன்றவை சம அளவில் இடம்பெறுகின்றன. ஜப்பானியர்கள் ருசிக்கு முக்கியத்துவம் அளித்தாலும், அளவாக உண்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். குறைந்த அளவில் சாப்பிடுவதன் மூலமாக குறைவான கலோரிகளை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இது அவர்களுடைய எடையை நிர்வகிப்பதில் உதவுகிறது.  

மெதுவாக சாப்பிடுதல்: 
     
உணவு சாப்பிடும் போது வேகமாக சாப்பிடுவதை ஜப்பானியர்கள் தவிர்க்கிறார்கள். உணவு சாப்பிடுவதை அவர்கள் ஒரு அனுபவமாக கருதுகிறார்கள். உணவை நன்கு மென்று மெதுவாக உண்கிறார்கள். அவர்கள் வயிறு நிரம்பிய பிறகு உணவு உண்பதை நிறுத்த அவர்களுக்கு உடலில் இருந்து கொடுக்கப்படும் சிக்னலை அவர்கள் கவனிக்கிறார்கள். சாப்பிடுவதில் கவனம் செலுத்துவதால் அதிகப்படியான உணவு உண்பதை ஜப்பானியர்களால் தவிர்க்க முடிகிறது இதனால் அவர்களுடைய செரிமான மண்டலம் நன்கு செயல்படுகிறது உடல் எடையும் கட்டுக்குள் இருக்கிறது. 

46
japanese food in tamil

japanese food in tamil

புதிய உணவுகள்: 

ஜப்பானியர்களுடைய உணவு வழக்கத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மிகக் குறைந்த அளவிலேயே இடம்பெறுகின்றன. அவர்கள் புதியதாக சமைக்கும் உணவுகளை விரும்புகின்றனர். பிரிட்ஜில் வைக்காத தோட்டத்தில் பறிக்கப்பட்ட காய்கறிகள், கடற்பாசி உணவுகள், புளிக்க வைக்கப்பட்ட சோயா போன்றவற்றை அதிகம் உண்கிறார்கள். பெரும்பாலும் துரித உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை.

வீட்டில் தயார் செய்யப்பட்ட அல்லது உள்ளூர் உணவுகளை தான் பயன்படுத்துகிறார்கள். புளிக்க வைத்த உணவு, மெதுவாக சமைப்பது, கிரிலிங் போன்றவை அவர்களுடைய முக்கிய உணவு பழக்கங்கள்.  பதப்படுத்தப்பட்ட பழைய உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் சர்க்கரை, கெட்ட கொழுப்புகளை எடுத்து கொள்வது தவிர்க்கப்படுகிறது. புதிதாக தயாரித்த ஆரோக்கியமான உணவுகளையே உண்கிறார்கள். இதுவே ஆரோக்கியத்திற்கும், எடை மேலாண்மைக்கும் உதவுகிறது. 

56
What is the Japanese secret to long life in tamil

What is the Japanese secret to long life in tamil

சுறுசுறுப்பான வாழ்க்கை: 
   
ஜப்பானியர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்பவர்கள் அன்றாட வாழ்க்கையில் நடை பயிற்சி உடற்பயிற்சி உள்ளிட்ட ஏதேனும் ஒரு உடல் சார்ந்த செயல்பாடுகளை செய்பவர்களாக இருப்பார் இவை தவிர தோட்டக்கலை உள்ளிட்ட செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள் சுறுசுறுப்பான அவர்களுடைய வாழ்க்கை முறை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. தினசரி வாழ்க்கையில் உடற் செயல்பாடுகளை செய்வதால் உடல் எடையும் சீராக பராமரிக்கப்படுகிறது. 

ஆரோக்கிய பானங்கள்: 

ஜப்பானில் ஆரோக்கிய பானங்கள் குடிப்பது அவர்களுடைய வாழ்க்கை முறையில் தனி இடத்தை பிடித்துள்ளது. அந்த நாட்டில் கிரீன் டீ பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கேடசின்கள் உள்ளன. இவை   வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவக் கூடியவை. ஆரோக்கியமான உணவுகளுடன் கிரீன் டீயும் குடிப்பதால் உடல் எடையும் கணிசமாக குறையும்.  செயற்கை சர்க்கரை கலந்த பானங்களை அருந்துவதை விடவும் கிரீன் டீ அருந்துவதால் உடலின் செயல்பாடு பயன்படுகிறது. 

66
Japanese Healthy Lifestyle Habitse for Long Life in tamil

Japanese Healthy Lifestyle Habitse for Long Life in tamil

ஜப்பானியர்கள் இந்த பழக்கங்களை தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பின்பற்றி வருவதால் அவர்களுடைய உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதில்லை.  அவர்களுடைய ஆரோக்கியமான இந்த பழக்கங்கள் உதவியாக இருக்கின்றன.

இதையும் படிங்க:  இந்த ஜப்பானிய உணவுமுறை புற்றுநோய் செல் வளர்ச்சியை தடுக்கிறதாம்! ஆய்வில் தகவல்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Boiled Eggs: முட்டை ஓடு ஒட்டிக்கொண்டு வருதா? இதை பண்ணுங்க.. ஈசியா ஓட்டை எளிதாக உரிக்கலாம்
Recommended image2
பச்சை, மஞ்சள், பழுப்பு புள்ளிகள்: வாழைப்பழத்தின் நிறம் மாறும்போது சத்துக்களும் மாறுமா? எந்த நிறப் பழம் சிறந்தது?
Recommended image3
Happy Hormone Foods: மனசு சரியில்லையா? கவலை, மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றும் 7 உணவுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved