MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த '1' அறிகுறி வந்தா அலட்சியம் பண்ணக் கூடாது.. உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோய்!!  

இந்த '1' அறிகுறி வந்தா அலட்சியம் பண்ணக் கூடாது.. உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் நோய்!!  

Brain Tumor Symptoms : ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் பேருக்கு மேல் பாதிப்புக்குள்ளாகும் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நோய் குறித்து இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Dec 23 2024, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Headaches and brain tumors in tamil

Headaches and brain tumors in tamil

இன்றைய காலகட்டத்தில் தலைவலி பலருக்கு ஏற்பட்டு வருகிறது. இதற்கு மன அழுத்தம் சரியான நேரத்திற்கு சாப்பிடாதது உடலில் நீர் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் அடிக்கடி தலைவலி, காய்ச்சல் ஏற்படுவது நம் உடலில் மிகப்பெரிய பாதிப்பு இருப்பதன் அறிகுறி என்பதை பலர் அறிவதில்லை. இதை தொடர்ச்சியாக அலட்சியம் செய்யும் சிலர் உயிரிழப்பு போன்ற ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த அறிகுறிகளை ஏற்படுத்தும் மூளைக் கட்டி நோய் ஆபத்து குறித்து மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். இந்நோயால் ஒவ்வொரு ஆண்டும் 2.5 லட்சம் பேருக்கு மேல் உயிரிழப்பு ஏற்படுகிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Headache warning signs in tamil

Headache warning signs in tamil

நான்காண்டுகளுக்கு முன்னர் மூளைக் கட்டி, புற்றுநோய் ஆகியவற்றால் 2.46 லட்சம் பேர் உயிரிழந்தனர்.  ஒருவருக்கு மூளையில் கட்டி வந்தால் அது குறித்து பல ஆண்டுகளுக்கு அவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றே  மருத்துவர்கள் கூறுகின்றனர். மூளையில் வரும் கட்டி ரொம்ப மெதுவாக தான் உருவாகும். இதனால் அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை. இந்த மாதிரியான நேரத்தில் உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் பொதுவான அறிகுறிகளுக்கு கவனம் கொடுக்க வேண்டும்.  அதில் முக்கியமான அறிகுறிதான் தலைவலியாகும். உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும்போது அதை அலட்சிய படுத்தாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். 

இதையும் படிங்க:  மொபைல் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமா? WHO ஆய்வில் புதிய தகவல்!

35
Brain Tumor Symptoms In Tamil

Brain Tumor Symptoms In Tamil

மூளைக் கட்டி குறித்த தகவல்கள்:  மூளையில் கட்டி வந்தாலோ அல்லது அதைச் சுற்றி காணப்படும் செல்களின் வளர்ச்சி கட்டுப்பாடற்று இருந்தாலோ அதை மூளைக் கட்டி என்கிறார்கள். இப்படி வருவது புற்றுநோய் அறிகுறியாகவும் இருக்கலாம். ஒரு ஆய்வில், மூளையில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட கட்டிகள் வரக்கூடும் என தெரியவந்துள்ளது. ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மூளைக் கட்டி ஏற்பட்டால் மற்றவர்களுக்கும் வரும் வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி இரசாயன தொழிலில் உள்ளவர்கள், பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கும் இந்த நோய் தாக்கும் ஆபத்து இருக்கிறது. 

இதையும் படிங்க:  அடிக்கடி தலைவலி மற்றும் உணர்வின்மை..இது மூளை கட்டியின் எச்சரிக்கை அறிகுறிகள்!
 

45
brain tumor in tamil

brain tumor in tamil

மூளைக் கட்டி இருப்பவர்களின் தலைவலியை எப்படி வித்தியாசப்படுத்தலாம்? 

மூளையில் கட்டி இருப்பவர்களுக்கு காலையில் தலைவலியும் அழுத்தமும் அதிகமாக இருக்கும். அது மட்டுமின்றி இவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். இது மாதிரி எந்த காரணங்களும் இன்றி அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். 

மற்ற அறிகுறிகள்:  

1). குமட்டல் உணர்வு அல்லது வாந்தி உணர்வு
2). மங்கிய பார்வை, இரட்டை பார்வை உள்ளிட்ட கண் சார்ந்த பிரச்சனைகள்
3). கைகள் அல்லது கால்களில் இயக்கம் இழக்கலாம் 
4). பேசுவதில் சிரமம் 
5). மறதி, நினைவாற்றல் பிரச்சினைகள் 
6). அடிக்கடி தலைசுற்றல் இருக்கும். இது இல்லாமல் உலகம் சுழலும் உணர்வு வரலாம். 

மூளைக் கட்டி நோயின் அறிகுறிகள் அந்தக் கட்டியின் அளவையும், அது காணப்படும் இடத்தையும் பொறுத்து மாறலாம். மூளைக் கட்டியின் வளர்ச்சிக்கு தகுந்தவாறு அறிகுறிகள் மாறலாம். தலைவலி என்பது ஆரம்ப கட்ட அறிகுறியாகும்.  

 

55
Brain tumor diagnosis in tamil

Brain tumor diagnosis in tamil

மூளைக் கட்டி வந்தாலே அதை புற்றுநோய் என சொல்லிவிட முடியாது. அந்த நோய் தீவிரமடைவதை பொறுத்து அந்த ஆபத்து மாறலாம்.  சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது நோய் தாக்கத்தை குறைக்கும். ஏற்கனவே முதியவராக இருந்தால், உடல் பருமன் அல்லது அதிக அளவில் ரசாயனங்களுடன் புழங்கியவராக இருந்தால் இந்நோய்க்கு அதிகம் கவனம் கொடுக்கவேண்டும். இந்த நோயை முன்கூட்டி கண்டறிவதால் விரைவில் குணப்படுத்தலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved