Cold problem solution: உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்குதா.? இனிமேல் இந்த கைவைத்தியங்களை பின்பற்றி பாருங்கள்..!
Cold problem solution in tamil: சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்கள் சில இயற்கை வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.
மழைக்காலம் வந்தாலே சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வருவது இயல்பான ஒன்றாகும். ஆனால், ஒரு சிலருக்கு வெயில் காலத்திலும் சளி, இருமல் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இதனால், சுவாச சிக்கல்களை ஏற்படுத்தும். இது போன்ற நேரத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஆனால், மருத்துவமனை போகாமல், மருந்து மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்த்து, சில இயற்கை வீட்டு வைத்திய முறைகளில் இவற்றில் சரி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தேன், இஞ்சி
தண்ணீரை சூடாக்கி 1 தேக்கரண்டி தேனை 1 தேக்கரண்டி இஞ்சி சாறுடன் சேர்த்து கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சிரப்பை ஒரு நாளைக்கு 3 முறை என தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி தொண்டை வலியால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. தேன் சளியை வெளியேற்ற உதவுகிறது.சளி இருமல் குறைய நிறைய தண்ணீர் குடியுங்கள்.
சளி இருமலைக் குறைக்கும் சுக்கு -எலுமிச்சை:
சளி, இருமல் பிரச்சனை நீங்க, கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் 1/4 மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேசை கரண்டி தேன் கலந்து பருகினால் நன்று.
சளி இருமல் குறைய நிறைய தண்ணீர் குடியுங்கள்:
உடலை நீரேற்றமாக இருப்பது சுவாச பாதையில் இருந்து சளியை வெளியேற்ற உதவுகிறது. நிறைய தண்ணீர் குடிப்பது தொண்டையில் உள்ள சளியை மெல்லியதாக மாற்ற உதவுகிறது. எனவே சளித் தொல்லை இருக்கும் சமயங்களில் வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது.
நீண்ட நாள் மார்புச் சளி நீங்க 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சீரகத்தை நன்கு பொடி செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டால் போதும். அதேபோன்று, பூண்டை உணவில் சேர்த்து சாப்பிட்டால், சளி, இருமல் இயற்கை வழியில் நீக்கும்.
புதினா தேநீர்:
புதினா தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், உடலில் உள்ள சளியை வெளியேற்ற உதவுகிறது.