- Home
- Lifestyle
- உங்கள் தலையில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா..? அப்படினா..! இந்த ஒருபொருள் ட்ரை பண்ணி பாருங்கள்..
உங்கள் தலையில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா..? அப்படினா..! இந்த ஒருபொருள் ட்ரை பண்ணி பாருங்கள்..
Hair loss tips in tamil: கோடைகாலத்தில் அதிகப்படியான சூரிய ஒளி மற்றும் வெப்பம் காரணமாக சருமம் மட்டுமின்றி கூந்தலுக்கும் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கோடைகாலத்தில் அதிகப்படியான வெயிலின் தாக்கத்தால் சருமத்திற்கும், உடலுக்கும் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் கூடவே பல்வேறு நோய்களையும் கொண்டு வரும். ஆண்டின் மற்ற பருவங்களை விட கோடை காலத்தில் ஒருவர் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் கொள்ள வேண்டியது அவசியம். அத்துடன், வெளியில் செல்லும் போது கடுமையான சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பம் காரணமாக சருமம் மட்டுமின்றி கூந்தலுக்கும் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.
ஆம், வெளியில் செல்லும் போது கடுமையான சூரிய ஒளி மற்றும் அதிக வெப்பம் காரணமாக, தலையில் வியர்வை அதிகரித்து, காற்றில் உள்ள அழுக்குகளும் முடியில் சேர்ந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக, சொறி, அரிப்பு அல்லது பிற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
இதனால் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சனை என்றால், கூந்தலில் துர்நாற்றம் வீசுவது. இதனால் நம்மால் தினமும் தலைக்கு குளிக்க முடியாது, வாசனை திரவியங்களும் அந்த அளவிற்கு பலன் தருவதில்லை. எனவே, உங்கள் பிரச்சனையை போக்க எளிமையான வீட்டு வைத்திய குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர்
உங்களுக்கு பொடுகு இருந்தால், தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன், இரண்டு தேக்கரண்டி வினிகரை 1 கப் தண்ணீரில் கலந்து உச்சந்தலையில் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் ஷாம்பு பயன்படுத்தி உங்கள் முடியை நன்கு அலசவும். இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு குறைந்து நன்கு வளரும்.
ஆப்பிள் சீடர் வினிகர் மூலம் முடியில் சேரும் கெட்ட பாக்டீரியாக்களை நீக்கிடலாம். மேலும், வாரத்திற்கு ஒரு முறையாவது இதைச் செய்யுங்கள். இதனால் தலையில் துர்நாற்றம் வீசும் பிரச்சனை முழுவதும் நீங்கிடும்.
எலுமிச்சை
வைட்டமின் சி அதிக அளவு கொண்டுள்ளது. இது தீய நுண்ணுயிரிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது, ஒவ்வாமைகளைச் சமாளிக்க உதவுகிறது. தலை முடியில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றும் ஆற்றலும் எலுமிச்சைக்கு உண்டு. இதற்கு ஒரு கிண்ணத்தில் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறு எடுக்கவும்.பிறகு இதை தலைக்கு குளிப்பதற்கு முன்பு தலைமுடியில் தடவவும். பிறகு, தலைமுடியை சாதாரண நீரில் கழுவவும். இதனால் கூந்தல் எந்தவித துர் நாற்றம் இல்லாமல் எப்போதும் ப்ரஷாக இருக்கும்.
வெங்காயச் சாறு மற்றும் எலுமிச்சை:
கூந்தலில் இருந்து வரும் துர்நாற்றத்தை நீக்க வெங்காய சாறு மற்றும் எலுமிச்சை சாறை பயன்படுத்த வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் மூன்று டீஸ்பூன் வெங்காயச் சாறு எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது இந்த கலவையை உச்சந்தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.
வெங்காயச் சாறுவின் பயன்கள்:
வெங்காயச் சாறு கூந்தலுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பொடுகு மற்றும் கூந்தலில் ஏற்படும் அரிப்பு பிரச்சனை நீங்குவதைத் தவிர, அது கூந்தலை வலிமையாக்கி வளர்ச்சியைத் தூண்டும். மேலும், அதனை தோல் மற்றும் கூந்தலில் தடவுவதைத் தவிர, வெங்காய சாறு தொடர்ந்து குடிப்பது முடி உதிர்தல், வீக்கம் மற்றும் முகப்பரு போன்ற தோல் பிரச்சனைகளுக்குப் பல்வேறு பலன்களை தருகிறது.