- Home
- Lifestyle
- Sholayar Dam: தமிழகத்திலேயே மிக உயரமான சோலையாறு அணையின்..! வியக்கவைக்கும் சில சுவாரஸ்யமான தகவல்..
Sholayar Dam: தமிழகத்திலேயே மிக உயரமான சோலையாறு அணையின்..! வியக்கவைக்கும் சில சுவாரஸ்யமான தகவல்..
Sholayar Dam: தமிழகத்திலேயே மிக உயரமான சோலையாறு அணையின்...வியக்கவைக்கும் சில சுவாரஸ்யமான தகவல் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

Sholayar Dam:
சோலையாறு அணை கோவை மாவட்டத்தின் ஆணை மலையில் உள்ள மலை வாசஸ்தலமான வால்பாறையில் இருந்து 20 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இது ஆசியாவிலேயே இரண்டாவது ஆழமான அணை ஆகும். இதன் மொத்த கொள்ளவு 160 அடி ஆகும். சோலையாறு அணை பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக உள்ளது. இந்த நீர் தேக்கத்தில் உள்ள உபரி நீர் பரம்பிக்குளம் நீர் தேக்கத்தை சென்று அடைகிறது.
Sholayar Dam:
1965ம் ஆண்டு சோலையாறு அணை திறக்கப்பட்டது. இதன் உயரம் 66 மீ ஆகும். சோலையாறு அணை நீளம் 6 முதல் 7 கி.மீ நீளம் கொண்டது. சோலையின் மொத்த கொள்ளவு 150.20 மில்லியன் கன மீட்டர் ஆகும்.பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணைகளாக சோலையாறு அணை, கீழ்நீரார் அணை, மேல்நீரார் அணை உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணி 1961-ல் தொடங்கி, 1971-ல் முடிக்கப்பட்டது. இந்த சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி 72 சதுர கிலோமீட்டர், நீரார் அணை 39 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.
Sholayar Dam:
இது போல் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் பெய்யும் மழை நீர் ஆங்காங்கே உள்ள ஆறுகள் வழியாக சோலையாறு அணையை சென்றடைகிறது.345 அடி உயரத்தில் சோலையாறு அணை இன்றும் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது. இங்கு சோலைக் காடுகள் அதிகம் உள்ளதாலும், அதன் மத்தியில் கட்டப்பட்டதாலும் இந்த அணைக்கு அதே பெயரை வைத்திருக்கிறார்கள். மேல்நீரார் அணைக்கு வரும் தண்ணீரை சுரங்க கால்வாய் வழியாக சோலையாறு அணைக்கு அனுப்பும் வசதி உள்ளது.
Sholayar Dam:
தமிழகத்தில் உள்ள அணைகளில் உயரமான அணை சோலையாறு அணையாகும். இதன் உயரம் 345 அடி. நீர்மட்டம் 160 அடி. தமிழகத்தில் உள்ள பெரிய அணைகளில் இந்த அணை ஒன்றாகும். இங்கு சோலைக் காடுகள் நிறைந்த அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சுனைகள், சிற்றோடைகள், நீர் ஊற்றுகள், சிற்றாறுகள் இணைந்து கட்டமலை என்ற இடத்தில் நீராறு என்ற ஆற்றை உருவாக்குகிறது.
Sholayar Dam:
சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. சுரங்கத்தில் இருந்து ராட்சத குழாய் மூலம் அதிக வேகத்தில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தி, மானாம்பள்ளி நீர் மின் நிலையத்தில் 77 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் உற்பத்திக்குப் பின்னர் வெளியேற்றப்படும் தண்ணீர், பரம்பிக்குளம் அணைக்குச் செல்கிறது. கிட்டத்தட்ட சுற்றுலாத் தளம் போலத் தான் பார்க்கப் படுகிறது. எங்கிருந்தெல்லாமோ சுற்றுலாவாசிகள் வந்து இந்த அணையைப் பார்த்துப் போவது வால்பாறை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.