MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • “அமைதியாக இரு” என்று சொல்வது உதவாது.. உங்கள் குழந்தையின் பதட்டத்தை குறைக்க உதவும் டிப்ஸ் இதோ..

“அமைதியாக இரு” என்று சொல்வது உதவாது.. உங்கள் குழந்தையின் பதட்டத்தை குறைக்க உதவும் டிப்ஸ் இதோ..

உங்கள் குழந்தையின் பதட்டத்தை குறைக்க உதவும் டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Oct 23 2023, 05:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

உங்கள் குழந்தை சில சமயங்களில் கவலைப்படுவது அல்லது பதட்டமாக இருப்பது முற்றிலும் இயற்கையானது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அவர்கள் உதவிக்காக உங்களிடம் வரலாம். அப்போது அவர்கள் பீதி அடைய கூடாது என்று நீங்கள் விரும்புவீர்கள். ஆனால் நீங்கள் அதை எப்படி செய்வது? இதுபோன்ற சூழலில் பெற்றோர்கள் குழந்தையை "அமைதியாக இரு" கூறுவார்கள். இருப்பினும், இது உங்கள் குழந்தைக்கு பதட்டத்தை மேலும் மோசமாக்கும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

எனவே உங்கள் பிள்ளையிடம் "அமைதியாக இருங்கள்" என்று கூறுவதற்குப் பதிலாக, அவர்களின் உணர்ச்சிகளை சிறப்பாக நிர்வகிக்க உதவும் அர்த்தமுள்ள செயல்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள். மேலும், பதட்டத்தை எவ்வாறு சமாளிப்பது என்பதிலிருந்து உங்கள் குழந்தைகளும் நிறைய கற்றுக்கொள்கிறார்கள். எனவே, வார்த்தைகளை விட செயல்கள் தெளிவாக வேலை செய்கின்றன. அவர்கள் பீதியடையும்போது அவர்களுக்கு உதவும் நுட்பங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

36

உங்கள் பிள்ளை பீதியடைந்து பதட்டமாக இருக்கும் போது அவர்களின் கண்களை பார்த்து, முழு அன்புடன், ஆழ்ந்த மூச்சை எடுக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள் - மூக்கின் வழியாக உள்ளிழுத்து வாய் வழியாக வெளிவிடவும். பதட்டத்தை நிர்வகிக்க உதவும் வேறு சில மூச்சுப்பயிற்சி முறையையும் கற்றுக்கொடுக்கலாம்.

 

46
ഒപ്പമുണ്ടാകല്‍

ഒപ്പമുണ്ടാകല്‍

"அமைதியாக இரு" என்று சொல்வது உங்கள் குழந்தையின் உணர்ச்சிகளை உறுதிப்படுத்தாது. அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவற்றைச் சிறப்பாக நிர்வகிக்க இது உதவாது. மாறாக, அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய பெற்றோரின் கட்டளையைப் போல் உணரலாம். அவர்களின் உணர்வுகளை சரியாகப் பேசுவதற்குப் பதிலாக, நீங்கள் அவர்களை நிராகரிக்கிறீர்கள் என்று அவர்கள் உணரலாம்.

உங்கள் குழந்தை உங்களை விட்டு தூரமாக செல்கிறதா? உங்கள் அன்பான பந்தத்தை மீட்டெடுக்க உதவும் டிப்ஸ் இதோ..
 

56

சில சமயங்களில் உங்கள் குழந்தை பள்ளியில் முதல் நாள் அல்லது மேடையில் நடனம் ஆடுவதற்கு முன் கவலைப்படலாம். இது அவர்களின் வாழ்க்கையில் சில பெரிய தருணங்கள் ஆகும். இதனால், அவர்கள் கவலைப்படுகிறார்கள், இதுதான் பதட்டமாக மாறுகிறது.  அப்போது அவர்களிடம் நீ பதட்டமாக இருக்கிறாய் என்பது எனக்கு தெரியும். என்று கூறுவதற்குப் பதிலாக "நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும் என்று நீங்கள் கூறலாம். இதன் மூலம் உங்கள் குழந்தையின் பதட்டத்தை உற்சாகமாக மாற்றலாம்.

 

66

ஒரு ஆரோக்கியமான பெற்றோரின் குறிக்கோள், கவலையை அகற்றுவது அல்ல, ஆனால் அதை நிர்வகிக்க உங்கள் பிள்ளைக்கு உதவுவது. கடினமான விஷயங்கள் அல்லது சூழ்நிலைகள் உங்கள் குழந்தையை கவலையடையச் செய்கின்றன என்பதற்காக அவற்றைத் தவிர்க்காதீர்கள். நேர்மறையான ஆனால் யதார்த்தமான எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துங்கள். குழந்தையிடம் அதிக கேள்விகளைக் கேட்பதைத் தவிர்த்து உங்கள் குழந்தையின் அச்சத்தை வலுப்படுத்த வேண்டாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பெற்றோர் ஆலோசனை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved