வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க உதவும் எளிய டிப்ஸ் இதோ..
வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதற்கான சில எளிய குறிப்புகளை பார்க்கலாம்.
நேர்மறை ஆற்றல் மற்றும் நல்லிணக்கம் ஒரு வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்த்து கொடுக்கிறது. அதிர்ஷ்டத்திற்கு உத்தரவாதம் இல்லை என்றாலும், பின்வரும் நடைமுறைகள் வீட்டில் மகிழ்ச்சியான உணர்வுகளை ஏற்படுத்தும்.
பயன்படுத்தாத தேவையற்ற பொருட்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டுவரலாம். எனவே துணிகளை மடித்து வைப்பது, அந்தந்த பொருட்களை அந்த இடத்தில் வைப்பதுடன் வீட்டை சுத்தமாக வைப்பதும் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அனுமதிக்கிறது.
ஒரு இடத்தில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை ஒத்திசைப்பதில் கவனம் செலுத்தும் பண்டைய சீனக் கலையான ஃபெங் சுய்யின் சில பொருட்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் வீட்டில் அமைதி, நல்லிணக்கம் நிலைக்கும்.
உட்புற செட்டில் உங்கள் வீட்டிற்கு அழகு சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், காற்றைச் சுத்திகரித்து, நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதாகவும் நம்பப்படுகிறது.
சூரிய ஒளி நேர்மறை மற்றும் வளர்ச்சியின் சின்னமாகும். பகலில் சூரிய ஒளி வீட்டிற்குள் வரும் படி செய்யலாம். சில நிறங்கள் வெவ்வேறு ஆற்றல்களுடன் தொடர்புடையவை. மஞ்சள், பச்சை மற்றும் மென்மையான நீலம் போன்ற வண்ணங்கள் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கலாம்.
உங்கள் அணுகுமுறை மற்றும் உணர்ச்சிகள் உங்கள் வீட்டின் ஆற்றலை பாதிக்கலாம். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள், நன்றியை வெளிப்படுத்துங்கள், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் அன்பான சூழ்நிலையை உருவாக்குங்கள்.