Potassium Food: இதயம் காக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் அவசியம்...மிஸ் பண்ணீடாதீங்கோ..பாதிப்பு ஏற்படும்..?
Potassium Food: இதய துடிப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஒருவருக்கு பொட்டாசியம் நிறைந்த உணவுகள் அவசியம்..அவை என்னென்னெ உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..
இதய தசைகளின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது பொட்டாசியம் ஆகும். ஒருவருக்கு பொட்டாசியம் குறைபாடு ஏற்பாட்டில், பல்வேறு நோய்கள் வரும். குறிப்பாக, இதயத்துடிப்பு சீரற்று படபடப்பு ஏற்படும். தூக்கமின்மை, குழப்பமான மனநிலை ஏற்படவும் இதுவே காரணம். இது தாகத்தை அதிகரித்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து தலை சுற்றல் ஏற்படும். இதனை சரி செய்வதற்கு ஒருவருக்கு பொட்டாசியம் நிறைந்த உணவுகள் அவசியம்..அவை என்னென்னெ உணவுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்..
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் 422 மி.கி பொட்டாசியம் சத்துக்கள் உள்ளது. இது இதய துடிப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மேலும், செரிமானம் தொடர்பான பிரச்சனை, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த தேர்வாக இருக்கும்.
coconut water
இளநீர்:
உடல் நீரேற்றமாக இருக்க பொட்டாசியம் நிறைந்த தேங்காய் நீரை குடிப்பது ஒரு சிறந்த வழியாகும். சுமார் 240 மிலி தேங்காய் நீரில் 600 மி.கி பொட்டாசியம் உள்ளது. மேலும், இதில் பொட்டாசியம் மட்டுமின்றி மெக்னீசியம், கால்சியம், சோடியம் மற்றும் மாங்கனீசு நிறைந்துள்ளது. இவை எலக்ட்ரோலைட்டின் அளவை சமப்படுத்த உதவுகிறது, மற்றும் உடல் எடையை குறைத்து இதயம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்கிறது.
கீரை:
கீரையில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் இதய பாதிப்பை கட்டுப்படுத்த உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவு பொருளாகும். மேலும், கீரையில் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, மக்னீசியம் உள்ளிட்ட தாது சத்துக்கள், வைட்டமின்கள் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது உடலின் பாகங்கள் புத்துணர்ச்சியுடன் செயலாற்ற உதவுகிறது.
அதேபோன்று, சால்மன் மீனில் இருந்து பொட்டாசியம், புரதம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை உங்கள் இதயத்திற்கு நல்லது.
பால், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. ஒரு கப் பாலில் 375 மி.கி பொட்டாசியம் உள்ளது
மேலும், பட்டாணி, ஆரஞ்சு, முலாம்பழம், திராட்சை பழங்கள், உலர்ந்த திராட்சை பழங்கள், பேரீச்சம் பழம் போன்றவற்றிலும் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது.