MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சிறு தானியங்களை சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?

இந்த பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சிறு தானியங்களை சாப்பிடக்கூடாது? ஏன் தெரியுமா?

சிறுதானியங்கள் சத்தானவை மற்றும் பல நன்மைகளை கொண்டுள்ளன. இருப்பினும் இந்த பிரச்சனை உள்ளவர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும். சிறுதானியங்களை சரியான முறையில் சமைத்து, மிதமாக உட்கொள்வது முக்கியம்.

2 Min read
Author : Ramya s
Published : Oct 29 2024, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Who Should Avoid Eat Millets

Who Should Avoid Eat Millets

சிறு தானியங்கள் என்பது மிகவும் சத்தான மற்றும் பாரம்பரியமான உணவு வகையாகும். இவை நியாசின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. ஆரோக்கியமான தோல் மற்றும் உறுப்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின் உங்கள் உடல் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. சிறுதானியங்கள் செரிமானத்திற்கு மிகவும் எளிதானது. கலோரிகள் குறைவாக இருப்பதால், சத்தான தானியமானது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் எடை இழப்புக்கும் சிறந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Side Effects Of Millets

Side Effects Of Millets

இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது, வயதான எதிர்ப்பு ஊக்குவிக்கிறது மற்றும் ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. இருப்பினும், தினை அடிப்படையிலான உணவு அனைவருக்கும் இல்லை.

மேலும் சிறு தானியங்களில் இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை ஊட்டச்சத்துகளை உறிஞ்ச உதவுகிறது. எனினும் பிரதான உணவாக சிறுதானியங்களை எடுத்துக் கொள்ளும் போது, பல்வேறு தாதுக் குறைபாடுகளுக்கு பங்களிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே யாரெல்லாம் சிறுதானியங்கள் சாப்பிடக்கூடாது? அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன? என்று தற்போது பார்க்கலாம். 

தினமும் காலை 45 நிமிடம் சைக்கிள் ஓட்டுங்கள்; இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்கும்!!

35
Side Effects Of Millets

Side Effects Of Millets

சிறுதானியங்கள் சாப்பிடுவதை யார் தவிர்க்க வேண்டும்?

தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்

உங்களுக்கு ஹைப்பர் தைராய்டிசம் இருந்தால் நீங்கள் கட்டாயம் சிறு தானியங்களை எடுத்துக்கொள்ள கூடாது. ஆய்வுகளின்படி, தினைகளில் சி-கிளைகோசில்ஃப்லவோன்கள் உள்ளன மற்றும் கோயிட்ரோஜெனிக் மற்றும் ஆன்டிதைராய்டு விளைவுகளை உருவாக்குகின்றன. இவை அனைத்தும் கோளாறுகள் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்

சிறுதானியங்களில் டானின்கள் உள்ளன, இது கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற உடலில் உள்ள மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிக்கலை உருவாக்குகிறது. எனவே, ஊட்டச்சத்து எதிர்ப்பு விளைவுகளை குறைக்கவும், உறிஞ்சுதலை அதிகரிக்கவும். நீங்கள் சமைக்கும் முன் தானியங்களை ஊறவைக்க வேண்டும்.

45
Side Effects Of Millets

Side Effects Of Millets

செரிமான பிரச்சனை உள்ளவர்கள்

பலவீனமான செரிமானம் உள்ளவர்கள் கட்டாயம் சிறுதானியங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறு தானியத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது மற்றும் வயிற்று உப்புசம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

நீங்கள் அசௌகரியம் மற்றும் பிற இரைப்பை அறிகுறிகளை அனுபவிக்கலாம். இந்த சிக்கலை சமாளிக்க, நிறைய தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. சிறுதானியங்களை நன்றாக ஜீரணிக்க தண்ணீர் உதவுகிறது. அதிக செரிமானமாக்குவதற்கும், பொதுவான செரிமான பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கும் சிறுதானியங்களை ஊறவைத்தல், முளைத்தல் அல்லது புளிக்கவைக்க முயற்சி செய்யலாம்.

மீனோட சுவை அடிக்கடி சாப்பிட தூண்டும்.. ஆனா 'இந்த' நேரத்துல சாப்பிட்டா ஆபத்து மட்டும் தான்!!

55
Side Effects Of Millets

Side Effects Of Millets

சிறுதானியங்களின் பக்கவிளைவுகளைத் தவிர்க்க எளிய வழிகள்

சிறுதானியங்களை டிப்படியாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
அதிகப்படியான நுகர்வை தவிர்க்கவும்
சிறுதானியங்களை சமைக்க சரியான முறையை தெரிந்து கொள்ள வேண்டும். தவறான முறைகளைப் பயன்படுத்துவதால் பல வழக்கமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன
ஊறவைத்த அல்லது முளைத்த தினைகள் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்கிறது
சரியான செரிமானத்திற்கு நிறைய தண்ணீர் குடிக்கவும்
செரிமான பிரச்சனைகளை தவிர்க்க இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தினைகளை கலந்து சாப்பிடுவதை தவிர்க்கவும்
நல்ல தரத்தை உறுதி செய்வதற்காக புகழ்பெற்ற பிராண்டுகளின் சிறுதானியங்களை கவனித்து வாங்க வேண்டியது அவசியம். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved