சொன்னா நம்பமாட்டீங்க! ரம் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
மது உடல்நலத்திற்கு கெடு என்றாலும் ரம் தினமும் சிறியதளவு எடுத்துக்கொண்டால் இதய நோய் மற்றும் பக்கவாத அபாயத்தையும் குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.
கரும்புச்சாற்றின் துணைப்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு மதுபானம் தான் ரம், இது முதலில் கரீபியன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது.
தவறாமல் மது அருந்துவது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இருப்பினும், சிறிதளவு ரம் பல நன்மைகளை கொண்டுள்ளது. அவற்றைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
தவறாமல் குறைந்த அளவு மது அருந்துவதால் பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பக்கவாதம் புற்றுநோய்களுக்கு எதிராக போடுவதாக கூறப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், மிதமான மது அருந்துதல் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ரம் மூளையை பக்கவாதத்தின் விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இரவு உணவிற்குப் பிறகு சிறிதளவு ரம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
மன அழுத்தத்தைப் போக்கவும் ரம் உதவுகிறது. மனச்சோர்வைப் போக்க இந்த திரவம் மிகவும் உதவியாக இருக்கும். இது தவிர, இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கவும் ரம் உதவுகிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ரம் மிகவும் உதவுகிறது. குறைந்த அளவு ரம் குடிப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.