Wood Apple: விளாம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? மிஸ் பண்ணாம தெரிஞ்சு வச்சுக்கோங்கோ..
Wood Apple: விளாம்பழம் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது.
wood apple
விளாம்பழம் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அதனால், அனைவருமே பழங்களை தவறாமல் சாப்பிடுவர். அப்படி உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் பழங்களில் முக்கியமான ஒரு பழம் விளாம்பழம். ஓடுபோல இருக்கும் இதன் மேல் பகுதியை உடைத்துதான், உள்ளிருக்கும் சதைப் பகுதியை சாப்பிட முடியும். மற்ற பழங்களைவிட கொஞ்சம் வித்தியாசமாக காட்சி தரும் இந்த விளாம்பழத்தில் ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன.
wood apple
விளாம்பழம் சாப்பிடுவதால் உண்டாகும் பலன்கள்:
விளாம்பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுகிறது. தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர் செய்கிறது. ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெறவும் செய்கிறது. விளாம்பழத்தை அரைத்து முகத்தில் பூசி வர, வெயில் காலத்தில் இழந்த பொலிவு மீண்டும் வரும்.
wood apple
விளாம்பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:
விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் சத்து அதிகமாக எலும்பு மற்றும் பற்களை வலுடையச் செய்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின்ஏ உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன. பழம் மட்டுமின்றி, அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது.
wood apple
எப்படி சாப்பிடலாம்..?
இதன் காய், பழம், மரப்பட்டை, இலை ஆகியவற்றை பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். வெல்லத்துடன் பிசைந்து உண்ணலாம். இந்தப் பழங்களானது ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம்வரை கிடைக்கும்.
இந்த பழம் தயிருடன் சேர்த்து பச்சடிபோல் சாப்பிடலாம். பனங்கற்கண்டுடன் சேர்த்தும் சுவைக்கலாம். கடினமான தோல் பகுதியுடன் பந்து போல விளாம்பழம் காட்சியளிக்கும்.