- Home
- Lifestyle
- Black Rice benefit: சாதராண அரிசியை விட, கருப்பு அரிசி தான் ஆரோக்கியத்தில் நம்பர் 1 ...என்ன காரணம் தெரியுமா..?
Black Rice benefit: சாதராண அரிசியை விட, கருப்பு அரிசி தான் ஆரோக்கியத்தில் நம்பர் 1 ...என்ன காரணம் தெரியுமா..?
Black Rice benefit: சாதராண வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, நமது பாரம்பரிய உணவுகளில் ஒன்றான கருப்பு கவுனி அரிசியில் ஆரோக்கியத்திற்கு அவசியமான புரதச்சத்து அதிக அளவில் இருக்கிறது.

Black Rice benefit:
வெள்ளை அரிசி உண்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே, சமீப காலமாக, கருப்பு கவுனி அரிசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நமது பாரம்பரிய அரிசி வகையில் கருப்பு அரிசி முக்கியமானது. இது பல ஆண்டுகளாக முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
Black Rice benefit:
இந்த அரிசி நம்முடைய உடல்நலத்திற்கு எந்த தீங்கும் இல்லாமல் நன்மையை விளைவிக்கக் கூடியவை ஆகும். கருப்பு கவுனி அரிசியில் மற்ற அரிசியை விட அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற சக்தியையும் கொண்டிருக்கிறது. இந்த அரிய வகை கருப்பு அரிசியின்ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.
Black Rice benefit:
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்:
கருப்பு கவுனி அரிசியில் காணப்படும் ‘ஃபீனாலிக்’ என்ற கலவைகளில் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்துள்ளது. இது உடலில் உண்டாகும் கல்லீரலில் உண்டாகும் கழிவுகளை நீக்கி உடல் எடையை பராமரிக்கிறது. எனவே, கருப்பு கவுனி அரிசியை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
Black Rice benefit:
இதய ஆரோக்கியம்:
கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, இதனால், கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால், இதய ஆரோக்கியம் மலசிக்கல், குடல் வீக்கம், வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. எனவே, தினமும் ஒரு வேளை கருப்பு கவுனி அரிசியை உட்கொள்ளவது அவசியம் ஆகும்.
Black Rice benefit:
நீரழிவு நோய்:
புரதம் , நார்ச்சத்து மற்றும் இரும்பு ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக இவை இருப்பதுடன், கருப்பு அரிசியில் பல ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை டைப் 2 நீரழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
Black Rice benefit:
புற்றுநோய்:
கருப்பு அரிசியில் உள்ள ஆந்தொசயின்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கின்றன.மேலும், கண் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இரண்டு வகையான கரோட்டினாய்டுகள் இதில் உள்ளது. எனவே, கருப்பு அரிசியில், இட்லி, பொங்கல், சாதம் போன்றவை செய்து உண்ணலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.