Head Lice : தலையில் பேன் தொல்லையா? வீட்டிலேயே ஈஸியாக சமாளிக்கலாம்!
Head Lice : தலையில் பேன் தொல்லையா? பேன் எப்படி பரவுகிறது? பேன் தொல்லையை சமாளிக்க உதவும் வழிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

தலையில் பேன் தொல்லையா?
பேன் கடிக்குது அம்மா! என்று குழந்தைகள் அடிக்கடி தலையைச் சொறிந்துகொண்டே இருந்தால், அம்மாக்களுக்கு அதுவே பெரிய தலைவலியாகிவிடும். ஒருமுறை தலைமுடியில் பேன் வந்துவிட்டால், அரிப்பு, எரிச்சல் மட்டுமின்றி, முடியில் ஒட்டிக்கொள்ளும் பேன் முட்டைகளும் அடுத்தடுத்து பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதுமட்டுமல்லாமல், பேன் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவக்கூடியது என்பதால், வீட்டில் ஒருவருக்கு பேன் இருப்பது தெரிந்தாலே, மற்றவர்கள் அருகில் வருவதற்குக்கூட தயங்குவார்கள்.
ஆனால், இனி பேன் தொல்லைக்காக கவலைப்பட வேண்டாம். வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி பேனை கட்டுப்படுத்தும் சில எளிய வழிகள் உள்ளன. அவை என்னென்ன? எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
தலையில் பேன் ஏன் வருகிறது?
தலையில் பேன் இருப்பது சுத்தமின்மையால் மட்டுமே ஏற்படுகிறது என்று நினைப்பது தவறு. பேன் என்பது தலையின் தோலில் வாழ்ந்து, மனித ரத்தத்தை உணவாக எடுத்துக்கொள்ளும் சிறிய ஒட்டுண்ணி. பொதுவாக, பேன் உள்ள ஒருவருடன் தலைக்கு தலை நேரடியாகத் தொடர்பு கொள்வதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவுகிறது.
மேலும், பேன் உள்ளவர்கள் பயன்படுத்திய சீப்பு, ஹேர் பிரஷ், துண்டு, தொப்பி, தலையணை போன்ற தனிப்பட்ட பொருட்களைப் பகிர்ந்து கொள்வதாலும் பரவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குழந்தைகள் ஒன்றாக விளையாடும்போது அல்லது நெருக்கமாக இருக்கும்போது தலை முடி தொடர்பு ஏற்படுவதால் பேன் எளிதில் பரவலாம்.
படிகாரம் – திரிபலா தண்ணீர் பயன்படுத்தும் முறை
தேவையான பொருட்கள்
படிகாரம் - சிறிய துண்டு / சிறிதளவு பொடி
திரிபலா சூரணம் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
பயன்படுத்தும் முறை
- முதலில் தேவையான அளவு படிகாரத்தை எடுத்து, மிக்சியில் போட்டு நன்றாகப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் தேவையான அளவு திரிபலா சூரணத்தைச் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலந்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.
- திரிபலா என்பது கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்று காய்களின் கலவை.
பேன்கள் கீழே உதிர்ந்து விடும்
- தயாரித்த கலவையை தலைமுடியின் வேர்ப்பகுதியில் மெதுவாகத் தடவி, 10-15 நிமிடங்கள் ஊறவிடவும்.
- பின்னர் வழக்கம்போல் சாதாரண தண்ணீரில் தலைமுடியை நன்றாக அலசி சுத்தம் செய்யவும்.
- இவ்வாறு செய்வதால், குளிக்கும்போது தலைமுடியில் இருக்கும் பேன்கள் கீழே உதிர்ந்து விடும் என்று கூறப்படுகிறது.
முக்கிய குறிப்பு
குறிப்பு: படிகாரம் அல்லது திரிபலா கலவை கண்களில் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எரிச்சல், சிவத்தல், அரிப்பு போன்ற பிரச்னை ஏற்பட்டால் உடனடியாகக் கழுவி பயன்படுத்துவதை நிறுத்தவும்.
குழந்தைகளின் தலையில் பயன்படுத்த வேண்டாம். மேலும், இடை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவர் அல்லது தகுதியான சுகாதார நிபுணரிடம் ஆலோசிப்பது பாதுகாப்பானது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

