MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • cooker whistle : குக்கரில் விசில் வரவே இல்லையே? பதறாதீங்க..முதலில் இதைச் செக் பண்ணுங்க!

cooker whistle : குக்கரில் விசில் வரவே இல்லையே? பதறாதீங்க..முதலில் இதைச் செக் பண்ணுங்க!

cooker whistle : குக்கரின் விசில் வராமல் இருக்கிறதா? வெண்ட் டியூப் அடைப்பு, கேஸ்கெட், தண்ணீர் அளவு, மூடி உள்ளிட்ட முக்கிய காரணங்கள் என்ன? பாதுகாப்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

4 Min read
Author : Vishnupriya
Published : Oct 03 2026, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
குக்கரில் விசில் வரலையா?
Image Credit : Pinterest

குக்கரில் விசில் வரலையா?

குக்கர் வைத்தாச்சு..நேரம் போய்க்கிட்டே இருக்கு..ஆனால் விசில் மட்டும் வரவே இல்லையா? வீட்டில் பருப்பு, சாதம் அல்லது காய்கறி வேக வைத்துவிட்டு, என்ன ஆச்சு இந்த குக்கருக்கு? என்று அடுப்புக்கு அருகில் நின்று பார்க்கும் நிலை பல இல்லத்தரசிகளுக்கு ஏற்படும்.

அடுப்பில் குக்கர் வைத்து சில நிமிடங்கள் ஆனாலும் விசில் சத்தம் கேட்கவில்லை என்றால், என்னாச்சு? உணவு வேகுமா, குக்கர் பழுதா, கேஸ் வீணாகிறதா என்ற குழப்பமும் வரும். சாதம், பருப்பு, காய்கறி என எதை சமைத்தாலும் சரியான நேரத்தில் விசில் வருவது முக்கியம்.

ஆனால் குக்கரில் விசில் வராமல் இருப்பதற்கு சில சிறிய காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன? எப்போது குக்கரை அணைக்க வேண்டும்? விசில் வரவில்லை என்றால் எந்தெந்த பகுதிகளைச் சரிபார்க்க வேண்டும்? என்பதை தெரிந்துகொண்டால், சமையல் நேரத்தில் தேவையற்ற பதற்றத்தையும் சிரமத்தையும் தவிர்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
குக்கரில் விசில் ஏன் வராமல் போகிறது?
Image Credit : Pinterest

குக்கரில் விசில் ஏன் வராமல் போகிறது?

குக்கரின் மேலே விசில் பொருத்தப்படும் வெண்ட் டியூப் (Pressure Cooker Vent Tube) பகுதியில் உணவுத் துகள், பருப்பு, அரிசி அல்லது மசாலா துகள்கள் சிக்கியிருந்தால், நீராவி சரியாக வெளியேற முடியாமல் போகலாம். இதனால் குக்கருக்குள் அழுத்தம் உருவாகும் விதம் பாதிக்கப்பட்டு, விசில் வருவதில் தாமதம் அல்லது சிக்கல் ஏற்படலாம்.

எனவே குக்கரை பயன்படுத்திய பிறகு, வெண்ட் டியூப் மற்றும் விசில் பகுதியை நன்றாக சுத்தம் செய்வது அவசியம்.

முக்கிய பாதுகாப்பு: குக்கர் சூடாக இருக்கும்போது வெண்ட் டியூப்பை குச்சி, ஊசி போன்றவற்றால் குத்தி சுத்தம் செய்ய முயற்சிக்க வேண்டாம். அடுப்பு அணைக்கப்பட்டு, குக்கரில் அழுத்தம் முழுமையாக குறைந்து குளிர்ந்த பிறகே அந்தப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.

310
ரப்பர் கேஸ்கெட் பழையதாகிவிட்டதா?
Image Credit : Pinterest

ரப்பர் கேஸ்கெட் பழையதாகிவிட்டதா?

குக்கர் வைத்தாச்சு, ஆனால் மூடியின் ஓரத்தில் “ஷ்..ஷ்” என தொடர்ந்து நீராவி வெளியேறுகிறதா? அப்படியென்றால், குக்கரின் கேஸ்கெட்டை ஒரு முறை கவனியுங்கள். குக்கரின் மூடியைச் சுற்றி பொருத்தப்பட்டிருக்கும் ரப்பர் வளையம்தான் கேஸ்கெட். இது மூடியை இறுக்கமாகச் சீல் செய்து, குக்கருக்குள் உருவாகும் நீராவி வெளியேறாமல் அழுத்தம் உருவாக உதவுகிறது.

பழைய கேஸ்கெட் கடினமாகிவிட்டாலோ, விரிசல் ஏற்பட்டாலோ அல்லது சரியாக அமராமல் இருந்தாலோ நீராவி வெளியேறி, குக்கருக்குள் தேவையான அழுத்தம் உருவாகாமல் விசில் வருவதில் தாமதம் அல்லது சிக்கல் ஏற்படலாம்.

சமையல் தொடங்கியதும் மூடியின் ஓரத்தில் தொடர்ந்து நீராவி வெளியேறுவது தெரிந்தால், கேஸ்கெட்டை ஒருமுறை கவனமாகச் சரிபார்க்கலாம். பழையதாகவோ, சேதமடைந்ததாகவோ இருந்தால், சரியான கேஸ்கெட்டை மாற்றிப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

410
தண்ணீர் குறைவா? இதையும் முதலில் பாருங்க
Image Credit : Pinterest

தண்ணீர் குறைவா? இதையும் முதலில் பாருங்க

குக்கர் வைத்தாச்சு, ஆனால் விசில் மட்டும் வரவே இல்லையே என்று பதறுவதற்கு முன், குக்கரில் போதுமான தண்ணீர் இருக்கிறதா என்பதை ஒருமுறை கவனியுங்கள். குக்கரில் அழுத்தம் உருவாக நீராவி தேவைப்படுவதால், உணவின் அளவுக்கு ஏற்ற அளவு தண்ணீர் இல்லையென்றால் தேவையான நீராவியும், அழுத்தமும் உருவாகாமல் போகலாம்.

குறிப்பாக பருப்பு, சாதம் போன்றவற்றை சமைக்கும்போது தண்ணீர் அளவு சரியாக இருப்பது மிகவும் முக்கியம். எனவே விசில் வரவில்லை என்றால், குக்கரில் உணவுக்கு தேவையான தண்ணீர் அளவு சரியாக உள்ளதா என்பதை கவனிப்பது அவசியம்.

510
மூடி சரியாக மூடப்பட்டுள்ளதா?
Image Credit : Pinterest

மூடி சரியாக மூடப்பட்டுள்ளதா?

குக்கர் மூடி சரியாக மூடப்பட்டுள்ளதா என்பதை ஒருமுறை பாருங்கள். மூடி சரியாகப் பொருத்தப்படாமல் இருந்தால், நீராவி வெளியேறி, குக்கருக்குள் தேவையான அழுத்தம் உருவாகாமல் போகலாம்.

மூடியை அவசரமாகப் பொருத்தும்போது அது சரியான நிலையில் அமராமல் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் விசில் வருவதற்குப் பதிலாக மூடியின் ஓரத்தில் நீராவி கசியலாம். எனவே, குக்கரை அடுப்பில் வைப்பதற்கு முன்பே மூடி சரியாகப் பொருந்தியுள்ளதா, கேஸ்கெட் சரியான நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.

610
குக்கரை அளவுக்கு அதிகமாக நிரப்பிவிட்டீர்களா?
Image Credit : Pinterest

குக்கரை அளவுக்கு அதிகமாக நிரப்பிவிட்டீர்களா?

குக்கரில் உணவு அளவுக்கு அதிகமாக இருந்தாலும் விசில் வருவதில் சிக்கல் ஏற்படலாம். குக்கரை முழுமையாக நிரப்பிவிட்டால், நீராவி சுழல போதுமான இடம் இல்லாமல் போகும். அதுமட்டுமல்லாமல், பருப்பு, அரிசி போன்ற உணவுகள் வேகும்போது பொங்கி மேலே வந்து வென்ட் டியூப் பகுதியில் அடைப்பை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

பொதுவாக குக்கரை 2/3 அளவுக்கு மேல் நிரப்பாமல் இருப்பது வழக்கமான பாதுகாப்பு வழிகாட்டுதலாகும். அதனால், இன்னும் கொஞ்சம் போட்டுக்கலாம் என்று குக்கரை திணிக்காமல், உங்கள் குக்கர் பயன்படுத்தும் கையேட்டில் (manual) கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச நிரப்பும் அளவையே முறையாக பின்பற்றுங்கள்.

710
விசில் சரியாக பொருத்தப்படவில்லையா?
Image Credit : Pinterest

விசில் சரியாக பொருத்தப்படவில்லையா?

குக்கர் எல்லாம் சரியாகத்தான் இருக்கு. ஆனால் விசில் மட்டும் வரலையே என்றால், ஒரு முறை விசில் அல்லது pressure regulator பகுதியைச் சரிபாருங்கள். அது சரியாக அமராமல் இருந்தாலும் நீராவி அழுத்தம் சரியாக உருவாகாமல், விசில் செயல்படுவதில் சிக்கல் ஏற்படலாம்.

சில நேரங்களில் விசில் பகுதியில் உணவுத் துகள் அல்லது அழுக்கு படிந்திருந்தாலும் பிரச்சினை ஏற்படலாம். எனவே குக்கர் முழுமையாக ஆறிய பிறகு, விசில் பகுதியை சுத்தம் செய்து, உங்கள் குக்கர் மாடலுக்கான வழிமுறையில் கூறியபடி சரியான நிலையில் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.

விசில் சின்ன விஷயம்தான் என்று அலட்சியம் செய்யாதீர்கள். சரியாகப் பொருத்தியிருக்கிறீர்களா என்பதை ஒருமுறை பார்த்தாலே பிரச்சினைக்கான காரணம் தெரியலாம்.

810
முக்கியமான பாதுகாப்பு விஷயம்
Image Credit : Pinterest

முக்கியமான பாதுகாப்பு விஷயம்

விசில் வரவே இல்லையே என்னாச்சுனு பார்த்துவிடலாம் என்று அவசரப்பட்டு குக்கரை திறக்க முயற்சி செய்யாதீர்கள். விசில் வரவில்லை என்றாலும், குக்கருக்குள் அழுத்தம் இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த நிலையில் மூடியை வலுக்கட்டாயமாகத் திறப்பது மிகவும் ஆபத்தானது.

விசில் வரவில்லை என்றால் முதலில் அடுப்பை அணைத்து, குக்கர் அழுத்தம் முழுமையாக குறையும் வரை காத்திருக்க வேண்டும். மூடி எந்தவித அழுத்தமும் இல்லாமல் எளிதாகத் திறக்கும் நிலைக்கு வந்த பிறகே திறக்க வேண்டும்.

அதேபோல், குக்கர் சூடாக இருக்கும்போது விசில் அல்லது pressure regulator-ஐ கையால் அகற்ற முயற்சிக்காதீர்கள். திடீரென வெளியேறும் சூடான நீராவி கைகள் மற்றும் முகத்தில் தீக்காயத்தை ஏற்படுத்தக்கூடும்.

910
இல்லத்தரசிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது
Image Credit : Pinterest

இல்லத்தரசிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது

வென்ட் டியூப் அடைத்துள்ளதா?

கேஸ்கெட் சரியாக உள்ளதா?

மூடி சரியாக மூடப்பட்டுள்ளதா?

தேவையான அளவு தண்ணீர் உள்ளதா?

உணவு அளவுக்கு அதிகமாக உள்ளதா?

விசில் சரியாக பொருத்தப்பட்டுள்ளதா?

அடுப்பு வெப்பம் போதுமானதாக உள்ளதா?

1010
எல்லாம் சரியாக இருந்தும் விசில் வரவில்லையா?
Image Credit : Pinterest

எல்லாம் சரியாக இருந்தும் விசில் வரவில்லையா?

வென்ட் டியூப், கேஸ்கெட், மூடி, தண்ணீர் அளவு, விசில் என அனைத்தையும் சரிபார்த்தும் பிரச்சினை தொடர்ந்து இருக்கிறதா? அப்படியானால், குக்கரை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி சோதனை செய்ய வேண்டாம்.

உள்ளே அழுத்தம் சரியாக உருவாகாததற்கு வேறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருக்கலாம். எனவே குக்கரை தொடர்ந்து பயன்படுத்தாமல், அந்தந்த தயாரிப்பாளரின் வழிகாட்டுதலின்படி அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தை அணுகுவது பாதுகாப்பானது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toilet Cleaning Tips: டாய்லெட் கறைகளுக்கு எண்ட் கார்டு.. இந்த ஒரு பொருள் போதும்.. சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Jeans: சாயம் போகாமல், கிழிந்து போகாமல் ஜீன்ஸ் பல வருஷம் உழைக்கணுமா? இந்த டிரிக்ஸ் பாலோ பண்ணுங்க!
Recommended image3
ATM : மன்னர்கள் காலத்திலேயே ATM மாதிரி ஒரு வசதி இருந்ததா? ஆச்சரியமான வரலாறு!
Related Stories
Recommended image1
Cooker Tips: குக்கரில் எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்? விசிலில் தண்ணீர் வர காரணம் என்ன? பலரும் செய்யும் தவறு இதுதான்!
Recommended image2
Pressure Cooker Cleaning: கருகிய குக்கரை தூக்கி போடாதீங்க..! வீட்டில் இருக்கும் 4 பொருள் போதும்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved