- Home
- Lifestyle
- Sukran peyarchi 2022: சுக்கிரன், பூச நட்சத்திரத்தில் நுழைவு..இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம், முழு பலன் உண்டு!
Sukran peyarchi 2022: சுக்கிரன், பூச நட்சத்திரத்தில் நுழைவு..இந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம், முழு பலன் உண்டு!
Sukran peyarchi Palangal 2022: துலாம் ராசியின் பூச நட்சத்திரத்தில், அக்டோபர் 18 ஆம் தேதியன்று சுக்கிரன் சஞ்சரிக்கப் போகிறார். இந்த ராசி மாற்றம் யாருக்கு என்ன பலனை ஏற்படுத்தும் என்பதை பார்ப்போம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் சஞ்சாரம், மனிதர்களின் வாழ்வில் சுப மற்றும் அசுப தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆடம்ப வாழ்கை, புத்தி, பேச்சு, செல்வத்தின் காரணியான சுக்கிரன், அக்டோபர் 18 ஆம் தேதியன்று துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த ராசி மாற்றத்தின் பலன் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்.
அக்டோபர் 18 ஆம் தேதியன்று சூரியன் மற்றும் சுக்கிரன் இருவரும் துலாம் ராசியில் இணைவதால், பூச நட்சத்திரத்தின் அதிபதியான சனீஸ்வர பகவானின் அனுக்கிரகத்தைப் பெற்ற ராசிகளுக்கு தொழில், வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இக்காலம் சிறப்பான காலமாக இருக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் ஏற்படும். இந்த நேரத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் நல்ல செயல்திறன் இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட வலுவாக இருக்கும். வேலையில் கடின உழைப்பின் முழு பலன் கிடைக்கும். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும்.
உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். இந்த கிரகங்கள் அவர்களின் தொழிலில் பெரும் வெற்றியை தரும்.உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பளம் உயரும். வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
மீனம்:
மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் மாற்றம் நல்ல பலன்களைத் தரும்.
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். இதனால், மீன ராசியினருக்கு வேலையில் அனுகூலமான காலம் இது என்று சொல்லலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய ஆதாயம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும்.