இன்னும் 4 நாட்களில் மிதுனத்தில் செவ்வாய் பெயர்ச்சி..திடீர் பண மழையில் நனையப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?
Sevvai peyarchi 2022 Palangal: அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு செவ்வாய் கிரகம் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறது. இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தின் பார்வையில், கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதன்படி, செவ்வாய் பகவான் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி காலை 6.36 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு மாறுகிறார். இதையடுத்து, மிதுனம் ராசியில் செவ்வாய் கிரகம், 15 நாட்களுக்கு சீரான கதியில் இயங்குவார்.
அதன் பிறகு, அக்டோபர் 30 ஆம் தேதியன்று, செவ்வாய் கிரகம், எதிர் திசையில் நகர்வார். செவ்வாய் கிரகத்தின் இந்த இரண்டு பெயர்ச்சிகளும், அனைத்து ராசிகளையும் வெகுவாக பாதிக்கிறது. இதனால், குறிப்பட்ட ராசிகளுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும் அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.
மேஷம்:
அக்டோபர் 16ம் தேதி ஏற்படும் செவ்வாய்ப் பெயர்ச்சியால், உங்கள் சகிப்புத்தன்மை அதிகரிக்கும், தைரியமும் கூடும். உங்களுக்கு வாழ்வில் சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். எனவே, வாழ்க்கையின் பல முக்கியமான முடிவுகளை சரியான நேரத்தில், தெளிவாக எடுக்க முடியும். ஆனால், மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சாரம் செய்யும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை அதிகம் தேவை.
ரிஷபம்:
இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியில், உங்கள் குணத்தில் சற்று மாற்றம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். தொழில் செய்பவர்களுக்கும், வெளிநாட்டு தொடர்பு இருப்பவர்களுக்கும் இது சாதகமான காலமாக இருக்கும்.
துலாம்:
இந்த நேரத்தில் பிறருடன் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக உங்களின் வேலைத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றைச் செயல்படுத்துவதில் சிக்கல் இருந்தால், இப்போது அதைச் செய்வதற்கான வாய்ப்பு வரும். ஆனால், கடின உழைப்பும் விடா முயற்சியுடன் உழைக்க வேண்டும், இல்லாவிட்டால் கைக்கு வந்தது வாய்க்கு வராது.