- Home
- Lifestyle
- Fertility: கருத்தரிக்கும் வாய்ப்பை தடுக்கும் ஈறு நோய்! ஆண்களின் விந்தணுக்களையும் பாதிக்குமா? தம்பதியரே உஷார்!
Fertility: கருத்தரிக்கும் வாய்ப்பை தடுக்கும் ஈறு நோய்! ஆண்களின் விந்தணுக்களையும் பாதிக்குமா? தம்பதியரே உஷார்!
Couples: குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் தம்பதியர் உணவு, உடற்பயிற்சியில் காட்டும் அக்கறையை விட பல் சுகாதாரத்திலும் காட்ட வேண்டும். உங்கள் கருவுறுதல் திறனை பல் ஆரோக்கியம் எப்படி பாதிக்கிறது என்பதை பார்க்கலாம்.

பல் துலக்குவதற்கும் கருவுறுதலுக்கும் என்ன தொடர்பு?
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியர் சத்தான உணவு, மன அழுத்தத்தைக் குறைப்பது, சரியான தூக்கம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பலர் பல் ஆரோக்கியத்தை முற்றிலும் கண்டுகொள்வதில்லை. வாய்வழி சுகாதாரம் உங்கள் கருத்தரிக்கும் (Fertility) வாய்ப்பை பாதிக்கக்கூடும் என்கிறார் டாக்டர் சாந்த்வனா பயாசி. கர்ப்பத்திற்கு முன்பு பல் பரிசோதனை ஏன் முக்கியம் என்பதை பார்க்கலாம்.
வீக்கமும் கருவுறுதலும் (Inflammation vs Fertility)
பற்களைச் சரிவர சுத்தம் செய்யாவிட்டால், பாக்டீரியாக்கள் பெருகி ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கை உண்டாக்கும். உடலில் ஏற்படும் இந்த நாள்பட்ட வீக்கம் கருவுறுதல் திறனைப் பாதிக்கிறது. இது ஹார்மோன் சமநிலையைக் கெடுத்து, கருத்தரிக்கும் வாய்ப்பைக் முற்றிலுமாக குறைக்கிறது.
ஆண்களின் விந்தணு தரத்தில் பாதிப்பு
பல் ஆரோக்கியம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் முக்கியம். ஆய்வுகளின்படி, ஈறு நோயால் (Periodontal disease) பாதிக்கப்பட்ட ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கம், ஆரோக்கியமான ஆண்களை விடக் குறைவாக உள்ளது. எனவே, தந்தையாக விரும்புபவர்கள் பல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் மாற்றங்கள்
கர்ப்பமான பிறகு, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஈறுகள் மிகவும் சென்சிடிவ் ஆகின்றன. கருத்தரிப்பதற்கு முன்பே பல் பிரச்சினைகள் இருந்தால், கர்ப்ப காலத்தில் அவை இன்னும் தீவிரமடையலாம் என்று கூறப்படுகிறது.
முன்னெச்சரிக்கை ஏன் அவசியம்?
கர்ப்பிணியாக இருக்கும்போது பல் சிகிச்சை செய்வது சவாலானது. ஏனெனில், இந்த நேரத்தில் எக்ஸ்-ரே (X-ray) எடுப்பதோ அல்லது சில ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொள்வதோ குழந்தையின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். எனவே, குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் முன்பே சிகிச்சையை முடிப்பது நல்லது.
குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு 5 டிப்ஸ்
* ஃப்ளோரைடு உள்ள டூத்பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். காலையிலும், இரவு தூங்கும் முன்பும் அதாவது ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க மறக்காதீர்கள்.
* எப்போதும் சாஃப்ட் பிரஷ்ஷைப் பயன்படுத்துங்கள், பற்களை மிகவும் கடினமாகத் தேய்க்க வேண்டாம்.
* பற்களுக்கு இடையில் சிக்கிய உணவை அகற்ற, டூத்பிக்கிற்குப் பதிலாக 'ஃப்ளாஸ்' பயன்படுத்துங்கள். இது பாக்டீரியா பரவுவதைத் தடுக்கும்.
* பல் மற்றும் ஈறுகளின் வலிமைக்கு வைட்டமின் சி, பி, மற்றும் ஏ நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
* ஈறுகளில் இரத்தம் அல்லது துர்நாற்றம் வந்தால், குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடும் முன்பே பல் மருத்துவரை அணுகவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

