MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kshama Bindu Marriage: தனக்கு தானே தாலி கட்டி கொண்ட இளம்பெண்...90ஸ் கிட்ஸ் கதறல்... என்ன நடந்தது தெரியுமா..?

Kshama Bindu Marriage: தனக்கு தானே தாலி கட்டி கொண்ட இளம்பெண்...90ஸ் கிட்ஸ் கதறல்... என்ன நடந்தது தெரியுமா..?

Kshama Bindu Marriage: குஜராத் மாநிலத்தை சேர்ந்த (24) வயதுடைய ஷாமா பிந்து என்ற இளம்பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது, இந்த செய்தி இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.

1 Min read
Author : Anija Kannan | Asianet News
Published : Jun 10 2022, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Kshama Bindu

Kshama Bindu

குஜராத் மாநிலம் பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து  (24 ). எம்.எஸ். பல்கலைக்கழகத்தில்  சமூகவியல் பட்டம் பெற்றுள்ள இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஆண்-பெண் என்ற திருமண பந்தத்தில் விருப்பமில்லாத ஷாமா பிந்து, தன்னை தானே திருமணம் செய்து வாழப் போவதாக அறிவித்தார். இதை ‘சோலோகமி’ என குறிப்பிடுகின்றனர். இந்த திருமணத்திற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

25
Kshama Bindu

Kshama Bindu

ஜூன் 11ஆம் தேதி கோவிலில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்த ஷாமா, முன் கூட்டியே தனக்கு தானே பாரம்பரிய முறையில் இன்று தாலி கொண்டார். இந்த திருமணத்தில், மெஹந்தி, இசைக்கச்சேரி, மேடை அலங்காரம், அழைப்பிதழ், மணப்பெண் உடை உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இந்த திருமண விழாவில் நெருங்கிய தோழிகள், உடன் பணியாற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். 

35
Kshama Bindu

Kshama Bindu

 இதன் மூலம், பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு நாட்டில் முதல் முறையாக குஜராத்தில் நடைபெற்றுள்ளது. பொதுவாக, வெளிநாடுகளில், ஏன் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டவர் என்ற செய்திகளை இணையத்தில் பார்த்து தெரிந்து கொண்டோம். ஆனால் அவை எங்கோ வெளிநாடுகளில் நடக்கின்றன. இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா என்று நினைத்திருக்கலாம். ஆனால், அது இந்தியாவிலும் அரங்கேற இருப்பது பலருக்கும் வியப்பை  ஏற்படுத்தியுள்ளது.

45
Kshama Bindu

Kshama Bindu

ஒரு புறம் வியப்பை ஏற்படுத்தினாலும், மறுபுறம் மணப்பெண் கிடைக்காமல் 90ஸ் கிட்ஸ் திண்டாடும் நிலையில், இந்த நிகழ்வு வெறுப்பேற்றுவதாக பலரும் புலம்புகின்றனர்.

55

இதுகுறித்து தெரிவித்த ஷாமா பிந்து, ‘சோலோகமி திருமணத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏராளமானவர்கள் தனக்கு ஆதரவு தந்து வாழ்த்துக்களை தெரிவித்ததற்கு நன்றி’ என தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. முன்னதாக, திருமணத்துக்கு பிறகு  ஷாமா பிந்து கோவாவுக்கு தேனிலவு செல்ல இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க ....Kshama Bindu: இந்தியாவில் முதல் முறை, தன்னை தானே திருமணம் செய்து கொண்ட இளம்பெண்...இதுல ஹனிமூன் வேறயா? ஆத்தாடி

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image3
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved