- Home
- Lifestyle
- Suriyan Peyarchi 2022: ஆகஸ்டில் நிகழும் சூரியனின் ராசி மாற்றம்..செல்வ செழிப்புடன் சிறப்பாக வாழப்போகும் ராசிகள்
Suriyan Peyarchi 2022: ஆகஸ்டில் நிகழும் சூரியனின் ராசி மாற்றம்..செல்வ செழிப்புடன் சிறப்பாக வாழப்போகும் ராசிகள்
Suriyan Peyarchi 2022 Palangal: சூரிய கிரகத்தின் மூன்றாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 17ல், 2022 தேதி அன்று நடக்கும். இதனால் எந்தெந்த ராசிகள் சிறப்பான பலன்களை அனுபவிக்க போகிறார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

suriyan peyarchi 2022
சூரியன் பெயர்ச்சி 2022
கிரகங்களின் ராஜாவான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார். கடந்த ஜூலை 16, 2022, இரவு 10.50 மணிக்கு தனது ராசியை மாற்றி சந்திரனின் கடக ராசியில் நுழைந்துள்ளார். தற்போது ஆடி மாதம் நடந்து கொண்டிருப்பதால், இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மாதத்தில் சூரிய பகவான் கடகத்தில் வீற்றிருப்பார். இதையடுத்து, சூரிய கிரகத்தின் மூன்றாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 17ல், 2022 தேதி அன்று நடக்கும். இதனால், குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டில் ஏற்படும் கிரக மாற்றம் பலன் தரும். இதனால், எந்தெந்த ராசிகளுக்கு செல்வம் பெருகும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
suriyan peyarchi 2022
ரிஷபம்:
ரிஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியால் நினைத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை மேம்ப்படும். கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு, இந்த நேரம் வரப்பிரசாதமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள்.
suriyan peyarchi 2022
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு திடீர் பண வரவு உண்டாகும். வேலை மற்றும் வணிகத் துறையில் முன்னேற்றம் இருக்கும்..வாழ்வில் புகழ் அதிகரித்து காணப்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சுமுக உறவு இருக்கும். உங்கள் கடின உழைப்பிற்கான முழு பலன் கிடைக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இந்த நேரத்தில், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் பெறலாம்.
suriyan peyarchi 2022
மிதுனம்:
மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு இது நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் முதலீடு செய்வது நன்மை தரும். எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். இதன் காரணமாக நிதி நிலை வலுவாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு போட்டி தேர்வுகளில் முன்னேற்றம் இருக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும்.திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.